கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற விவகாரம் தொடர்பாக எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல், மாவட்ட ஆட்சியருக்கு தவறான செய்தியை அனுப்பினார் தவெக சட்டமன்ற உறுப்பினர் என திமுக தரப்பில் இருந்து குற்றசாட்டுகள் வைக்கப்பட்டு, அதை அரசியல் செய்து வருவதை பார்க்க முடிகிறது, குறிப்பாக இதை எந்த அடிப்படையில் திமுக தரப்பில், கையில் எடுத்து தவெக அரசுக்கு எதிராக அரசியல் செய்கிறார்கள் என்பது மக்களுக்கு குழப்பமாக உள்ளது.
சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் எங்கேனும் கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் கொடுத்து இருந்தால், அதன் அடிப்படையில் தவெக MLA அருள் விக்னேஷ்க்கு எதிராக திமுக தரப்பில் இருந்து கருத்துக்களை தெரிவிக்கலாம், அல்லது அவர்கள் சொல்வது போன்று தவெக MLA அருள் விக்னேஷ் எதிராக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட வலியுறுத்தலாம்,

ஆனால் அப்படி ஒரு சம்பவம் எதுவுமே நடக்க வில்லை என தவெக தரப்பில் அமைச்சர் உட்பட பலரும் மக்கள் மத்தியில் தெளிவு படுத்திய நிலையில் , மேலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது என சம்பந்த பட்ட மாவட்ட ஆட்சியர் ஏதும் தெரிவிக்காத நிலையில், ஒரு பொய்யான குற்றசாட்டை ஊதி பெரிதாக்கி மக்கள் மத்தியில் தவெக அரசின் இமேஜை டேமேஜ் செய்ய வேண்டும் என்கிற திமுகவின் யுக்தி தோல்வியை தான் தழுவும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
குறிப்பாக திமுக தரப்பில் கனிமொழி போன்ற தலைவர்கள் தவெக MLA அருள் விக்னேஷ் எதிராக தெரிவிக்கும் கண்டனத்தில் கூட, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும்,மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இப்படி அனுப்பியதாகவும், தொந்தரவு செய்ததாகவும், என நேரடியாக கண்டனத்தை தெரிவிக்காமல் கனிமொழி போன்ற வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலமாகவே, தவெக MLA அருள் விக்னேஷ் எதிராக பரவும் குற்றச்சாட்டில் உண்மை தன்மை இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
மேலும் கனிமொழி கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் எதிராக கண்டன பதிவில் கூட சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன என சுட்டி காட்டி தான் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார், அப்படியானால் நேரடியாக ஒரு குற்றசாட்டை முன் வைத்து கண்டனத்தை பதிவு செய்யாமல் சமூக வலைதளங்களில் செய்திகள் வருவதை சுட்டி காட்டி கனிமொழி போன்ற அனுபவம் உள்ள அரசியல் தலைவர்கள் கண்டம் தெரிவிப்பது,
எங்கே நேரடியாக குற்றசாட்டுக்களை வைத்து கண்டனம் தெரிவதால், நடக்காத ஒரு விசயத்திற்கு, பொய்யான செய்தியை பரப்புகிறார் கனிமொழி எம்பி என பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் திமுக எம்பி கனிமொழி மீது வழக்கு கூட பதிவு செய்ய வாய்ப்புள்ளது என கூறப்படுவதால் தான், நேரடியாக குற்றசாட்டை கனிமொழி வைக்கவில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அந்த வகையில் அரசு நிகழ்வுகளில் , தவெக எம் எல் ஏ அருள் விக்னேஷ் தனக்கு மாவட்ட ஆட்சியர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை, ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மற்றொரு தொகுதியான ரிஷிவந்தியம் தொகுதி திமுக சட்டமன்ற ஊறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனுக்கு மாவட்ட ஆட்சியர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்கிற மன குமுறல் தவெக எம் எல் ஏ அருள் விக்னேஸ்க்கு இருந்திருக்கிறது என்றும்,
இதனால் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, தவெக எம் எல் ஏ அருள் விக்னேஷ் ஆகிய இருவருக்கும் இடையில் முரண்பாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது, ஆனால் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக திமுக தரப்பில் பரப்பப்படும் வகையில் குறுந்செய்தி அனுப்பினார் என்பதெல்லாம், அப்படி ஒரு சம்பவமே நடக்க வில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

