ரூ.25கோடி நஷ்டம்… நயன்தாரா – விக்னேஷ் சிவன் கனவில் மண்ணை அள்ளி போட்ட ரவீந்திரன் – மஹாலக்ஷ்மி ஜோடி..!

2
Follow on Google News

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் சுமார் ஏழு வருடம் காதலித்து அந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாபலிபுரம் அருகே முக்கிய விஐபிகள் மட்டும் பங்கேற்கும் வகையில் இவர்கள் திருமணம் நடைபெற்று முடிந்தது. சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக, சுமார் ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நயன்தாரா மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போது திருமணம் செய்து கொண்டார்.

பணமே குறிக்கோளாக இருக்கும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடியினர், அவர்களின் திருமணத்தையும் வியாபாரம் செய்யும் நோக்கில், பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் தங்களுடைய திருமண வீடியோவை வெளியிட சுமார் 25 கோடி ரூபாய்க்கு விலை பேசி இருந்தனர். மேலும் திருமணத்திற்கான அணைத்து செலவுகளையும் ஏற்று கொள்ள வேண்டும் என ஒப்பந்தம் செய்து கொண்டனர் நயன்தார – விக்னேஷ் சிவன் ஜோடி.

இந்நிலையில் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்திருந்தார் நயன்தாரா. ஆனால் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சிவகார்த்திகேயன், விக்ரம், கமல், நடிகைகள் சமந்தா, திரிஷா போன்ற பல நட்சதிரங்கள் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் பல முன்னணி நடிகர்கள் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொள்ளாததால், நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சிக்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் குறைந்தது. இதனால் 25 கோடி ரூபாய்க்கு நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தை வாங்கி வெளியிட்டால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் குறைந்த மிகக் குறைந்த விலைக்கு நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண வீடியோவை விலைக்கு கேட்டது.

ஆனால் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் குறைந்த விலைக்கு கொடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டு, வேறு ஒரு ஓடிடி தளத்திற்கு அதிக விலைக்கு பேசி விற்பனை செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால் எந்த ஒரு ஓடிடி நிறுவனமும் விலைக்கு வாங்க முன் வரவில்லை. இந்த நிலையில் மீண்டும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்திய நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினர் கணிசமான தொகையை குறைத்தனர்.

இதற்கு நெட்லிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே பேசிய 25 கோடியில் இருந்து குறைத்து இறுதியாக 13 கோடிக்கு வாங்க முன்வந்துள்ளனர். வந்தவரை லாபம் என வேறு வழியின்றி நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது. இருந்தும் வீடியோ வெளியிடும் முன்பு உங்களின் புரோமோஷன் தேவை அதற்கு உங்களை பற்றி எதாவது செய்தி மீடியாவில் வந்து கொண்டே இருக்க வேண்டும், என கண்டிஷன் போட்டுள்ளது நெட்பிலிக்ஸ் நிறுவனம்.

இதனை தொடர்ந்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக, ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர், அங்கே நயன்தாரா நடவடிக்கைகளை ஒவ்வொரு புகைப்படமாக எடுத்து சில மீடியாக்களுக்கு கொடுத்து அதை விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார் விக்னேஷ் சிவன். இந்த நேரத்தில் மகாலட்சுமி – ரவீந்திரன் இவர்களின் திருமணம் ஒட்டுமொத்தமாக சினிமா ரசிகர்கள் மற்றும் மீடியாக்களையும் புரட்டிப் போட்டது.

அதாவது நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடியை இருட்டடிப்புச் செய்துவிட்டு, அனைத்து மீடியாக்களிலும் முக்கிய செய்தியில் இடம் பிடித்தனர் ரவீந்திரன்-மகாலட்சுமி தம்பதியினர். இதனால் ஸ்பெயின் சென்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன் புரோமோஷன் திட்டம் படுதோல்வி அடைந்தது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் வீடியோவை 13 கோடி ரூபாய்க்கு வாங்க இருந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் தற்பொழுது ட்ரெண்டிங் மாறிவிட்டது என தெரிவித்து, திருமண வீடியோவை வேண்டாம் என திட்டவட்டமாக மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வந்த வரை லாபம் என ரூ.25 கோடியில் இருந்து ரூ.13 கோடியாக குறைத்து தள்ளி விடலாம் என திட்டமிட்ட நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினரின் கனவில், சமீபத்தில் புதிதாக திருமணம் செய்து கொண்ட ரவீந்திரன்- மகாலட்சுமி தம்பதியினர் மண்ணை அள்ளி போட்டு விட்டதாக புலம்பி வருகின்றனர் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

2 COMMENTS

  1. Mahalakshmi மாதிரி வருமா….. சொதப்பல் ஜோடி நயன் விக்கள்

Comments are closed.