விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று கொண்டிருக்கும் 2026 தேர்தலின் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் பெற்ற ஒரு தொகுதியாக மாறியுள்ளது. பல ஆண்டுகளாக இந்த தொகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் விஜயதரணி. இப்போது அதே தொகுதியின் மக்களுக்காக மேலும் வலுவான வளர்ச்சி பாதையை உருவாக்கும் நோக்கத்துடன் பாஜக வேட்பாளராக மீண்டும் மக்கள் முன் நிற்கிறார்.
மூன்று முறை தொடர்ந்து இந்த தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவம் விஜயதரணிக்கு உள்ளது. மக்கள் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து செயல்பட்ட அனுபவமும் அவருக்கு இருக்கிறது. அதனால் தான் இந்த தேர்தலில் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உருவாகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அதிக அளவில் கிடைத்துள்ளன. வீடு, சாலை, குடிநீர், பெண்கள் சுயநிறைவு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு போன்ற பல துறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் நேரடியாக விளவங்கோடு தொகுதியிலும் செயல்பட வேண்டும் என்ற உறுதியுடன் விஜயதரணி தேர்தல் களத்தில் செயல்பட்டு வருகிறார்.
மத்திய அரசின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே இந்த தொகுதியில் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும், இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும், பெண்களுக்கு சுய உதவி வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை அவர் வலியுறுத்தி வருகிறார். இதன் காரணமாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. மற்றொரு புறம் திமுக ஆட்சியில் இருந்தாலும் கூட , மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி ஏற்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.
குறிப்பாக அடிப்படை வசதிகள், சாலை வசதி, வேலை வாய்ப்பு போன்ற முக்கிய பிரச்சினைகள் இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை என்று மக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் கடந்த இடைத்தேர்தலில் கிடைத்த வாய்ப்பையும் திமுக கூட்டணி முழுமையாக பயன்படுத்தவில்லை என்ற கருத்தும் வாக்காளர்களிடையே பரவலாக பேசப்படுகிறது. இந்த நிலைமையில் மாற்றம் தேவை என்ற மனநிலை தற்போது வாக்காளர்களிடையே உருவாகியுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, இந்த முறை விளவங்கோடு தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் மக்கள் பெருமளவில் விஜயதரணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அனுபவம், நிர்வாக திறன், மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு ஆகியவை இந்த தேர்தலில் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன.
விளவங்கோடு தொகுதியின் முழுமையான வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும், பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், மத்திய மற்றும் மாநில வளர்ச்சி திட்டங்களை கொண்டு வரக்கூடிய வலுவான பிரதிநிதியாக விஜயதரணி இந்த தேர்தலில் முன்னிலை வகிக்கிறார் என்ற கருத்து வாக்காளர்களிடையே வலுப்பெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் நடைபெறும் தேர்தலில் விளவங்கோடு தொகுதி மக்கள் மத்தியில் பாஜக வேட்பாளராக களம் இறங்கியுள்ள விஜயதரணிக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் திமுக மீது மக்களுக்கு இறக்கும் அதிருப்தி, மற்றும் திமுக – காங்கிரஸ் இடையிலான உரசல் இவை அனைத்தும் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் டி.டி. பிரவீனை வீழ்த்தி பாஜக வேட்பாளர் விஜயதாரணி வெற்றி பெறுவார் என்கிறது கள நிலவரம்.

