மதுரை மத்திய தொகுதியில் கடந்த 10 வருடங்களாக சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெட்ரா PTR பழனிவேல் தியாகராஜன் மீண்டும் மூன்றாவது முறையாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறார், ஆனால் நான் யார் தெரியுமா .? எங்க அப்பா யார் தெரியுமா.? எங்க தாத்தா யார் தெரியுமா என நெஞ்சை நிமிர்த்து பேசி திரிந்த PTR பழனிவேல் தியாகராஜன் இம்முறை மதுரை மத்திய தொகுதியில் பிரச்சாரத்தில் போது, கண் கலங்கி அழுது பிரச்சாரம் செய்தது,
வாக்கு பதிவு அன்று கையில் மல்லிகை பூவை சுற்றி கொண்டு வந்து வாக்களித்தது, என என்னப்பா இது தற்பெருமை PTR பழனிவேல் தியாகராஜனுக்கு வந்த சோதனை என்று சொல்லும் வகையில் மிக பரிதாபத்துக்கு PTR பழனிவேல் தியாகராஜனை தள்ளியதில் முக்கிய பங்கு அவரை எதிர்த்து போட்டியிட்ட சுந்தர் சி க்கே சேரும் என்கிறாது அரசியல் வட்டாரங்கள்.

இந்நிலையில் மதுரை மத்திய தொகுதியில் யாருமே எதிர்பாராத விதமாக சுந்தர் சி போட்டியிட்டது பின்னணி என்ன.? குறிப்பாக மதுரையில் பல தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், எதற்காக PTR பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து பிரச்சாரம் செய்யவில்லை என்கிற மிக பெரிய குழப்பம் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது.
நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் முக ஸ்டாலின் ஒருபக்கம் பிரச்சாரம் மேற்கொண்டார், கனிமொழி ஒருபக்கம், உதயநிதி ஸ்டாலின் ஒருபக்கம் என தமிழகம் முழுவதும் மூவரும் மூன்று திசைகளில் சுற்றி வந்து கொண்டிருக்க, உதயநிதி ஸ்டாலின் திறந்த வாகனங்களில் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார், ஆனால் மதுரைக்கு அமைச்சர் மூர்த்தி மற்றும் மற்ற வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், PTR பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து மதுரை மத்திய தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.
இதற்கு முக்கிய காரணமாக PTR பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி முதல் குடும்பத்தை மிக பெரிய சர்ச்சையில் சிக்க வைத்து, அந்த ஆடியோவில் முதல் குடும்பத்தினர் பல கோடி ஊழல் செய்ததாகவும் , ஆனால் அவர்கள் அதை மறைக்க முடியாது மாட்டி கொள்வார்கள் என்பது போன்று PTR பழனிவேல் தியாகராஜன் பேசியதாக அந்த ஆடியோ மிக பெரிய அளவில் வைரல் ஆனது.
இதன் பின்பே முதல் குடும்பத்தினரால் PTR பழனிவேல் தியாகராஜன் ஓரம் கட்டப்பட்ட தொடங்கினர்,மேலும் அவர் வகித்த நிதி அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. ஆனாலும் PTR பழனிவேல் தியாகராஜனை முற்றிலுமாக சீட் கொடுக்காமல் திமுக தலைமையால் ஓரம் கட்டப்பட முடியவில்லை. இப்படி ஒரு சூழலில் மதுரை மத்திய தொகுதியில் PTR பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து போட்டியிடும் சுந்தர் சி க்கும் உதயநிதிக்கு சினிமா ரீதியாக நட்பு உள்ளது.
சுந்தர் சி இயக்கிய பல படங்கள் உதயநிதிக்கு தொடர்பு உள்ள தயாரிப்பு நிறுவனம் தயாரித்து இருக்கிறது, அந்த வகையில் ஏற்கனவே PTR பழனிவேல் தியாகராஜன் மீது இருந்த உதயநிதிக்கு இருந்த கோபம், குறிப்பாக மீண்டும் PTR பழனிவேல் தியாகராஜன் வெற்றி பெற கூடாது என்பதில் திமுகவினருக்கு இருக்கும் எதிர்பார்ப்பு, இவை அனைத்தும் தான் மதுரை மத்திய தொகுதியில் PTR பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள வில்லை என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
மேலும் தன்னுடைய நட்பில் இருக்கும் சுந்தர் சி யை எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டுமா.? என்கிற தயக்கமும் கூட மதுரை மத்திய தொகுதியில் PTR பழனிவேல் தியாகராஜணை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்யாமல் தவிர்க்க காரணம் என கூறப்படும் நிலையில் PTR பழனிவேல் தியாகராஜன் வெற்றியை திமுக தலைமை விரும்பவில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

