ரஜினியை அசிங்கப்படுத்திய பிரபல தயாரிப்பு நிறுவனம்.. இரண்டு மகள்களும் என்ன செய்தார்கள் தெரியுமா.!

0
Follow on Google News

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10 வருடங்களில் வெளியான படங்களின் சம்பளத்தை, அவருடைய இரண்டு மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் ஒவ்வொரு படத்தின் போது மாற்றி மாற்றி ரஜினிகாந்தின் சம்பளத் தொகையை அவர்களுக்குள் வாய்மொழி ஒப்பந்தமாக எடுத்துக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்தின் போது அவருக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் அந்த பணத்திற்கான ஜிஎஸ்டி தொகையையும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெளியான அண்ணாத்தே படத்திற்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் 110 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது, அதனைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்தே திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை,. மேலும் இந்த இரண்டு படங்களும் தயாரிப்பாளருக்கு மிக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் ரஜினிகாந்தின் மார்க்கெட் மிகப்பெரிய சரிவை சந்தித்தது.

இதைத் தொடர்ந்து அண்ணாத்தே படம் தோல்விக்கு பதிலாக மேலும் ஒரு படம் தங்களுடைய தயாரிப்பில் நடித்து தர வேண்டுமென என அண்ணாத்தே படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரஜினிகாந்துக்கு நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனையை ஏற்று கொண்ட ரஜினிகாந்த், அடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

ஆனால் சுமார் 110 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ரஜினிகாந்துக்கு, தற்பொழுது ஜெயிலர் படத்தில் நடிக்க சுமார் 30 கோடி சம்பளத்தை குறைந்து கொண்டு 80 கோடி ரூபாய் சம்பளம் மட்டுமே அதன் தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளது என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் மார்க்கெட் மிகப்பெரிய சரிவை சந்தித்த இந்த சூழலில் யாரும் ரஜினியை வைத்து படம் எடுக்க பல இயக்குனர்கள் போட்டி
போட்டாலும், எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் ரஜினியை வைத்து படம் எடுக்க முன் வரவில்லை.

இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு, அவர் அடுத்து இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார், இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால் இந்த படத்திற்கு ரஜினிகாந்துக்கு பேசப்பட்ட சம்பளம் 75 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

ஏற்கனவே ஜெயிலர் படத்தில் நடிக்க ரஜினியின் சம்பளம் 30 கோடி குறைந்துள்ளது. தற்பொழுது மேலும் ஐந்து கோடியை குறைத்துக் கொண்டு லைக்கா தயாரிக்கும் அடுத்த புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் ரஜினிகாந்த். ஒப்பந்தமாகும் முன்பு ரஜினிகாந்த் தரப்பில் லைக்கா நிறுவனம் தரப்பில் 100 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது, ஆனால் 75 கோடி தான், அதற்கு மேல் கொடுக்க முடியாது என ரஜினியை அவமான படுத்தும் விதத்தில் நடந்து கொண்டுள்ளது லைக்கா நிறுவனம்.

சம்பளம் குறைந்தாலும் பரவாயில்லை, வந்த வரை லாபம் என கணக்கிட்டு தந்தை ரஜினிகாந்தை நடிக்க வைத்து இரண்டு மகள்களும், காற்றுள்ள வரை தூற்றி கொள்வோம் என போட்டி போட்டு சம்பாரித்து வருவதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.