தாராபுரம் இடைதேர்தல்… யாருக்கு வெற்றி வாய்ப்பு… இதோ சர்வே ரிப்போர்ட்…

0
Follow on Google News

அக்டோபர் 6 தேதி நடைபெற இருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் இன்னும் பரபரப்பை எட்ட வில்லை என்று தான் சொல்ல வேண்டும், திமுக, அதிமுக , தமிழக வெற்றி கழகம் , கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் வேட்பாளரை அறிவித்து வேட்பு மனு தாக்கல் தொடங்கி இருக்கிறார்கள், ஆனால் இன்னும் பிரச்சாரம் சூடு பிடிக்கவில்லை. குறிப்பாக தலைவர்கள் பிரச்சாரத்தை தொடங்கும் போது தான் தேர்தல் களம் அனல் பறக்கும்.

குறிப்பாக இடைதேர்தல் அறிவிக்கப்பட்டாலே, அந்த தொகுதி வாக்காளர்களுக்கு திருவிழா தான் என்பது போன்று கடந்த கால ஆட்சியில், வாக்காளருக்கு பரிசு பொருளும், பணம் பட்டுவாடா என ஜோராக நடக்கும், ஆனால் அந்த வாய்ப்பு நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளிலும் வாய்ப்பில்லை என்றே எதிர் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தேர்தல் போட்டி கடுமையானால் தேர்தல் நெருங்கு நேரத்தில் வாக்காளர்களுக்கு பரிசு மலை பொழிய வாய்ப்புள்ளது, மேலும் பணம் பட்டுவாடா நடக்கவும் வாய்ப்புள்ளது, ஆனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் இரண்டு திராவிட கட்சி வேட்பாளர்களிடம் மக்கள் பணத்தை பெற்று கொண்டு, தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்து விட்ட நிகழ்வு, இனி இரண்டு திராவிட கட்சிகளும் பணத்தையும் பரிசு மலையையும் பொழிந்து ஏமாற வாய்ப்பில்லை.

அந்த வகையில் முழுக்க முழுக்க கடுமையான பிரச்சாரத்தின் மூலமாகவே தாராபுரம் தொகுதியின் மக்களின் வாக்குகளை பெற முடியும் என்கிற சூழல் உருவாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமா சுமார் 81 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், இதில் சத்யபாமா சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக வில் இணைந்தார்.

கடந்த 2026 சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுமார் 64 ஆயிரம் வாக்குகள் பெற்று இருந்தார், தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் 46 ஆயிரம் வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்து இருந்தார், இதில் கடந்த திமுக ஆட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தற்பொழுது தவெக சார்பில் போட்டியிடுகிறார், இதில் கடந்த முறை அதிமுகவுக்கு விழுந்த வாக்குகள் பெரும்பலும் தவெக வுக்கு விழ வாய்ப்பு இருக்கிறது.

அதே நேரத்தில் கடந்த பொது தேர்தலில் திமுக ஆளும் கட்சி என்பதால் , மேலும் மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது என்பதால் திமுகவுக்கு போட்ட மக்கள் இம்முறை மாற்றி தவெக வுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது. மேலும் அதிமுக – திமுக – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் வாக்குகள் ஒன்றிணைந்தால் மட்டுமே தமிழக வெற்றி கழகத்தை வீழ்த்த முடியும் என்கிற எதார்த்தமான சூழல் தாராபுரம் தொகுதியில் நிலவி வருகிறது.

அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் சத்யபாமா வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புள்ளது என்கிறது தாராபுரம் தேர்தல் களம், இதில் முதல்வர் விஜய் இடைதேர்தல் நடக்கும் தாராபுரம் தொகுதிக்கு பிரச்சாரத்தை மேற்கொண்டால், மிக எளிதாக தமிழக வெற்றி கழக வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக தாராபுரம் தொகுதி மக்கள் தங்கள் தொகுதிக்கு விஜய் பிரச்சாரத்துக்கு வருவாரா.? என்கிற எதிர்பார்ப்பில் இருப்பதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் தற்பொழுது போட்டியே அதிமுக – திமுக இடையில் தான், அதாவது இரண்டாம் இடம் பிடிக்க போகும் கட்சி எது, திமுகவா, அதிமுகவா என்கிற கடும் போட்டி நிலவி வருகிறது, மற்றபடி தமிழக வெற்றி கழகம் வேட்பளார் தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக சட்டசபை செல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது என்பது தேர்தல் முடிவுகள் உணர்த்தும்.