சொல்லி அடித்த அமித்ஷா… மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி… முடிந்தது மம்தா அரசியல்…

0
Follow on Google News

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் முழு கவனமும் மேற்குவங்கம் தேர்தல் பக்கம் திரும்பி இருக்கிறது. குறிப்பாக தமிழக சட்டசபை தேர்தலுக்காக ஒரே ஒரு முறை மட்டுமே பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னுடைய முழு பங்களிப்பையும் மேற்கு வங்கம் தேர்தல் பக்கம் திருப்பி இருந்தார்.

இதற்கு முக்கிய காரணம் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது என்கின்ற உளவுத்துறை ரிப்போர்ட்டின் அடிப்படையில், தன்னுடைய தீவிர பிரச்சாரத்தின் மூலம் அங்கே ஆட்சியை உறுதி செய்வதுதான் அமித்சாவின் திட்டமாகவும் இருந்தது, அந்த வகையில் தமிழகத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பொறுப்பில் தேர்தல் பணிகளை கவனிக்க செய்ய வைத்துவிட்டு தன்னுடைய முழு கவனத்தையும் மேற்கு வங்கம் பக்கம் திருப்பினார் அமித்ஷா.

இந்த நிலையில் இரண்டு கட்டங்களாக 294 தொகுதிகளில் மேற்கு வங்கத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் முதல் கட்டத்தில் நடந்த வாக்குப்பதிவில் மம்தா பானர்ஜிக்கு பின்னடைவையும் பாஜகவிற்கு சாதகமான ஒரு சூழலும் உருவாகி இருக்கிறது என்கிறது கருத்து கணிப்புகள். மேலும் இரண்டாம் கட்டமாக நடந்த தேர்தலில் பாஜக மற்றும் மம்தா பானர்ஜிக்கு இருவருக்கும் சம பலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தத்தில் இரண்டு கட்டங்களாக நடந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக முன்னிலை வகிப்பதாகவே தகவல்கள் உறுதிப்படுத்துகிறது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் வரலாற்று சிறப்புமிக்க தேர்தலாக இந்த தேர்தலில் எந்த ஒரு பூத்திலேயும் மறு வாக்குப்பதிவு நடைபெறாத வகையில் உச்சகட்ட பாதுகாப்பில் மத்திய அரசாங்கம் இந்த தேர்தலை நடத்தி முடித்து இருக்கிறது.

இதற்காக மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய எட்டு பிரிவுகளின் கீழான பாதுகாப்பு படையினர் மேற்கு வங்காளத்தில் இறக்கப்பட்டு இருக்கிறார்கள், சுமார் 30,000 பாதுகாப்பு படையினர் மத்திய பாஜக அரசால் களம் இறக்கப்பட்டு எந்தவித முறைகேடும் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் நடந்து விடாமல் இருப்பதை உறுதி செய்து இருக்கிறார்கள். அந்த வகையில் மம்தா பானெர்ஜியின் எந்த ஒரு தில்லாலங்கடி திட்டமும் மேற்கு வங்கத்தில் இம்முறை அரங்கேறவில்லை.

இந்நிலையில் எஸ்ஐஆர் மூலம் பல போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டது, மேலும் தொடர்ந்து மம்தா பானர்ஜிக்கு எதிரான மேற்குவங்க மக்களின் அதிருப்தி இவை அனைத்துமே பாஜகவிற்கு சாதகமான ஒரு சூழலை உருவாக்கி இருக்கிறது. அந்த வகையில் இம்முறை மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி என்கின்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

இந்த மேற்குவங்க தேர்தல் பரபரப்புக்கு இடையிலேயே அடுத்து நடைபெற இருக்கும் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கான வேலையை இப்போதே தொடங்கி விட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அந்த வகையில் 2027 ஆம் ஆண்டு பஞ்சாப்ப் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் அங்கே ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியை இரண்டாக உடைபட்டு ஒரு பகுதியினர் பாஜக பக்கம் இணைந்துள்ளனர்.

குறிப்பாக கடந்த பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மீ ஆட்சி அமைக்க காரணமாக இருந்த தலைவர்கள் தற்பொழுது ஆம் ஆத்மீ கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளது, வரும் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்க அதிக வாய்ப்புள்ளது என்கிறது பஞ்சாப் அரசியல் களம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here