விஜய் அனுப்பி ஒற்றை கடிதம்… மோடிக்கு எதிர்ப்பாராத ட்விஸ்ட்… உலகே வியக்கும் தமிழகம்…

0
Follow on Google News

ஒரு விமான நிலையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து, தனியார் நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு அல்லது PPP முறைக்கு மாற்றப்படும்போது, அதன்மூலம் விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள் வேகமாக மேம்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும், தனியார் நிறுவனங்கள் அந்த விமான நிலையத்தில் முதலீடு செய்வதன் மூலம் புதிய டெர்மினல்கள்,

விரிவாக்கப்பட்ட ஓடுதளங்கள், நவீன தொழில்நுட்ப வசதிகள், அதிக பயணிகள் கையாளும் திறன், சரக்கு கையாளும் வசதிகள் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட வாய்ப்புள்ளது, இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற தனியார் பங்கேற்பு கொண்ட விமான நிலையங்களில் உள்கட்டமைப்பு மற்றும் சேவைத் தரம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தப்பட்டு இன்று உலக நாடுகளுக்கு சவாலாக இந்த விமான நிலையங்கள் திகழ்கிறது.

மேலும் விமான நிலையம் மேம்படுத்தப்படுவதால், அதிக விமானங்கள் இயக்கப்பட்டு சுற்றுலா, ஏற்றுமதி, தொழில் முதலீடுகள், ஹோட்டல் மற்றும் வர்த்தகத் துறைகள் வளர்ச்சி பெறும். விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேலைவாய்ப்புகளும் புதிய வணிக வாய்ப்புகளும் உருவாகும். அதே நேரத்தில், தனியார்மயமாக்கல் என்பது விமான நிலையத்தை முழுமையாக தனியாருக்கு விற்பனை செய்வது என்பதல்ல.

இந்தியாவில் பல விமான நிலையங்கள் PPP அல்லது நீண்டகால குத்தகை முறையில் தனியார் நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன; பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் தொடர்ந்து அரசின் கீழ் இருக்கும். அதனால், சரியான ஒப்பந்த நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் தனியார் நிர்வாகம் கொண்டுவரப்பட்டால், ஒரு விமான நிலையத்தின் பயணிகள் திறன், சேவைத் தரம், முதலீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பொருளாதார வளர்ச்சி ஆகியவை வேகமடைய வாய்ப்பு உள்ளது.

இதை கருத்தில் கொண்டு தான் சென்னை விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் நிர்வாக அமைப்பில் திருப்தி இல்லை என கூறி தமிழ்நாடு அரசு சார்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் விஜய் சார்பில் அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தில்,

இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு பதிலாக வேறு ஒரு தனியாரிடமோ அல்லது வேறு நிறுவனத்திடமோ விமான நிலைய நிர்வாகத்தை ஒப்படைக்குமாறு மத்திய அரசை முதலமைச்சர் விஜய் கேட்டு கொண்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாடு எப்போதும் தொழில்துறைக்கு உகந்த மாநிலமாகவும், வணிகம் மற்றும் முதலீடுகளை ஈர்க்க தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவரும் மாநிலமாகவும் திகழ்கிறது.

இத்தகைய சூழலில் விமான நிலையத்தை மிக சிறப்பாக நிர்வகிப்பது மிகவும் இன்றியமையாதது என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தங்கம் விலை ரூ.3.50 லட்சத்தை எட்டும்: அடித்து சொல்லும் Jefferies நிபுணர் கிறிஸ் வுட்..!!பயணிகளின் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம் மற்றும் சரக்கு கையாளுதல் ஆகிய எந்த கோணத்தில் பார்த்தாலும், சென்னை விமான நிலையத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் மேம்பாடும் தேவைப்படுகிறது.

இதை கருத்தில்கொண்டுதான் விமான நிலையத்தின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் எதிர்க்கட்சிகள் என்னமோ சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு தாரைவார்த்து விட்டார் முதல்வர் விஜய் என்கிற நோக்கில் மக்களை குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.