விஜயபாஸ்கர் Vs பர்வேஸ்… புதுக்கோட்டையில் யார் பெருசு… தலையில் கைவைத்த தவெக தலைமை…

0
Follow on Google News

விராலிமலை சட்டமன்ற உறுப்பினரை பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிமுகவிலிருந்து விலகி சமீபத்தில் தவெகாவில் இணைந்தவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இணைவதற்கு முன்பு வரும் இடைத்தேர்தலில் தான் விராலிமலை தொகுதியில் வெற்றி பெற்றால் தனக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என்கின்ற டிமான்டுடனையே தவெகாவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இணைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிமுகவிலிருந்து தங்களுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்த மூத்த நிர்வாகிகள் யாருக்குமே இதுவரை தவெக வில் எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படவில்லை. இது தாவேகாவில் இணைந்த அதிமுகவை சேர்ந்தவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது .

குறிப்பாக கையில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தற்போது கைவசம் எந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் தவெக வில் தங்களுக்கு உரிய மரியாதை இல்லை என்று அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை மையமாக வைத்து அரசியல் செய்ய தனக்கு புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று தவெக தலைமைக்கு விஜயபாஸ்கர் நெருக்கடி கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே புதுக்கோட்டையில் மாவட்ட செயலாளரும், அறந்தாங்கி தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சர் பமுகமது பர்வேஸ் ஏற்கனவே விஜயபாஸ்கர் தவெக வில் இணைந்ததில் அவருக்கு விருப்பமில்லை என்றும், காரணம் விஜயபாஸ்கர் போன்ற புதுக்கோட்டையில் ஆளுமை மிக்க ஒரு நபர் தவெக வில் இணையும் பொழுது தன்னுடைய செல்வாக்கு கட்சியில் குறைந்துவிடும் என்கின்ற அச்சம் பார்வேஸுக்கு ஏற்கனவே இருந்து வந்துள்ளது.

அந்த வகையில் வெளிப்படையாக மாப்பிள்ளை மாமா என்று ஒருவர் ஒருவர் ஆறத் தழுவிக் கொண்டாலும் கூட விஜயபாஸ்கர் புதுக்கோட்டை தவெக வில் எந்த வகையிலும் தலைதூக்கி விடக்கூடாது என்பதில் சாதுரியமாக காய்களை அகற்றி வருகிறாராம் அமைச்சர் பர்வேஸ், மேலும் கொஞ்சம் தனக்கு இடம் கிடைத்தால் தான் யார் என்பதை நிரூபித்து தக்க வைத்துக் கொள்ளக் கூடியவர் தான் விஜயபாஸ்கர்.

அந்த வகையில் தற்பொழுது மாப்பிள்ளை என்று சற்று விஜயபாஸ்கர் அடக்கி வாசிச்சாலும், தன் கையில் அமைச்சர் பதவியும் கட்சியின் பொறுப்பும் வந்து விட்டால் அவருடைய ஆட்டமே வேற வகையில் இருக்கும் என்கிறார்கள் புதுக்கோட்டையைச் சார்ந்த அரசியல் பிரமுகர்கள். இந்த நிலையில் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பொறுப்பு கொடுத்தால் ஏற்கனவே பல வருடங்களாக இந்த கட்சிக்கு உழைத்தவர்கள் ஒதுக்கப்படுகிறோம் என்று கடும் அப்செட் ஆவார்கள்.

அதே நேரத்தில் மாற்றுக் கட்சியில் வந்த மூத்த தலைவர்களுக்கு இன்னும் பொறுப்பு வராமல் தாமதிப்பதால் அடுத்து தவெக விற்கு சென்றால் யாருக்கும் மரியாதை இல்லை ஆகையால் மாற்றுக் கட்சியில் இருந்து தற்போது தவெகவுக்கு மாற்று கட்சியினர் வருகை குறைந்து இருப்பதையும் தவெல வருத்தத்துடனே பார்க்கிறது.

அந்த வகையில் தற்போது தவெகவில் மாற்றுக் கட்சியினர் ஒரு தரப்பினரும், ரசிகர் மன்றத்திலிருந்து வந்த ஒரு தரப்பினர் என இரண்டு கோஷ்டிகள் உருவாகும் சூழல் தற்பொழுது இருந்து வருவதாக பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் இந்த இரண்டு தரப்பையும் எப்படி சரி செய்வது என்று தவெல தலைமை திகைத்து நின்று கொண்டிருக்கிறது.

மேலும் வரும் இடைத்தேர்தலில் மாற்று கட்சியிலிருந்து தவெக வில் இணைந்தவர்களின் துணை இல்லாமல் வெற்றி பெற முடியாது என்கின்ற யதார்த்தத்தை தலைமை புரிந்து கொண்டு மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பது தொடர்பாக ஆலோசனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here