நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முன்பு எப்போது இல்லாத வகையில் கடும் போட்டியை கொடுத்து இருக்கிறது, இதற்கு காரணம் விஜய் என்கிற புதிய வரவு தான். விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் இந்த தேர்தலில் கணிசமாக வாக்குகளை பெரும் என கணிக்கப்பட்டாலும் , யாருடைய வாக்குகளை , அதாவது திமுக – அதிமுக ஆகிய இரண்டு காட்சிகளில் யாருடைய வாக்குகளை விஜய் பிரிக்கிறார் என்பதை பொறுத்தே அடுத்து யார் ஆட்சி அமைக்க போகிறார் என்பதை உறுதி செய்ய முடியும்.
அந்த வகையில் விஜய்யின் வாக்கு பிரிவு தான் 2026ல் தேர்தல் முடிவு என்பது தெள்ள தெளிவாக உள்ளது. இந்நிலையில் மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக மிக தீவிரமாக களம் இறங்கி இருக்கும் , அதே வேளையில் அதிமுக இம்முறை ஆட்சியை பிடித்தே தீரவேண்டும் என்பதில் களம் இறங்கியது, இதற்கு இடையில் திமுக – அதிமுக இடையிலான அண்டர் டீலிங் குறித்த ரிப்போர்ட் தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பு எடப்பாடி கைக்கு சென்று இருக்கிறது.

அதில் பெரும்பாலான இடங்களில் அதிமுகவினர் திமுக அமைச்சர்களிடம் சமரசம் இல்லாமல் வேலை செய்து வந்தனர், ஆனால் ஒன்று இரண்டு இடங்களில் திமுக அமைச்சருடன் கள்ள தொடர்பு ஏற்படுத்தி கொண்ட அதிமுக மாவட்ட செயலாளர்கள், திமுக அமைச்சர் வெற்றி பெறுவதற்காக மறைமுகமாக வேலை செய்த தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு ரிப்போர்ட் ஆக சென்று இருக்கிறது.
குறிப்பாக சம்பந்தப்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர் திமுக அமைச்சருடன் கள்ள தொடர்பு ஏற்படுத்தி கொண்டு என்னுடைய வெற்றியை எளிதாக்கி தாருங்கள், உங்களுடைய வெற்றியை எளிதாக்கி தருவது மட்டுமில்லாமல், இந்த மாவட்டத்தில் தான் நிற்கும் தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதியில் தன்னுடைய ஆட்கள் வேலை செய்யாமல் இருக்கும் படி செய்கிறேன் என்கிற திரை மறைவு ஒப்பந்தம் செய்து கொண்டதாக எடப்பாடி பழனிசாமிக்கு ரிப்போர்ட் சென்று இருக்கிறது.
ஆனால் திமுக எதிராக உணர்வு பூர்வமாக வேலை செய்யும் அதே தொகுதியில் இருக்கும் அதிமுகவினர் இது தொடர்பான புகாரை அதிமுக தலைமையின் கவனத்திற்கு எடுத்து சென்று இருக்கிறார்கள், உடனே சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட எடப்பாடி பழனிசாமி மிக கடுமையாக எச்சரிக்கை விடுத்தது மட்டுமில்லாமல், உங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதியில் எதாவது தவறு நடந்தால் தேர்தலுக்கு பின்பு நடவடிக்கை பாயும் என எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இது போன்று திமுக அமைச்சர்களுடன் கள்ள தொடர்பில் இருக்கும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மீது ஜெயலலிதா பாணியில் தண்டனை கொடுக்க வேண்டும் என்பதே அந்த சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் இருக்கும் அதிமுகவினரின் கோரிக்கையாக இருக்கிறது, அதாவது ஜெயலலிதா இருக்கும் வரை, திமுகவினர் உடன் கள்ள தொடர்பில் அதிமுக மாவட்ட செயலாளர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால்.
சம்பந்தப்பட்ட அந்த அதிமுக மாவட்ட செயலாளரை, அவர் கள்ள தொடர்பில் இருக்கும் திமுக அமைச்சருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட வைத்து, அவரை வெற்றி பெற்று வந்தால் உனக்கு அரசியல் வாழ்கை, அல்லது இதோடு நீ காலி என்பது தான் ஜெயலலிதாவின் முடிவாக இருக்கும், குறிப்பாக அதிமுகவினர் திமுகவினரிடம் எதாவது விசேஷ களில் சந்தித்தால் கூட சம்பந்த பட்ட அதிமுகவினர் பதவியை ஜெயலலிதா பறித்து விடுவார் என்கிற பயம் அப்போது அதிமுகவினருக்கு இருந்து வந்தது.
அதே போன்ற அதிரடியை எடப்பாடி பழனிச்சாமி கையில் எடுத்து, திமுக அமைச்சருடன் கள்ள தொடர்பில் இருக்கும் சம்பந்த பட்ட அந்த அதிமுக மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அதிமுகவினரின் கோரிக்கையாக உள்ளது.

