அன்பில் மகேஷ் மனைவி கிட்ட தான் கொடுத்தேன்… அரசகுமார் வாக்குமூலம்… 300,00,000.00 கோடி சீட்டிங்…

0
Follow on Google News

திமுக ஆட்சி காலத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்த்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சோதனைக்கு பின்னனியில் ஏற்கனவே கடந்த திமுக ஆட்சியில் பள்ளி கல்வி துறையில் நடந்த முறைகேடுகளில் சிக்கி சிறையில் இருக்கும் பி டி அரசகுமார் குடுத்த வக்குமூலத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டு வருகிறது.

கடந்த திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் சுமார் 117 பள்ளிகளிடம், அரசு அங்கீகாரம் பெற்று தருகிறோம், உங்கள் கல்வி நிறுவனத்தின் தரத்தை உயர்த்தி தருகிறோம் என்று, சுமார் 300 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார் பி அரசகுமார் மற்றும் முத்துக்குமார் இருவரும், இதில் பிடி அரசகுமார் A 1 குற்றவாளியாக இணைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் A 2 குற்றவாளியான முத்துக்குமார் தலைமறைவாக உள்ளார்.

இதே வழக்கில் போலீஸ் மிகவும் தீவிரமாக தேடி வரும் A2 முத்துக்குமார், அன்பில் மகேஷின் பள்ளி நண்பர். 2011-ல் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, விருத்தாசலம் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ.வா இருந்தவர். பின்பு திமுகவில ஐக்கியமாகி அன்பில் மகேஷுக்கு மிக நெருக்கமானவராக இருந்தார். பிடி அரசகுமார் நடத்தி வந்த அந்த மோசடி சங்கத்தின் பொருளாளராக இருந்த முத்துக்குமாருக்கு இவருக்கு எதிராகத்தான் போலீஸ் லுக் அவுட் நோட்டீஸும் வெளியிட்டு உள்ளது.

முத்துக்குமார் தற்பொழுது மும்பையில் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது தீடிரென அன்பில் மகேஷ் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை பின்னணி குறித்து சில தகவல் வெளியாகி உள்ளது.குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள பி டி அரசகுமாரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு உண்மைகளை போட்டுடைத்துள்ளார்.

அதில் தாங்கள் வசூலித்த பணம் பெரும் தொகையை முன்னாள் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மனைவியிடம் தான் கொடுத்தோம் என்று பி டி அரசகுமார் விசாரணையில் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, இதன் அடிப்படையில் தான் அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் கடந்த திமுக ஆட்சியில் சுமார் 300 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்திய பி டி அரசகுமார் , அதில் பெரும் தொகையை அன்பில் மகேஷ் மனைவி யிடம் கொடுத்துவிட்டோம் என வாக்குமூலம் கொடுத்துள்ளதால், இந்த மோசடி விவகாரத்தில் முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் என குடும்பத்துடன் சிக்கி இருக்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தன்னை காப்பாற்றி கொள்ள பல்வேறு வகையில் முயற்சி செய்த அன்பில் மகேஷ் ஒரு கட்டத்தில் முதல்வர் விஜயிடம் நேரடியாக அவரை சுற்றி இருக்கும் நபர்கள் மூலம் உதவி கேட்டு இருக்கிறார், ஆனால் முதல்வர் விஜய் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது, குறைந்தது தீபாவளிக்கும் 5 முன்னாள் திமுக அமைச்சர்களை சிறையில் அடைக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறாராம் விஜய்.

மேலும் தற்பொழுது அன்பில் மகேஷ் விவகாரத்தில், மும்பையில் பதுங்கி இருக்கும் அன்பில் மகேஷ் நண்பரான முத்துக்குமார் இருக்கும் இடத்தை தமிழக போலீசார் கண்டுபிடித்துள்ளதாகவும், விரைவில் அவரை கைது செய்ய இருக்கும் தமிழக போலீசார், எந்த நேரத்திலும் இந்த மோசடி தொடர்பாக முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் கைது செய்யலாம் என்கிற பரபரப்பு நீடித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here