படம் படு கேவலம்… வெந்து தணிந்தது காடு உண்மையான விமர்சனம் இது தான்… மண்ணை கவ்விய பரிதாபம்..

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான படம் நெஞ்சினிலே. இந்த படத்தில் விஜய் தன்னுடைய குடும்ப கஷ்டத்தை போக்க பிழைப்புக்காக தமிழ்நாட்டில் இருந்து மும்பை செல்வார். அங்கே கேங் ஸ்டார் கும்பலுடன் இணைந்து தாதாவாக உருவெடுப்பார். மும்பையில் அடிதடி, கொலை என ரவுடியாக வலம் வரும் விஜய், அதனால் கிடைக்கும் பணத்தில் கிராமத்தில் இருக்கும் அவருடைய குடும்பத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பார்.

இந்நிலையில் ஏற்கனவே நெஞ்சினிலே படத்தை பார்த்தவர்களுக்கு வெந்து தணிந்தது காடு படத்தை பார்த்தால், இது நெஞ்சினிலே படத்தின் காப்பி என்பதை புரிந்து கொள்வார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ராதிகாவின் மகனாக இருக்கும் சிம்பு, குடும்பத்தின் கஷ்டமான சூழல் காரணமாக பிழைப்பு தேடி மும்பைக்கு செல்கிறார். அங்கே ஒரு புரோட்டா கடையில் சிம்பு வேலை செய்கிறார்.

ஆனால் அந்தப் புரோட்டா கடையில் வேலை செய்பவர்கள் அனைவரும் பகுதி நேரமாக கேங்ஸ்டராக இருப்பவர்கள், கொலை, அடிதடி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு மற்ற நேரங்களில் ஹோட்டலில் புரோட்டா போடுவது போன்ற ஹோட்டல் வேலைகளை பார்த்து வருகின்றனர். இந்த படத்தின் இடைவேளை வரை என்ன கதை என்று யாருக்கும் புரியவில்லை. இடை வேலை பின்பு கூட படத்தின் கதையில் மிக பெரிய குழப்பம் நீடிக்கிறது.

இது எழுத்தாளர் ஜெயமோகன் நாவலை தழுவிய கதை, மேலும் இந்த படத்தில் கௌதம் மேனன் உடன் ஜெயமோகன் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இதனால் ஜெயமோகன் இதுவரை காப்பாற்றி வைத்திருந்த ஒரு நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் போன்று அமைந்துள்ளது வெந்து தணிந்தது காடு படம். சிலம்பரசன் வேலை செய்யும் பரோட்டா கடைக்குது எதிரில் ஒரு சலூன் கடை இருக்கின்றது.

இந்த சலூன் கடையில் வேலை பார்ப்பவர்களும் ஒரு கேங் ஸ்டார் குரூப், இவர்களுக்கும் சிலம்பரசன் வேலை பார்க்கும் புரோட்டா கடையும் கேங்ஸ்டார் குரூப் இருவருக்கும் இடையில் 15 வருடமாக பகை இருப்பதாக படம் முடியும் வரை சொல்லிக் கொண்டே போகிறார்கள், ஆனால் என்ன பகை என்று கடைசி வரை சொல்லவே இல்லை. படத்தின் ஒளிப்பதிவு மிக மோசமாக இருக்கிறது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் ஐ சரி கணேசன் இந்த படத்திற்கு அதிக பணத்தை செலவு செய்துள்ளார்.

கல்கத்தா, மும்பை போன்ற வெளிமாநிலங்கள் சென்று படப்பிடிப்பு நடத்துவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து கொடுத்துள்ளார் ஐசரி கணேசன், இதனால் இயக்குனர் கௌதமேனன் உட்பட பட குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். ஆனால் படம் பார்க்க வந்தவர்களை மகிழ்ச்சி அடையச் செய்யவில்லை. இந்த 3 மணி நேரம் ஓடுகிறது, ஆனால் 3 மணி நேரத்திற்கான கதை ஒன்றும் இல்லை.

இந்த படத்தில் நடிக்கும் அப்புகுட்டியின் கேங் ஸ்டார் கதாபாத்திரம் லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது. கௌதம் மேனன் கேரளாவைச் சார்ந்தவர் என்பதால், வழக்கம்போல் அவருடைய படத்தில் வரும் மலையாள சாயல்கள் இந்த படத்திலும் உள்ளது. கௌதமன் படங்கள் பொதுவாக அவர் இதற்கு முன்பு அவர் எடுத்த அவருடைய படத்தையே காப்பி அடித்து மீண்டும் ஒரு படம் எடுப்பது வழக்கம்.

அந்த வகையில் வெந்து தணிந்தது காடு படத்திற்கு இது போன்ற விமர்சனம் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான், ஜெயமோகன் நாவலை தழுவி அவருடைய கதையில் வெந்து தணிந்தது காடு படம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 வருடங்களாக சினிமாவில் மிகப்பெரிய சந்தித்த சிம்புக்கு மாநாடு படம் மூலம் சினிமாவில் மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்தினார். ஆனால் வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. மொத்தத்தில் வெந்து தணிந்தது காடு படத்தைப் பார்த்த ரசிகர்கள் நொந்து திரும்புவது வீடு.