கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியாக பணிபுரிந்த ஸ்டாலின் என்கிற காவல்த்துறை அதிகாரி எதற்காக மாற்றம் செய்யப்பட்டார் என்கிற மர்மம் நீடித்து கொண்டிருக்கிறது, குறிப்பாக கன்னியாகுமரி மக்கள் மத்தியில் காவல்த்துறை அதிகாரி ஸ்டாலின் மாற்றம் செய்யப்பட்டதர்க்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. எஸ்பி யாக பனி புரிந்த ஸ்டாலின் ஐ பி எஸ் மீது, லஞ்ச புகார் இல்லை, இதர பெரிய புகார்கள் இல்லை, எந்த பெண்ணும் நேரடியாக புகாரும் கொடுக்கவில்லை,
நீதிமன்ற வழக்கு இல்லை எனும்போது சவுக்கு சங்கரின் புகாரை அடிப்படையாக கொண்டு நீக்கபட்டார் என்பது சர்ச்சையே,சவுக்கு சங்கர் போன்றவர்கள் கேமராமுன் அமர்ந்து கொண்டு பேசி மாகாணத்தில் எல்லா அரசமுடிவுகளையும் நிர்ணயம் செய்யமுடியும் என்றால் அதை எப்படி ஏற்றுகொள்ளமுடியும்? அரசும் முறையான நிர்வாகமும் எதற்கு இருக்கின்றன? ஒரு யூடியூபர் ஆதாரம் ஏதுமின்றி அரச துறையின் முடிவுகளுக்கு காரணமாவது கேலி கூத்தாகி உள்ளது.

மேலும் அரசு ஊழியராக இருந்த சவுக்கு சங்கர் அரசு ரகசியமாக பாதுகாத்து வைத்த ஆதாரங்களை கசியவிட்ட காரணத்தால் அரசு வேலையை இழந்தவர், இதற்கு முன்பு பெண் போலீசார் குறித்து தவறாக பேசியதால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர், அதாவது காசு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் பேச கூடியவர் தான் இந்த சவுக்கு சங்கர் என்கிற விமர்சனமும் சவுக்கு சங்கர் மீது உண்டு.
இந்நிலையில் கன்னியாகுமரி எஸ் பி யாக இருந்த ஸ்டாலின் ஐ பி எஸ் மாற்றம் செய்த விவகாரத்தில் தமிழக அரசு எதற்காக மாற்றம் என தகவல் தெரிவிக்கவில்லை, இப்போதைக்கு ஆதாரமில்லா குற்றசாட்டு எஸ்பி மேல் வைக்கபட்டு அவர் அங்கிருந்து மாற்றபட்டு பதவியிறக்கம் செய்யபட்டிருக்கின்றார் என கன்னியாகுமரி மக்கள் ஸ்டாலின் ஐபிஎஸ் க்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.
மேலும் இது போன்ற தமிழக அரசின் நடவடிக்கை சரியல்ல இது மாபெரும் தவறான முன்னுதாரணம் என்பதால் , ஒன்று அவர்மேல் குற்றம் நிருபிக்கபடும் வரை அவர் பதவியில் தொடர்வதே சரி , நிருபிக்க ஆதாரமில்லை என்றால் தவறான தகவலைவெளியிட்டவர்களை சும்மா விடுதலும் சரியல்ல, அந்த வகையில் ஸ்டாலின் ஐபிஎஸ் மீது அவதூறூகளை பரப்பிய சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி மக்கள் மத்தியில் விசாரித்ததில், நல்ல காவல்துறை அதிகாரியாகவே இருந்துள்ளார், நாகர்கோவில் கன்னியாகுமரி என்பது சாதாரண இடம் அல்ல ஒரு மாதிரியான பகுதி அதன் அடந்த மலைவளமும் இதரவளமும் கடல்வளமும் குற்றங்களுக்கு ஏதுவானவை இவை அனைத்தையும் கட்டுக்குள் கொண்டுவந்தவர் ஸ்டாலின் ஐபிஎஸ்.
நாகர்கோவில் சாலைகள் எப்போதுமே நெருக்கடி மிகுந்தவை, இவர்தான் அதனை மாற்றினார், ஆக்கிரமிப்புகளை அகற்றி, இன்று நாகர்கோவில் முதல் பல கன்னியாகுமரி மாவட்ட நகரங்களில் வாகன போக்குவரத்து எளிதானது என்றால் ஸ்டாலின் ஐபிஎஸ் தான், குற்றவாளிகள் எண்ணிக்கை அவரால் குறைந்தன மாவட்டத்தைவிட்டு அவரால் ஓடிய குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகம்
இப்போது அவர் இலக்குவைக்கபட காரணம் முறையற்ற கல்குவாரியின் லாரிகளை முடக்கிபோட்டார், லைசென்ஸ் இல்லா லாரிகள் , அனுமதியற்ற லாரிகள் என எல்லாம் முடக்கி குவாரி கும்பலின் சிம்ம சொப்பணமாக திகழ்ந்தார் மிகுந்த முனைப்போடு கன்னியாகுமரி மாவட்டத்தில் துடிப்போடு தன் கடமையினை செய்த ஒன்றுக்காகவே எல்லா அரசியல்வாதிகள், ஆக்கிரமிப்பாளர்கள் என எல்லோராலும் கூட்டு சேர்ந்து பெரும் பழி சுமந்து அகற்றபட்டிருக்கின்றார் ஸ்டாலின் ஐபிஎஸ் என வருத்தத்தை பகிர்கிறார்கள் கன்னியாகுமரி மக்கள்.

