சிக்கிய ஜெயரஞ்சன்… புத்தக கொள்முதலில் மெகா ஊழல்… ஸ்டாலின் சார் நீங்க தப்பிக்கவே முடியாது…

0
Follow on Google News

கடந்த திமுக ஆட்சியில் மதுரை, திருச்சி, சென்னை மற்றும் கோவையில் உலக தரத்திற்கு நூலகம் காட்டியுள்ளோம் என தம்பட்டம் அடித்து கொண்டது திமுக. ஆனால் இது மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திறக்கப்பட்ட நூலகம் இல்லை, ஒவ்வொரு நூலகத்திலும் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என தொலைநோக்கு பார்வையில் கொள்ளை அடிக்கவே திமுக ஆட்சியில் இந்த நூலகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது தற்பொழுது அம்பலமாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள நூலகத்தில் கடந்த திமுக ஆட்சியில் நடந்த ஊழல், சமீபத்தியில் கோவையில் பெரியார் அறிவுலகம் திறக்கப்பட்ட பின்பே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தில் வைக்கப்பட்ட போலியான புத்தகங்கள் பின்னனியில் இதன் ஆசிரியர் யார் என்று தேடினால், அப்படி ஒரு ஆசிரியரே இல்லை, போலியாக உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது,

மேலும் கொள்முதல் செய்த பல பதிப்பகமும் போலியானவை என கண்டு பிடிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது, இந்நிலையில் பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்த கட்சி தான் திமுக என்கிற வரலாறு தமிழக மக்கள் மத்தியில் ஏற்கனவே பேசும் பொருளாக இருக்கும் நிலையில், மாணவர்கள் படிக்கும் புத்தகத்தில் கூடவா திமுக ஊழல் செய்யும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அட திமுகவினர் கடந்த ஆட்சியில் கக்கூசை கூட விட்டு வைக்காமல் ஊழல் செய்து இருக்கிறார்கள் என்கிற ஆதாரமும் பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலாக அமைத்துள்ளது.

இந்நிலையில் செய்றதையும் செய்துவிட்டு, பெரியார் அறிவுலகத்தில் நடந்த புத்தக கொள்முதல் ஊழலை தூக்கி தவெக மீது போட்டுவிட்டு தப்பிக்க துடித்த திமுகவுக்கு சம்மட்டி அடி விழும் வகையில் தவெக அரசின் புத்தக கொள்முதல் ஊழலுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகள் அமைந்து இருக்கிறது. தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்கு கொள்முதல் செய்யப்பட்ட அகல்விளக்கு பதிப்பகத்துக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை.

இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கி இருக்கும் நிலையில், கடந்த 3 ஆண்டு திமுக ஆட்சியில் மட்டும் அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகத்திடம் இருந்து 1.74 கோடி மதிப்புள்ள புத்தகங்கள் வாங்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது, மேலும் இன்னும் சிக்மா உள்ளிட்ட விவகாரங்கள் விசாரணைக்கு வரவில்லை. ஆங்கில மொழிப் புத்தகங்கள் தொடர்பான விசாரணையும் முழுமையடையவில்லை. தற்போது தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை நடைபெற்று வருகிறது.

அப்படி இருக்கையில் இன்னும் தோண்ட தோண்ட பல பூகம்பம் வெடிக்கும் என எதிர்பார்க்க படுகிறது, இந்நிலையில் இதுவரை நூலகத்தில் 75 ஆயிரம் நூல்கள் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நூல்களை கையப்பமிட்டு பரிந்துரை செய்த , அந்த பரிந்துரை குழு தலைவர் ஜெயரஞ்சகன் தற்பொழுது வசமாக சிக்கி இருக்கிறார்.

திமுக ஆதரவாளரான ஜெயரஞ்சகம், கையப்பமிட்டால் மட்டுமே அந்த புத்தகம் கொள்முதல் செய்யப்படும், மேலும் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகத்திற்கு பணம் செலுத்தப்படும், அப்படி இருக்கையில் ஜெயரஞ்சகம் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என பலரும் வலியுறுத்தி வரும் நிலையில். இந்த புத்தகம் கொள்முதல் ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் வாய் திறப்பாரா.?

மேலும் கட்சியினர் திருமண நிகழ்வு வந்துவிட்டால் சின் ராசை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லும் வகையில் மைக்கை பிடித்து தவெக அரசை வசை படவே திருமண நிகழ்வுக்கு செல்லும் முக ஸ்டாலின் அடுத்து அவர் கலந்து கொள்ளும் திருமண நிகழ்வில் புத்தக கொள்முதல் ஊழல் விவகாரத்திற்கு விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும்… ஸ்டாலின் சார் …. நீங்கள் எங்கும் தப்பிக்க முடியாது என தமிழக மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here