கடத்த திமுக ஆட்சி காலத்தில் டாஸ்மாக் தொடர்புடைய இடங்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடந்த அமலாக்க துறையின் அதிரடி சோதனையில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது, அப்போது நடந்த இந்த சோதனை உதயநிதி ஸ்டாலினை குறிவைத்து தான் நடத்தப்பட்டது என்று பரவலாக பேசப்பட்டு வந்தது, அந்த வகையில் அமலாக்க துறை டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக உதயநிதி நண்பர் ரத்தீஷ் தொடர்பு இருப்பதை கண்டு பிடித்தது.
இதனை தொடர்ந்து ரத்தீஷை அமலாக்க துறை நெருங்குவதை அறிந்து கொண்டு வெளிநாடு தப்பி சென்று தலைமைறைவானர் ரத்தீஷ், இந்நிலையில் அமலாக்க துறை நடத்திய அதிரடி சோதனையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரி விசாகம் மற்றும் உதயநிதி நெருங்கிய நண்பரான ரத்தீஷ் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து கொண்டது, மேலும் டாஸ்மாக் தொடர்பான இடங்களில் நடைபெற்ற அதிரடி சோதனையில் சுமார் ஆயிரம் கோடி வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதனை தொடர்ந்து ரத்தீஷ் அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்டு அதன் மூலம் உதயநிதியை தட்டி தூக்க அமலாக்கதுறை ஆயத்தமாக இருந்தது, ஆனால் திமுக தரப்பில் இருந்து அமலாக்க துறை டாஸ்மாக் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள இடைக்கால தடையை பெற்றது, இதனை தொடர்ந்து தற்காலிகமாக ரத்தீஷ் அவரை தொடர்ந்து சிக்க இருந்த உதயநிதி இருவரும் தப்பித்து கொண்டனர்.
இந்நிலையில் தற்பொழுது தமிழகத்தில் நடந்துள்ள ஆட்சி மாற்றத்திற்கு பின்பு மீண்டும் கடந்த திமுக ஆட்சியில் அமலாக்க துறை நடத்திய டாஸ்மாக் தொடர்பான சோதனையை தூசி தட்ட தொடங்கி இருக்கிறது தற்போதைய முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தமிழக லஞ்ச ஒழிப்பு துறை மூலம் ஆட்டத்தை தொடங்கி இருக்கும் தவெக அரசு இந்த வழக்கில் ஏற்கனவே ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
மேலும் உதயநிதி ஸ்டாலின் நெருங்கிய நண்பரான ரத்தீஷ் என்பவரை கைது செய்யும் நோக்கில் மிக தீவிரமாக தேடுதல் வேட்டையை தொடங்கி இருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரி விசாகன் தலைமறைவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாகன் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக கூறிவிட்டு வீட்டில் இல்லாதது தெரியவந்ததை அடுத்து,
அவரை வளைத்து பிடிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். அவர் தற்போது எங்கு பதுங்கியிருக்கிறார் என்பது குறித்து தமிழக உளவுத்துறை மிக தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்நிலையில் தலைமைறைவாக இருக்கும் இருக்கும் ஐ ஏ எஸ் அதிகாரி விசாகன், மற்றும் உதயநிதி நண்பர் ரத்தீஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணையை தொடங்கினால் , அவர்களுக்கும் உதயநிதிக்கு இருக்கும் தொடர்பு குறித்த அதரங்களை உறுதி செய்து உதயநிதியை இந்த வழக்குக்குள் கொண்டு வந்து கைது செய்து விடலாம் என்பதே தற்போதைய தவெக அரசின் திட்டம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தற்பொழுது மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டுமே திமுகவுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் ரத்தீஷ் சிக்கினால் உதயநிதிக்கு பெரும் சிக்கல் தான் ஏற்படும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
மேலும் ஏற்கனேவே செந்தில் பாலாஜி முன்ஜாமீன் பெற்றுள்ள போதிலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற முக்கிப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளை விரைவில் கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளது. முறைகேடு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரியே தலைமறைவாகியுள்ள சம்பவம் தமிழக அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
