அண்ணா பிறந்த தினத்தையொட்டி திமுக சார்பில் நடைபெற இருந்த முப்பெரும் விழா திமுக தலைவர் முக ஸ்டாலின் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் ரத்து செய்யப்படுவதாகவும், மாற்று தேதி பின்பு அறிவிக்கப்படும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மூலம் அறிவிப்பு வெளியானது, தீடிரென திமுக முப்பெரும் விழா ரத்து செய்யப்பட்டது பின்னணி காரணம் என மிக பெரிய பரபரப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டது.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியை தழுவி தற்பொழுது சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாமல், சட்டமன்ற பக்கமே செல்ல வாய்ப்பில்லாமல் முடங்கி போய் உள்ளார், அதே நேரத்தில் தற்பொழுது நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்பு, திமுகவின் கட்டுப்பாடு மெல்ல மெல்ல உதயநிதி கட்டுக்குள் வந்து விட்டது என கூறப்படுகிறது.

திமுக மூத்த தலைவர்கள் பலரும் முக ஸ்டாலினிடம் இருந்த நெருக்கத்தை குறைத்து கொண்டு உதயநிதி ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு திமுக தலைவராக இருந்த கருணாநிதி தன்னுடைய வாழ்நாள் முழுவதும் திமுக தலைவராக, திமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டிலே வைத்து இருந்தார், ஆனால் கொளத்தூர் தொகுதி தோல்விக்கு பின்பு, தமிழக அரசியலில் முக ஸ்டாலினுக்கு ரோல் இல்லாமல் போய்விட்டது என்கிற சூழல் உருவாகி இருக்கிறது.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை கூட்ட தொடரில் முதல்வர் விஜய் மிசா குறித்து பேசிய பேச்சு மிக பெரிய சர்ச்சையாக வெடித்தது,இதை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்த வேண்டும் என்று உதயநிதி முடிவு செய்த போது கூட முக ஸ்டாலின் வேண்டாம் என்று தான் தெரிவித்து இருக்கிறார், ஆனால் அதையும் மீறி தான் இந்த ஆர்ப்பாட்டம் உதயநிதி உத்தரவின் பேரில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அப்படி நடந்த ஆர்ப்பாட்டத்தில், அதாவது முக ஸ்டாலினின் மிசா கைது குறித்து சர்ச்சை கூறிய வகையில் பேசிய முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவை சேர்ந்த அ ராசா, சேகர் பாபு ஆகியோரின் வரம்பு மீறிய பேச்சு, திமுகவினர் மன்னிப்பு கேட்கும் சூழலுக்கு தள்ளப்பட்டது, இறுதியில் மிசா சர்ச்சையை விட திமுகவினர் பேசிய சர்ச்சை மிக பெரிய அளவில் எதிர்ப்புக்கு உள்ளானது.
இப்படி தொடர்ந்து முக ஸ்டாலினின் விருப்பத்திற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் மேலும் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் திமுகவினர் பேசிய பேச்சு முக ஸ்டாலினை கோபம் அடைய செய்தாலும் கூட, தவெக மற்றும் முதல்வர் விஜய்க்கு எதிராக திமுகவினர் வரம்பு மீறி விமர்சனம் செய்வதை உதயநிதி ஸ்டாலின் விரும்புவதாகவும் அதனால் தான் சேகர் பாபு கூட உதயநிதி மனதில் இடம் பிடிக்க உணர்ச்சி பொங்க பேசி தற்பொழுது வழக்கு மேல் வழக்கு வாங்கி இருக்கிறார்.
இபப்டியான ஒரு நிலையில் தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் நிலை தடுமாறி ஓடி கொண்டிருக்கும் திமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்பு தான் திமுகவின் முப்பெரும் விழா என்கிற முடிவுக்கு வந்த முக ஸ்டாலின் , தற்காலிகமாக திமுக நடத்த இருந்த முப்பெரும் விழாவை ரத்து செய்ய சொல்லி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு உத்தரவிட்டு இருந்திருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் முக ஸ்டாலின் உடல்நிலை நன்றாகவே உள்ளது என்றும், அவர் யோக, வாக்கிங் என தொடர்ந்து உடல் பயிற்சி மூலம் தன்னுடைய உடல் நலத்தை கவனமாக பார்த்து வருவதால், அவருக்கு உடல்நிலை பிரச்சனை எல்லாம் இல்லை, உதயநிதி மற்றும் திமுக முக்கிய தலைவர்களின் செயல்பாடுகள் மீது இருக்கும் அதிருப்தியில் காரணமாக தான் திமுக முப்பெரும் விழாவை ரத்து செய்ய சொன்னதாக கூறப்படுகிறது.

