நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தல் குறித்த ரிப்போர்ட் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனத்திற்கு சென்று இருக்கிறது. அதாவது தேர்தலுக்கு முன்பு பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவித்த பின்பு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை அமித்ஷாவின் டேபிளுக்கு தமிழக தேர்தல் நிலவரம் குறித்த ரிப்போர்ட் தொடர்ந்து சென்று கொண்டே இருந்திருக்கிறது.குறிப்பாக பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் குறித்த ரிப்போர்ட் அமித்சாவின் கவனத்திற்கு தொகுதி வாரியாக சென்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் தேர்தலுக்கு முன்பு பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ள அவிநாசி, கோவை வடக்கு , மொடக்குறிச்சி, பத்மநாதபுரம் நாகர்கோவில், விளவங்கோடு, சாத்தூர், திருப்பத்தூர் போன்ற தொகுதிகள் பாஜக தரப்பில் மிக ஸ்ட்ராங்கான வேட்பாளர்கள், எதிர்த்தரப்பிற்கு மிக கடுமையான போட்டியாளராக உருவெடுத்து இருக்கிறார்கள் என்கின்ற ரிப்போர்ட் தேர்தலுக்கு முன்பு அமித்ஷா கவனத்திற்கு சென்று இருக்கிறது.

மேலும் ஒரு சில தொகுதிகள் மிக கடினமாக இருக்கிறது என்கின்ற ரிப்போர்ட்டும் சென்று இருக்கிறது, இன்னும் ஒன்றிரெண்டு தொகுதிகள் வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் என்கின்ற ரிப்போர்ட்டும் அமித்ஷா கவனத்திற்கு சென்று இருக்கிறது, அதாவது சம்பந்தப்பட்ட அந்த தொகுதியில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது.
இருந்தாலும் அந்த மாவட்ட பாஜகவினரும் மற்றும் அந்த தொகுதி மக்களும் விரும்பப்படாத ஒரு வேட்பாளர், அந்த தொகுதியில் வேட்பாளர் சார்த்த சமூகம் 500 ஓட்டு கூட இல்லாத ஒரு வேட்பாளரை நிறுத்தியதன் மூலம் அது பாஜகவுக்கு கடினமான போட்டியாக உருவெடுத்திருக்கிறது, இருந்தாலும் சம்பந்த பட்ட அந்த வேட்பாளர் சீட் வாங்கி கொண்டு ஓட்டலில் ரூம் போட்டு வெயில் தள மலை சுமார் 1 மணி நேரம் அதிக பட்சம் இரண்டு மணி நேரம் பிரச்சாரம் மேற்கொண்டாலும் கூட,
தாமரை சின்னம் போட்டியிடுகிறது , பாஜக போட்டியிடுகிறது என்கிற அர்ப்பணிப்போடு, ஆர் எஸ் எஸ் மற்றும் அந்த மாவட்டத்தை சேந்த பாஜக சீனியர் தலைவர்கள் முதல் நிர்வாகி முதல் தீவிரமாக வேலை செய்தது குறித்து ரிபோர்டும் தேர்தலுக்கு பின்பு அமித்ஷா கவனத்துக்கு சென்று இருக்கிறது.
இப்படியான பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதி கூட வேட்பாளரின் இந்த செயலால் பின்னடைவை சந்திக்கும் சூழல் உள்ளது என்கிற ரிபோர்டும் அமித்ஷா கவனத்துக்கு சென்று இருக்கிறது. இப்படியான சூழலில் தேர்தல் முடிந்த பின்பு அமித்ஷா கவனத்திற்கு சென்ற ரிப்போர்ட்டில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்கின்ற உளவுத்துறை ரிப்போர்ட் சென்று இருக்கிறது.
குறிப்பாக தேர்தல் நேரங்களில் ஆளும் திமுக தரப்பு பாஜக வேட்பாளருக்கு கொடுக்கப்பட்ட கடும் நெருக்கடி, அதையும் மீறி பாஜக வேட்பாளர்கள் களப்பணியாற்றது அனைத்துமே ஒவ்வொன்றும் அமித்ஷா கவனத்திற்கு சென்றிருக்கிறது, குறிப்பாக தற்பொழுது தவெக எதிர்பாராத வகையில் ஓட்டுகளை பிரிக்கும் என்றும், அதே நேரத்தில் பெரும்பாலும் திமுக வாக்குகளையே தமிழக வெற்றி கழகம் பிரிக்கும் என்கின்ற ரிப்போர்ட் அமித்ஷா கவனத்திற்கு சென்றிருக்கிறது.
இது மட்டுமல்லாமல் சில தொகுதிகளில் திமுகவினரின் உள்ளடி வேலைகள் மற்றும் திமுகவின் உட்கட்சி பிரச்சனை அதுமட்டுமல்லாமல் திமுக வாக்குகளை தமிழக வெற்றி கழகம் பிரிப்பது மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி பலம் இவை அனைத்துமே இந்த முறை நிச்சயம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்கின்ற ரிப்போர்ட் அமித்ஷா கவனத்திற்கு சென்று இருக்கிறது.

