கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய அதிரடி சோதனையில் உதயநிதி ஸ்டாலினை நெருங்கும் வகையில் அவருடைய நெருங்கிய கூட்டாளியான ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கர் ஆகியோரை கைது செய்ய தீவிரமானது அமலாக்கத்துறை, ஆனால் அமலாக்கத்துறை நெருங்குவதை அப்போதைய திமுக அரசின் உளவுத்துறை கொடுத்த தகவலின் படி ஆகாஷ் பாஸ்கர் ரத்தீஷ் ஆகியோர் தப்பித்து தலைமறைவானார்கள்.
அதற்கு அடுத்ததாக அவசர அவசரமாக நீதிமன்றம் சென்று அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை பெற்றது திமுக அரசு, இதனால் உதயநிதி ஸ்டாலினை அமலாக்கத்துறை நெருங்குவதிலிருந்து தற்காலிகமாக பாதுகாத்துக் கொண்டது அப்போதைய திமுக அரசு. ஆனால் கடந்த முறை அமலாக்கத்துறை கோட்டை விட்டது போன்று நாம் கோட்டை விட்டு விடக்கூடாது என்பதில் மிக தீவிரமாக லஞ்ச ஒழிப்புத்துறையை களம் இறக்கி இருக்கிறார் முதல்வர் விஜய் என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை செந்தில் பாலாஜி தொடர்பான இடங்களில் நடத்திய அதிரடி சோதனை முழுக்க முழுக்க அமலாக்கத்துறை கடந்த திமுக ஆட்சியில் நடத்திய டாஸ்மாக் முறைகேடு தொடர்பான ரெய்டின் தொடர்ச்சி தான் என்று கூறப்படுகிறது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜியின் நெருக்கமான வலது கரங்கள் தற்போதைய லஞ்ச ஒழிப்பு சோதனையின் மூலம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும்,
மேலும் கடந்த திமுக ஆட்சியில் விழுப்புரத்தை ஒட்டிய ஒரு கடையில் இருந்த மது பாட்டில்கள் ஆறு லட்சத்திற்கு அரசாங்கத்திற்கு கணக்கு காட்ட பட்ட பாட்டில்கள் என்றும் ஏழரை லட்சத்திற்கு கணக்கில் வராத பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இப்படி ஒரு கடைக்கு மட்டுமே இவ்வளவு பெரிய முறைகேடு என்றால் தமிழகம் முழுவதும் எவ்வளவு என்று கணக்கு போட்டால்,
அமலாக்கத்துறைக்கும் லஞ்ச ஒழிப்பு துறைக்கும் தலையே சுற்றுகிறது என தகவல் வெளியாகிறது, குறிப்பாக டாஸ்மாக் தொடர்பான ட்ரான்ஸ்போர்ட், காலி பாட்டில்கள் மற்றும் கொள்முதல் என மொத்த ஊழலின் உருவமாக டாஸ்மாக் நிறுவனம் கடந்த திமுக ஆட்சியில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் செந்தில் பாலாஜி இந்த ரெய்டு குறித்து மடியில் கனமில்லை வழியில் பயம் இல்லை என்று சொன்னாலும் கூட,
அவசர அவசரமாக ஜாமீன் மனு கேட்டு நீதிமன்றம் சென்றதெல்லாம் கைது பயத்தின் உச்சம் என கூறப்படுகிறது, இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்த பின்பு ஏவ வேலு தொடர்பான இடங்களில் ரெய்டு நடத்தியதில் ஏவ வேலு கைது செய்ய முடியாமல் கோட்டை விட்டது தவெக அரசு,
அதே போன்ற ஒரு நிலை மீண்டும் வந்து விடக்கூடாது என தற்போது உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான ரத்தீசை லஞ்ச ஒழிப்புத்துறை நெருங்கி விட்டதாகவும், கடந்த அமலாக்கத்துறை சோதனையின் போது எட்டு லேப்டாப் மற்றும் செல்போன்கள் கைப்பற்றிய நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை ரத்தீஷ் மூலம் உதயநிதி ஸ்டாலினை கைது வரை கொண்டு செல்ல வேண்டும்.
குறிப்பாக கடந்த ஜெயலலிதா ஆட்சியில் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டது போன்று உதயநிதி ஸ்டாலினை கைது செய்வதற்கு தவெக அரசு மும்மூரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் சிக்குவது உதயநிதி மட்டுமில்லை மொத்த குடும்பமும் தான் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.

