திருச்செந்துார் செந்தில் நாதன் கோவிலில், நடந்த சூரசம்ஹார விழாவின் போது, கோவில் வளாகத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடந்த ஆன்மிக இசை நிகழ்ச்சியில், இயல், இசை, நாடக மன்ற தலைவரும், பிரபல நாட்டுப்புற கலைஞருமான புஷ்பவனம் குப்புசாமி பாடிய பாடல் தவெக அரசை சர்ச்சையில் சிக்க வைத்து இருக்கிறது.
புஷ்பவனம் குப்புசாமி பாடிய அந்த பாடலில், நம் தமிழக முதல்வர் போல் வேலெடுத்து, பகை முடித்த வேலவனின் தாழ்பணிந்து, வேண்டும் வரம் கேளுங்களேன்’ என பாடி இருந்தார், மேலும் லச்சக்கணக்காக பக்தர்கள் கலந்து கொண்ட சூரசம்ஹார விழாவின் ஹிந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் தேர்வுக்குழு உறுப்பினரும், பாடகருமான வேல்முருகன், ‘முதல்வருக்கு அரோகரா, அறநிலையத் துறை அமைச்சர் ராமேசுக்கு அரோகரா’ என்று கோஷமிட்டார்.

இது அங்கே கூடியிருந்த பக்தர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது, ஒரு ஆன்மீக நிகழ்வில் பய பக்தியுடன் சூரசம்ஹார விழாவை காண வந்த பக்தர்களை கேலி கூத்தாக அமைத்துள்ளது, இது போன்ற பாடகர்களால் தவெக அரசுக்கும் முதல்வர் விஜய்க்கு தான் அவ பெயர் என சூரசம்ஹார விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் தங்கள் வேதனையை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் இந்த விவகாரத்தை எதிர்கட்சிகளான திமுக , பாஜக சும்மா விடுமா, அவர்கள் பங்குக்கு தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர், இந்நிலையில் சூரசம்ஹார விழாவின் போது, முதல்வருக்கு அரோகரா என்று கோஷமிட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து, இந்த வீடியோ முதல்வர் விஜய் பார்வைக்கு செல்ல, கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாராம் முதல்வர் விஜய், உடனே முக்கிய அமைச்சர் ஒருவரை தொடர்பு கொண்ட முதல்வர் விஜய்.
என்ன நெனச்சுட்டு இது போன்ற நிகழ்வெல்லாம் நடக்குது, எனக்கு எனக்கு அரோகரா போட்டால், நான் குளிர்ந்து விடுவேன் என நெனச்சுடர்களோ, உடனே வார்ன் பண்ணுங்க என முதல்வர் சற்று கறார் காட்ட, அந்த முக்கிய அமைச்சர் உடனே அறநிலை துறை அமைச்சரை தொடர்பு கொண்டு , முதல்வர் விஜய் பேசி விஷத்தை தெரிவித்து இருக்கிறார், இதனை தொடர்ந்து சம்பத்தப்பட்ட பாடகர்களுக்கு மெசேஜ் பாஸ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில், பத்திரிகையாளர்களை சந்தித்த அறநிலை துறை அமைச்சர் ரமேஷ், இத்தகைய தனிப்பட்ட புகழுரையையோ கோஷங்களையோ முதல்வர் விஜய்யோ அரசோ விரும்புவதில்லை என்றும், முதல்வர் விஜய் இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்றும் அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட பாடகர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும், அவர்கள் வருத்தம் தெரிவித்து இனிவரும் நிகழ்வுகளில் கவனமாகச் செயல்படுவதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் விஜய்க்கு நெருக்கமான வட்டாரத்தில் மேலும் விசாரித்ததில், சமீபத்தில் தமிழ் சினிமா துறையினர் சார்பில் , சினிமா துறையை சேர்ந்த ஒருவர் முதலைவராக உள்ளார், அதானல் முதல்வர் விஜய்க்கு பாராட்டு விழா நடத்துவது குறித்து ஒரு தரப்பு முதல்வர் விஜய்யை அணுகியதாகவும், ஆனால் அதெல்லாம் கூடாது, அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று தெரிவித்து விட்டாராம் முதல்வர்.
அந்த வகையில் மேடை போட்டு தன்னை பலரும் புகழ, அதை கேட்டு குலுக்கி குலுக்கி ரசித்து இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தர்வர்கள் மகிழ்ந்தது போன்று , தற்போதைய முதல்வர் விஜய் விரும்ப கூடியவர் அல்ல என்கிறது முதல்வர் விஜய்க்கு நெருக்கமாக இருக்க கூடிய வட்டாரங்கள்.

