விஜய் பிரிக்கும் வாக்குகள்…. யாருக்கு சாதகம்.? யாருக்கு பாதகம்.? … இதோ முழு அலசல்..

0
Follow on Google News

நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலுக்கு பின் , அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தரப்பில் முக்கியமான மனநிலை மாற்றம் காணப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்த குழப்பங்களும் சவால்களும் தற்போது ஒரு நம்பிக்கையாக மாறத் தொடங்கியுள்ளன. மேலும் அரசியல் நிபுணர்கள் பார்வையில், தற்போதைய நிலவரம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான பாதையை உருவாக்கி வருகிறது.

இதற்கிடையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை இந்த தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக பார்க்கப்படுகிறது. இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் அவரது முடிவு, பல்வேறு அரசியல் கணக்குகளை மாற்றியமைத்துள்ளது. குறிப்பாக, பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்ற மதிப்பீட்டை அரசியல் ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்.

இந்த மதிப்பீடு சாதாரணமான ஒன்றல்ல. நகர்ப்புற வாக்காளர்களிடையே விஜய்க்கு உள்ள ஆதரவு, இளைஞர்களின் ஈர்ப்பு, மற்றும் புதிய மாற்றத்தைக் கோரும் மனநிலை என இவை அனைத்தும் சேர்ந்து பெரம்பூரில் அவருக்கு முன்னிலை உருவாக்கும் என அரசியல் நிபுணர்கள் கணக்கிடுகின்றனர்.

இதன் பின்னணியில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. விஜய்யின் வருகை எந்தக் கட்சியின் வாக்குகளை அதிகமாக பாதிக்கும்? அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் பிரியும் சூழல் உருவாகுமா? அல்லது திமுகவின் வெற்றிப் பாதையில் தடையாக மாறுமா? என்கிற கேள்விக்கு மத்தியில் இதை அரசியல் ஆய்வாளர்கள் இதை மிகவும் நுணுக்கமாகப் பார்க்கின்றனர்.

ஒரு தரப்பு, விஜய்யின் வருகை எதிர்க்கட்சிகளின் வாக்குகளை சிதறடிக்கும் என்று கருதுகிறது. மற்றொரு தரப்பு, இது திமுகவின் நேரடி வாக்கு வங்கிக்கே பாதிப்பு ஏற்படுத்தும் என மதிப்பிடுகிறது. குறிப்பாக, நகர்ப்புற நடுத்தர வர்க்கம் மற்றும் முதல் முறை வாக்களிக்கும் இளைஞர்கள் இடையே ஏற்படும் மாற்றம் இந்த தேர்தலில் முடிவுகளை மாற்றக்கூடியதாக இருக்கலாம்.

இந்த சூழ்நிலையில், சீனியர் அரசியல் வல்லுநர்கள் முன்வைக்கும் கணக்குகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு உறுதியான நம்பிக்கையை அளிக்கின்றன. தேர்தல் முடிவுகள் அவருக்கு சாதகமாக அமையலாம் என்ற எதிர்பார்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு மகிழ்ச்சியை கொடுத்து வருகிறது.இப்படி மொத்தத்தில் பார்க்கும்போது, விஜய்யின் அரசியல் வருகை இந்த தேர்தலை வழக்கமான போட்டியிலிருந்து விலக்கி, மூன்றாவது சக்தி உருவாகும் சாத்தியத்தை உருவாக்கியுள்ளது.

இப்படி ஒரு பரபரப்பான சூழலில், விஜய் யாருடைய வாக்குகளை அதிகம் பிரித்துள்ளார், அதிமுக கூட்டணி வாக்குக்களையா.? அல்லது திமுக கூட்டணி வாக்குகளா.? என்பது தெரியவந்தாலே தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள், அந்த வகையில் யார் ஆட்சியை பிடிக்க போகிறார்கள் என்பது அந்தந்த கட்சியின் கையில் இல்லை விஜய் பிரிக்க இருக்கும் வாக்குகளை பொறுத்தே தேர்தல் முடிவுகள் அமையும் என கணிக்கப்படுகிறது.

குறிப்பாக முன்பு எப்போதும் இல்லாத வகையில் இது போன்ற ஒரு கடினமான போட்டியை தமிழகம் கண்டிருக்காது என்று சொல்லும் வகையில் விஜயின் அரசியல் வருகை அதிமுக – திமுக இரன்டு கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சிக்கு ஜாதகமாகவும் , மற்றொரு கட்சிக்கு பாதகமாகவும் அமைய இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here