திமுகவுக்கு மூன்றாவது இடம்… திமுகவை பின்னுக்கு தள்ளும் தவெக … நத்தம் தொகுதியின் கள நிலவரம்….

0
Follow on Google News

2026 சட்டமன்ற தேர்தலுக்கான நத்தம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் கள நிலவரம், வாக்குப்பதிவுக்கு முன்பே இவர் தான் உறுதியாக வெற்றி பெற போகிறார் என்பதை மிக எளிதாக கணிக்கும் வகைகள் எந்த வகையில் கடும் போட்டியில்லாமல் சென்று கொண்டிருக்கிறது நத்தம் சட்டமன்ற தொகுதியின் கள நிலவரம், முதல் இடத்திற்கான போட்டி இல்லை என்றாலும் , நத்தம் தொகுதியில் இரண்டாம் இடம் பிடிக்க போவது யார் என்கிற கடும் போட்டியை பார்க்க முடிகிறது.

இந்த தொகுதியில் சிட்டிங் எம் எல் ஏ வான முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் சுமார் 5 முறை இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார் , அதாவது நத்தம் தொகுதியில் இரட்டை இல்லை சின்னத்தில் 5 முறை போட்டியிட்ட நத்தம் விஷ்வநாதன் தோல்வி அடைந்தார் என்கிற பேச்சுக்கே அவரது அகராதியில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நத்தம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட்டால் நாமினேஷன் தாக்கல் செய்த போதே அவரது வெற்றி உறுதி செய்யபட்டு விடும் என்கிறார்கள் அந்த தொகுதி மக்கள்.

முன்னாள் அமைச்சராக இருந்த நந்தம் விஸ்வநாதன், நத்தம் தொகுதிக்கு கொண்டு வந்த நலத்திட்டத்தில் முக்கியமானவை காவேரி கூட்டு குடிநீர் திட்டம், மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைத்துள்ள மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியவர் நந்தம் விஸ்வநாதன், அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நத்தம் விஸ்வநாதன்.

மேலும் நத்தம் தொகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, போன்ற மக்களின் அடிப்படை தேவைகளை, அமைச்சராக இருந்த போதும் சரி, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும் சரி தொடர்ந்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நத்தம் தொகுதி மக்களுக்கு எந்த ஒரு குறையில்லாமல் செய்து வருவதால் தொடர்ந்து நத்தம் விஸ்வநாதணுக்கு நாங்கள் வாக்களித்து வெற்றி அடைய செய்து வருகிறோம் என்கிறார்கள் அந்த தொகுதி மக்கள்.

குறிப்பாக வனத்துறை அனுமதியுடன் நந்தம் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்ய முக்கிய பங்காற்றியவர் நந்தம் விஸ்வநாதன். இந்நிலையில் மீண்டும் 6வது muraiyaka போட்டியிடும் நந்தம் விஸ்வநாதன் வெற்றியை எளிதாக்கும் வகையில், நத்தம் தொகுதிக்கு தொடர்பே இல்லாத, திருச்சியில் இருந்து இறக்கு மதி செய்யப்பட்டுள்ள கே கே எஸ் செல்வகுமார் இந்த தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அந்த வகையில் தற்போதைய நத்தம் தேர்தல் களநிலவரப்படி, இரண்டாம் இடத்திற்கு திமுக சார்பில் போட்டியிடும் கே கே செல்வகுமார், மற்றும் தமிழக வெற்றி கழக வேட்பாளர் இவர்கள் இருவருக்கு இடையில் கடுமையாக போட்டி நிலவி வரும் நிலையில், நந்தம் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தினர் மிக கடுமையாக இறங்கி வேலை செய்தால், கே கே செல்வகுமாரை மூன்றாம் இடத்திற்கு தள்ளிவிட்டு இரண்டாம் இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் நத்தம் தொகுதியில் உதயசூரியன் சின்னம் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டால் மிக பெரிய தலைகுனிவை திமுகவுக்கு ஏற்படுத்தும் என்பதால், திமுகவினர் இரண்டாம் இடத்தை தக்க வைக்க நத்தம் தொகுதியில் மிக கடுமையாக போராடி வருவதையும், அதே நேரத்தில் இந்த தொகுதிக்கு தொடர்பே இல்லாத கே கே எஸ் செல்வகுமாரை நம்ம தலையில் திமுக தலைமை கட்டிவிட்டதே என்கிற புலம்பலும் திமுகவினர் மத்தியில் பார்க்கமுடிகிறது.

மொத்தத்தில் 40 முதல் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நந்தம் விஷ்வநாதன் நந்தம் தொகுதியில் மிக பெரிய வெற்றியை 2026 சட்டசபை தேர்தலில் பதிவு செய்வார் என்கிறது தேர்தல் களநிலவரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here