மண்ணை கவ்வும் அமைச்சர் பெரியகருப்பன்… சம்பட்டி அடி கொடுக்க இருக்கும் திருப்பத்தூர் தொகுதி மக்கள்… வெற்றியை உறுதி செய்த திருமாறன் ஜி…

0
Follow on Google News

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த பெரியகருப்பன் , இரண்டு முறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். ஆனால் இவ்வளவு நீண்ட காலம் அதிகாரத்தில் இருந்தும், திருப்பத்தூர் தொகுதியில் எதிர்பார்த்த அளவிலான அடிப்படை வசதிகள் முழுமையாக மேம்படவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடையே தொடர்ந்து பெரியகருப்பனுக்கு எதிராக எதிரொலித்து வருகிறது.

குறிப்பாக கிராமப்புறங்களில் சாலை வசதி, குடிநீர் விநியோகம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகள், விவசாயிகளுக்கான நீர்ப்பாசன திட்டங்கள் போன்ற முக்கிய தேவைகள் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன என்ற மனநிலை தொகுதி முழுவதும் பரவலாக உள்ளது. “இருபது ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தோம்… ஆனால் மாற்றம் எங்கே?” என்ற கேள்வி இந்த முறை தேர்தலில் வாக்காளர்களிடையே அதிகமாக எழுகிறது.

இந்த சூழ்நிலையில், மாற்றத்தின் முகமாக பாஜக வேட்பாளர் திருமாறன் ஜி உருவெடுத்து வருகிறார். திருமாறன் ஜி தொகுதி முழுவதும் நேரடியாக கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை கேட்டு, அவற்றிற்கான தீர்வுகளை முன்வைத்து தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகிறார். இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகியோரிடம் இருந்து அவருக்கு அதிக ஆதரவு கிடைத்து வருகிறது .

மத்திய அரசின் நலத்திட்டங்களை முழுமையாக தொகுதிக்கு கொண்டு வருவது, புதிய குடிநீர் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவது, சாலை வசதிகளை மேம்படுத்துவது, இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு மையங்களை உருவாக்குவது போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முன்னிலைப்படுத்தி தாமரை சின்னத்தில் போட்டியிடும் திருமாறன் ஜி திருப்பத்தூர் வாக்காளர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறார்.

இதனால், இந்த முறை திருப்பத்தூர் தொகுதியில் மாற்றத்தை நோக்கிய வாக்காளர்களின் மனநிலை அதிகரித்து வருவதால், திருமாறன் ஜிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்ற கருத்து அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையிலும் பரவலாக பேசப்படுகிறது. நீண்ட காலமாக ஒரே தலைமையை தொடர்ந்து பார்த்த திருப்பத்தூர் தொகுதி மக்கள், இந்த முறை புதிய வளர்ச்சி பாதையை தேர்வு செய்யும் மனநிலையில் திருப்பத்தூர் மக்கள் உள்ளதை பார்க்க முடிகிறது.

குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் மத்தியில் மாற்றத்திற்கான ஆதரவு அதிகரித்து வருவது, பெண்கள் மத்தியில் புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது போன்ற காரணங்களால், இந்த முறை தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டி இருந்தாலும், முன்னிலை திருமாறன் ஜி பக்கம் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்ற அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இருபது ஆண்டுகளாக நிலவி வந்த அரசியல் சூழ்நிலையை மாற்றும் திருப்புமுனை தேர்தலாக இந்த 206 தேர்தல் பார்க்கப்படுகிறது. அந்த மாற்றத்தின் முகமாக திருமாறன் ஜி உருவெடுத்து வருகிறார் என்ற அரசியல் சூழ்நிலை தற்போது திருப்பத்தூர் தொகுதி முழுவதும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருவதை பார்க்கையில், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் இம்முறை திமுக அமைச்சர் பெரியகருப்பனை வீழ்த்தி வெற்றி வாகை சூடுவர் திருமாறன் ஜி என்கிறது திருப்பத்தூர் அரசியல் களம்.

இப்படி ஒரு சூழலில் எதிர் தரப்பு பாஜக வேட்பாளர் திருமாறன் ஜியை ஆரம்பத்தில் அசால்ட்டாக நினைத்த அமைச்சர் பெரியகருப்பன், தற்பொழுது திருப்பத்தூர் மக்கள் மத்தியில் திருமாறன் ஜிக்கு அதிகரித்து வரும் ஆதரவை பார்த்து கதி கலங்கி நிற்கிறார் பெரியகருப்பன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here