உதயநிதி ஸ்டானின் வலது கரம் என சொல்லப்படும் ரத்தீஷ், டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கி வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து வருகிறார், கடந்த திமுக ஆட்சியில் பெயரளவில் தான் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர், ஆனால் துணை முதல்வருக்கான அணைத்து வேலைகளையும் கவனித்து வந்தவர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ரத்தீஷ் தான் என்பது கடந்த திமுக ஆட்சியில் பேசும் பொருளாக இருந்தது.
பெருபாலான துறைகளில் ரத்தீஸின் தலையீடு கடந்த திமுக ஆட்சியில் இருந்து இருக்கிறது, அணைத்து துறைகளில் இருந்து வரும் பார்ட்டி பண்ட ரத்தீஸிடம் ஒப்படைக்க பட்டு இருக்கிறது, அவர் வெளிநாடுகளில் முதலீடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் டாஸ்மாக் தொடர்பான அமலாக்க துறை சோதனை வரையுமே , ஒரு துணை முதல்வராக உதயநிதி பார்க்க வேண்டிய வேலைகளை ரத்தீஷ் செய்து வந்திருக்கிறார்.

கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக் தொடர்பாக இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்ட பின்பே, ரத்தீஷ் என்கிற ஒரு கேரேட்டர் வெளி உலகத்துக்கு தெரியவருகிறது, ஆனால் எப்போது ரத்தீஷ் வெளி உலகத்திற்கு தெரிய வந்தாரோ , அப்போதே அவர் தப்பி வெளிநாடுகளுக்கு சென்று தலைமறைவானார், குறிப்பாக ரத்தீஷ் தொடர்பான புகைப்படங்கள் கூட ஒன்று , இரண்டு தவிர்த்து இல்லை,
அந்த அளவுக்கு மிக எச்சரிக்கையாகவே தன்னுடைய செயல்பாடுகளை செய்து வந்திருக்கிறார் ரத்தீஸ். இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு பின்பு டாஸ்மாக் ஊழல் விவகாரத்தை துரிதப்படுத்தி வருகிறது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு. சமீபத்தில் பள்ளி கல்வி துறை ஊழலில் சிக்கி சிறையில் இருக்கும் அன்பில் மகேஷ் விவகாரத்திலும் ரத்தீஷ்க்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்து இருக்கிறது தவெக அரசு.
இதனை தொடர்ந்து ரத்தீஷை தட்டி தூக்கி விட்டால், உதயநிதியை எளிதாக கைது செய்து சிறையில் அடைத்து விடலாம் என்பதால், வெளிநாடுகளில் தப்பி தலைமறைவாக இருக்கும் ரதீஸுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்க தமிழக காவல் துறை சார்பில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிஐக்கு கடிதம் அனுப்ப பட்டு இருக்கிறது, இதனை தொடர்ந்து இன்டெர் போல் போலீசுக்கு சிபிஐ அனுப்பிய கடிதத்தின் மூலம்,
வெளிநாடுகளில் தப்பி தலைமறைவாக இருக்கும் ரத்தீஷை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க தீவிரம் காட்டி வருகிறது இன்டெர் போல் போலீஸ், அந்த வகையில் தற்பொழுது ரத்தீஷ் விமானம் மூலம் பயணிக்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டு இருக்கிறது, காரணம் விமானம் நிலையம் வந்தால் ரத்தீஷ் கைது செய்யப்படுவார், ஆகையால் தற்பொழுது தலைமறைவாக இருக்கும் ரத்தீஷ் இருக்கும் இடத்தில் இருந்து வெளியேற முடியாத சூழலில் உள்ளார்.
இந்நிலையில் ரத்தீஸ் அப்ரூவல் ஆக கூட வாய்ப்புள்ளது என்றும், அப்படி அப்ரூவல் ஆனால், உதயநிதி ஸ்டாலின் உட்பட பல திமுக முன்னாள் அமைச்சர்கள் சிறை செல்ல நேரிடும் என கூறப்படுகிறது, அந்த வகையில் தற்பொழுது உதயநிதி உட்பட பலரும் ரத்தீஷ் எந்த விதத்தில் மாட்டி விட கூடாது என்பதில் , வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி பாதுகாத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்டெர் போல் போலீசால் ரத்தீஷ் மிக தீவிரமாக கண்காணிக்க பட்டு வருவதாகவும், அடுத்த 10 நாட்களில் ரத்தீஷ் இன்டர்போல் போலீசால் கைது செய்ய வாய்ப்புள்ளது என்றும், மேலும் தவெக அரசு ரத்தீஷ் கைதை தங்களுக்கு கொடுக்கப்பட்ட சவாலாக ஏற்று , ரத்தீஷை கைது செய்ய அதிக கவனம் செலுத்தி வருகிறது தவெக அரசு என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

