நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலுக்கு பின்பு முதல்வர் விஜய்யை சமாளிக்க முடியமால் தவித்து வரும் திமுக, விஜயை எதிர்கொள்ள பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது, GENZ கிட்ஸ் தான் பெரும்பாலானோர் விஜய் வாக்களித்து முதல்வராக அமரவைத்துள்ளார்கள், ஆகையால் GENZ தலைமுறையை கவர்வதற்கு GENZ DMK என ஒன்றை உருவாக்கி அதுவும் திமுகவுக்கு பேக் FIRE ஆகி அதுவும் இழுத்து மூடப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் விஜய் சேதுபதியின் பேச்சு மிக பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது, அதில் அவர் “தலைவர் என்றால் என்ன?” என்ற அடிப்படையில் பேசிய விஜய் சேதுபதி, வெறுமனே பேசிக் கொண்டிருப்பது மட்டும் தலைமைத்துவம் கிடையாது. பிரச்சனை அல்லது பொறுப்பு வரும்போது அதிலிருந்து தெறித்து ஓடுவது தலைவருக்கு அழகல்ல.

கொடுத்த வாக்குறுதிகள் மற்றும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு செயல்படுவதுதான் தலைமை. பிரச்சனை வந்ததும் எதிரணி மீது பழியைப் போட்டு விட்டு விலகிச் செல்வது தலைமை அல்ல என விஜய் சேதுபதி பேசிய இந்த பேச்சு மிக பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது, அதில் பிரச்சனை வந்தால் தெறித்து ஓடுபவர் தலைவர் இல்லை; வெறும் வாக்குறுதிகளை கொடுப்பது மட்டும் தலைமை அல்ல” என்று விஜய் சேதுபதி பிக் பாஸ் மேடையில் பேசிய கருத்துகள்,
முதலமைச்சர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்தாரா என்ற அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும் விஜய் சேதுபதி பேசிய இந்த சர்ச்சை பேச்சை பல முறை திமுகவினர் பலரும் மேடைகளில் பேசி வருவதால், திமுகவின் அதேபோன்று விஜய் சேதுபதி பேசி இருப்பது திமுகவின் குரலாகவே ஒலித்த இருக்கிறார் விஜய் சேதுபதி என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் முதல்வர் விஜய்யை சீண்டும் வகையில் விஜய் சேதுபதி பேசி இருக்கும் நிலையில்,
விஜயின் ஆதரவாளர்கள் அவரை சும்மா விடுவார்களா.? விஜய் சேதுபதியை வெச்சு செய்ய தொடங்கி இருக்கிறார்கள், அந்த வகையில் கடந்த வருடம் ரம்யா மோகன் என்கிற பிரபலம் நடிகர் விஜய் சேதுபதி குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்திருந்தார், அதில் கோலிவுட்டில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவது ஜோக் இல்லை.
தற்போது மீடியாவில் பிரபலமாக இருக்கும் எனக்கு தெரிந்த பெண் ஒருவர் தான் எதிர்பார்க்காத உலகத்திற்குள் இழுக்கப்பட்டார். தற்போது அவர் ரீஹேப் சென்டரில் இருக்கிறார். கேரவன் ஃபேவர்களுக்காக ரூ. 2 லட்சம் மற்றும் டிரைவ்ஸுக்காக ரூ. 50 ஆயிரம் கொடுத்திருக்கும் விஜய் சேதுபதி சமூக வலைதளத்தில் புனிதர் மாதிரி நடிக்கிறார். அந்த பெண்ணை பல ஆண்டுகளாக யூஸ் செய்துவிட்டார் விஜய் சேதுபதி.
இது ஒரு கதை மட்டும் அல்ல பல இருக்கிறது. இது போன்ற ஆட்களை மீடியா கொண்டாடுகிறது. டிரக்-செக்ஸ் நெக்சஸ் என்பது ஜோக் இல்லை உண்மை என பதிவு செய்து இருந்தார் ரம்யா மோகன். பின்னர் ட்வீட்டை நீக்கியதுடன் எக்ஸ் தள கணக்கையும் நீக்கிவிட்டார் ரம்யா மோகன். இருந்தாலும் விஜய் சேதுபதியை பற்றி இப்படியொரு புகார் வந்திருக்கிறதே என பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் தற்பொழுது முதல்வர் விஜய்யை விஜய் சேதுபதி சீண்டும் வகையில் பேசி இருந்த நிலையில் தற்பொழுது விஜய் சேதுபதி குறித்து ரம்யா மோகன் ட்விட்டர் பதிவு செய்துருந்த பதிவை எடுத்து வந்து, விஜய் சேதுபதியை வெச்சு செய்து கொண்டிருக்கிறார்கள், விஜய்யின் ஆதரவாளர்கள். இந்நிலையில் விஜய் சேதுபதி தேவையின்றி வாயை கொடுத்து எதையோ புண்ணாக்கி கொண்டிருக்கிறார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

