சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் முடிவுகள் என்ன இருக்கும் என்பதை தமிழகமே உற்று நோக்கி காத்திருக்கிறது, இதற்கு முக்கிய காரணம், அங்கே சுமார் 20 வருடமாக திமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அமைச்சர் பெரியகருப்பன், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் மிக கடுமையாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அந்த வகையில் அமைச்சர் பெரியகருப்பன் கண்ணில் விரலை விட்டு ஆட்டிவிட்டார் திருமாறன் ஜி என்றே சொல்லும் வகையில், சினிமா படத்தில் வரும் மரண பயத்தை கட்டிட்டாங்க பரமா என்பது போன்று, பெரியகருப்பனுக்கு தோல்வி பயத்தை அவர் கண்ணில் காட்டியவர் அவரை எதிர்த்து தாமரை சின்னத்தில் போட்டியிட்டு களம் கண்ட திருமாறன் ஜி என்கிறது திருப்பத்தூர் அரசியல் கள நிலவரம்.

பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் வரை திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் திருமாறன் ஜி போட்டியிடுகிறார் என்பது உறுதி செய்யப்படவில்லை, மதுரையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் திருமாறன் ஜி பலரும் எதிர்பார்த்த நிலையில், அமைச்சர் பெரியகருப்பனை எதிர்த்து களம் காண கூடிய சரியான நபர் திருமாறன் ஜி தான் என்பதை பாஜக தலைமை முடிவு செய்து திருப்பத்தூர் தொகுதியை திருமாறன் ஜி க்கு டிக் செய்தது.
வாக்கு பதிவுக்கு 15 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் திருப்பத்தூர் தொகுதியில் களம் இறக்கப்பட்டார் திருமாறன் ஜி, மறுப்பக்கம் சுமார் 20 வருடம் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் அதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவார் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பெரியகருப்பன். இப்படி ஒரு சூழலில் திருப்பத்தூர் தொகுதியில் திருமாறன் ஜி போட்டியிடுகிறார் என்கிற வேட்பாளர் பட்டியல் வெளியான அடுத்த இரண்டே நாட்களில், அதாவது அடுத்த 48 மணி நேரத்தில் திருப்பத்தூர் தொகுதி மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கிய திருமாறன் ஜி.
திருப்பத்தூர் தொகுதியில் களம் இறங்கிய மூன்றாவது நாள் அமைச்சர் பெரியகருப்பனுக்கு கடும் போட்டியாளராக உருவெடுத்தார், ஒருபக்கம் திருமாறன் ஜி திருப்பத்தூர் தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து 20 வருடமாக அமைச்சர் பெரியகருப்பன் இந்த தொகுதி மக்களை எப்படி வஞ்சித்து ஏமாற்றுகிறார் என்பதையும், மேலும் அந்த தொகுதி எந்த அளவுக்கு பின்னடைவில் இருப்பதையும் மக்களுக்கு பிரச்சாரம் மூலம் தெரியப்படுத்தினார்.
மறுப்பக்கம் திருப்பத்தூர் தொகுதியில் திருமாறன் ஜியின் டிஜிட்டல் பிரச்சாரம் மக்கள் மத்தியில் மிக வேகமாக ரீச் ஆனது, திருப்பத்தூர் தொகுதிக்குள் மக்கள் சமூக வலைதள பக்கம் சென்றாலே திருமாறன் ஜியின் தேர்தல் பிரச்சாரம் தான் என்று சொல்லும் வகையில், அந்த தொகுதி மக்களும் திருமாறன் ஜி தேர்தல் பிரச்சார வீடியோக்களை அதிக சேர் செய்து தங்கள் ஆதரவை தெரிவிக்க, இதன் பின்பு தோல்வி பயத்தில் பிரச்சாரத்தை தீவிர படுத்தினார் பெரியகருப்பன்.
ஆனால் திருப்பத்தூர் தொகுதி மக்கள் திருமாறன் ஜிக்கு கொடுத்து வரவேற்பை பெரியகருப்பனுக்கு கொடுக்கவில்லை, வாக்கு கேட்டு சென்ற பல இடங்களில் அமைச்சர் பெரியகருப்பன் அந்த பகுதி மக்களால், 20 வருடமாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து எங்களுக்கு என்ன செய்து கிழித்தாய் என்று விரப்பட்டார் பெரியகருப்பன்.
அந்த அளவுக்கு திருமாறன் ஜியின் தேர்தல் பிரச்சாரம் அந்த தொகுதி மக்கள் மத்தியில் மிக பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது, அந்த வகையில் திருப்பத்தூர் தொகுதி திருமாறன் ஜிக்கு சாதகமாக இருந்தது வந்தது, இந்நிலையில் வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன், மக்களின் வாக்குகளுக்கு விலை வைக்க மாட்டேன் என்பதில் கடைசி வரை திருமாறன் ஜி உறுதியாக இருக்க, மறுப்பக்கம் தோல்வி பயத்தில் வாக்குக்கு பணம் கொடுத்தார் பெரியகருப்பன். இப்படி ஒரு சூழலில் திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெறப்போவது திருமாறன் ஜியின் ஜனநாயகமா.? அல்லது அமைச்சர் பெரியக்கறுப்பனின் பணநாயகமா.? என்பது மே 4ம் தேதி தெரியவரும்.

