தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றும் ஒரே தொகுதி… இந்த ஒரு தொகுதி தான்… ஆட்சியை நிர்ணயம் செய்யும் தொகுதி…

0
Follow on Google News

இந்திய அரசியலில் அடிக்கடி கேட்கப்படும் ஒரு முக்கியமான சொல் தான் “Bellwether Assembly”.இதில் “Bellwether” என்ற ஆங்கில வார்த்தை, ஒரு கூட்டத்தை வழிநடத்தும் ஆட்டுக்குட்டியை குறிக்கிறது. அதேபோல், “Bellwether Assembly constituency” என்பது — ஒரு மாநிலத்தில் அல்லது நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பதை முன்கூட்டியே காட்டும் தொகுதி.

எளிமையாக சொன்னால்: அந்த தொகுதியில் எந்த கட்சி வேட்பாளர் வென்றாலும், பெரும்பாலும் அந்த கட்சிதான் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும், அப்படி “Bellwether Assembly”.யாக தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி அறியப்படுகிறது. இந்த தொகுதியில் யார் வெற்றி பெறுகிறார்களோ , அந்த கூட்டணி கட்சி தான் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து வருகிறது என்பது மறுக்க முடியாத வரலாறு.

அந்த வகையில் கடந்த 1971 முதல் கடந்த 11 முறை நடந்த சட்டசபை தேர்தலில், வேடசந்தூர் தொகுதியில் வெற்றிபெறும் கட்சியே தமிழக்தில் ஆட்சியை பிடித்து வந்துள்ளதை பார்க்க முடிகிறது. 1971ம் ஆண்டு திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார், அந்த தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தது, அதற்கு அடுத்ததாக 1977, 1980, 1984 ஆகிய மூன்று தேர்தலில் தொடர்ந்து இந்த வேடசந்தூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது, தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார் எம் ஜி ஆர்.

அதன் பின்பு எம் ஜி ஆர் மறைவுக்கு பின்பு நடந்த 1989 சட்டசபை தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்றது, சுமார் 12 வருடத்திற்கு பிறகு திமுக தமிழக்தில் ஆட்சிக்கு வந்தது, அதனை தொடர்ந்து அடுத்து இரன்டு வருடத்தில் நடந்த 1991 தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது, திமுகத்தில் அதிமுக ஆட்சியை பிடித்து ஜெயலலிதா முதல் முறையாக முதல்வராக அரியணை ஏறினார்.

அதற்கு அடுத்ததாக 1996ம் ஆண்டில் நடந்த தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்து முதல்வராக கருணாநிதி அரியணை எரிய போதும் கூட வேடசந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளரே வெற்றி பெற்று இருந்தார், அதே போன்று 2001 தேர்தலில் இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழத்தில் அதிமுக ஆட்சியை கைப்பற்றி இரண்டாவது முறையாக ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றார்.

இதில் மிக பெரிய ட்விஸ்ட் என்னவென்றால், இந்த தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டு கூட்டணி கட்சி வெற்றி பெற்றால், கூட்டணி கட்சி ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியும், தனி மெஜாரிட்டியில் ஆட்சியை பிடிக்க முடியாத சூழல் தான் உருவாகும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள், அந்த வகையில் கடந்த 2006ல் நடந்த சட்டசபை தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு காங்கிரஸ் இந்த தொகுதியில் வெற்றி பெற்றது.

திமுக ஆட்சி அமைக்க தனி மெஜாரிட்டி இல்லாததால் காங்கிரஸ் துணையுடன் 5 வருடம் மைனாரிட்டி ஆட்சியை நடத்தியது, அதனை தொடர்ந்து நடந்த 2011 , 2016 ஆகிய இரண்டு தேர்தலிலும் தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போது வேடசந்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தான் வெற்றி பெற்று இருந்தார், கடந்த 2021 தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார் தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்தது.

அந்த வகையில் தமிழகத்தின் “Bellwether Assembly” என்று அழைக்க கூடிய திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் 2026 தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் சார்ந்த கட்சி தான் ஆட்சியை பிடிக்கும் என்கிற கோணத்தில் ஒட்டு மொத்த தமிழக்தின் பார்வை வேடசந்தூர் தொகுதி பக்கம் திரும்பி இருப்பதை பார்க்க முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here