முகத்தில் கரியை பூசாமல் விடமாட்டேன்… தீபாவளிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடும் லெஜெண்ட் சரவணன்..

3
Follow on Google News

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன் அவருடைய கடை விளம்பர படங்களில் நடித்து கேலி கிண்டலுக்கு உள்ளானார். ஆனால் அதே கேலி கிண்டல் காரணமாகவே மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்.இதனைத் தொடர்ந்து சினிமா மீது இருந்த மோகம் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சொந்த தயாரிப்பில் ஹீரோவாக தமிழ் சினிமாவுக்கு லெஜன்ட் படத்தின் மூலம் அறிமுகமானார் லெஜெண்ட் சரவணன்.

ஆனால் இந்த படத்திற்கு விளம்பரம் செய்த பணத்தை கூட லெஜன்ட் சரவணன் எடுக்க முடியவில்லை, அந்த அளவுக்கு பரிதாபமாக தோல்வி அடைந்தது லெஜெண்ட் படம். மேலும் நடிப்பு, நடனம் என எதுவுமே தெரியாமல் பணம் இருக்கின்றது என்பதற்காக ஹீரோவாக அறிமுகம் ஆன லெஜெண்ட் சரவணனுக்கு, இதெல்லாம் தேவையா.? என படத்தை பார்த்தவர்கள் தலையில் அடித்துக் கொண்டு வெளியே வந்ததை காண முடிந்தது.

மேலும் ஒரு தொழில் அதிபராக இந்த சமுதாயத்தில் மதிக்கத்தக்க கூடியவராக இருந்த லெஜெண்ட் சரவணன், சினிமாவில் நடித்தது அவருடைய கோமாளித் தனத்தினால் கேலி கிண்டலுக்கு உள்ளாகி அவருக்கான மரியாதையும் இழந்தது தான் மிச்சம். அதனால் இனிமேல் சினிமா ஆசையை கைவிட்டுவிட்டு தொழிலில் முழுக்க முழுக்க கவனம் செலுத்துங்கள் என குடும்ப உறுப்பினர்கள் லெஜென் சரவணனுக்கு அறிவுறுத்தினார்கள்.

ஆனால், இதற்கு சரவணன், சினிமா துறையிலும் சாதித்து காட்டுவேன், என்னை கேலி கிண்டல் செய்தவர்கள் முகத்தில் கரியை பூசுவேன். நிச்சயம் சினிமாவில் ஒரு வெற்றி படம் கொடுத்தே தீருவேன் என்ற ஒரு உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இளம் இயக்குனர்களிடம் தொடர்ந்து லெஜெண்ட் சரவணன் கதை கேட்டு வரும் நிலையில், அடுத்த படத்திற்கான கதையும் இயக்குனரையும் உறுதி செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்தை பிற தயாரிப்பாளர்கள் தயாரிக்க யாரும் முன் வராததால், மீண்டும் லெஜன்ட் சரவணன் நடிக்கும் அவருடைய இரண்டாவது படத்தையும் சொந்தமாக தயாரிக்க இருக்கிறார். முன்னணி நடிகர்கள் அவர்கள் படம் குறித்த அப்டேட்களை பண்டிகை நாட்களில் தான் வெளியிடுவார்கள், அந்த வகையில் அவர்களைப் பின்பற்றி லெஜெண்ட் சரவணன் அவருடைய இரண்டாவது படத்தின் அறிவிப்பை வருகிற தீபாவளி தினத்தன்று வெளியிட இருக்கின்றார்.

இந்நிலையில் சரவணன் ஆசைக்கு நடித்த லெஜன்ட் படம் படுதோல்வியடைந்து பல கோடி நஷ்டத்தை அவருக்கு ஏற்படுத்தியது. மேலும் இரண்டாவது படம் சொந்தமாக தயாரித்து நடிக்க இருப்பதால், இதில் எத்தனை கோடி நஷ்டம் ஏற்படும் என்று, அவருடைய குடும்பத்தினர் சரவணன் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. லெஜெண்ட் சரவணனுக்கு நடிப்பு, நடனம் என சினிமா தொடர்பாக எதுவுமே தெரியவில்லை.

சினிமா குறித்த எந்த ஒரு அடிப்படை அனுபவமும், கற்றலும் இல்லாமல் இன்னும் எத்தனை படம் அவர் நடித்தாலும் தொடர் தோல்வியை சந்தித்து நஷ்டத்தை தான் ஏற்படுத்தும். சினிமா மீது அவருக்கு மோகம் இருந்தால், நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தால், வேறு ஒரு நடிகரை வைத்து சொந்தமாக படம் தயாரித்தால் அவருக்கு லாபமும் கிடைக்கும், நல்ல படங்களை கொடுத்த நிம்மதியும் கிடைக்கும் என்கின்றனர் சினிமா துறையினர்.

3 COMMENTS

  1. கதையை மட்டும் கேட்டு என்ன பிரயோஜனம் நடிக்க தெரியாமல் ரோபோ மாதிரி நடித்தால் படம் எத்தனை எடுத்தாலும் தோல்வியில்தான் போய் முடியும் தலையில் துண்டுதான் இப்போ போட்டிருக்காரு.அந்த துண்டை தரையில் விரிக்காமல் விடமாட்டேன்னு அடம் பிடிக்கிறாரே.

Comments are closed.