நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக மொத்தம் 27 தொகுதிகளில் போட்டியிட்டது, இந்நிலையில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பாஜக 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது, அதற்கு அடுத்து நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சுமார் 11 சதவிகித வாக்கு வங்கியை நிர்ணயம் செய்து தன்னுடைய பலம் என்ன என்பதை வெளிப்படுத்தியது.
இந்நிலையில் தற்பொழுது 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக தற்பொழுது வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் எந்தத்த தொகுதிகளில் பாஜக வெற்றி பெரும் என்கிற கருத்து கணிப்பு படி, முதலில் பாஜக முன்னிலை வகிக்கும் தொகுதிகள் எவை என்பதை பார்க்கலாம், சென்னை மண்டலத்தில் மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர் ராஜன் போட்டியிட்டார்.

இந்த தொகுதியின் தேர்தல் பிந்தைய கருத்து கணிப்பின் படி, பாஜக – திமுக – தவெக என மும்முனை போட்டி நிலவி இருக்கும் சூழலில், திமுக 20 சதவிகிதம், தவெக 29 சதவிகிதம், பாஜக 30 சதவிகிதம் என கடும் போட்டிகளுக்கு மத்தியில் 1 சதவிகிதம் முன்னிலை பெற்று பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தர் ராஜன் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது, குறிப்பாக திமுக வாக்குகளை மிக பெரிய அளவு தவெக பிரித்ததின் விளைவாக தமிழிசை சௌந்தர் ராஜன் சட்டசபை செல்லும் வாய்ப்பை பெறலாம் என்கிறது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்.
அடுத்ததாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்து கொண்ட விளவங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி போட்டியிடும் தொகுதியில், விஜயதாரணி 38 சதவிகிதம் முன்னிலையிலும், அவருக்கு அடுத்ததாக திமுக கூட்டணி வேட்பாளர் 34 சதவிகிதமும், அதற்கு அடுத்ததாக தவெக வேட்பாளர் 20 சதவிகித்ததுடன் முன்றாவது இடத்திலும் உள்ளனர்.
அந்த வகையில் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் பாஜக வேட்பாளர் விஜயதாரணி வெற்றி வாய்ப்பு என்பது மிக பிரகாசமாக உள்ளது. அதனை தொடர்ந்து கடந்த முறை நாகர்கோவில் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக எம் எல் ஏ எம் ஆர் காந்தி மீண்டும் அதே தொகுதியில் இம்முறை போட்டியிடுகிறார், அந்த தொகுதியில் தமிழக வெற்றி கழகம் 20 சதவிகிதம் வாக்குகளும், திமுக 35 சதவிகித வாக்குகளும்,
பாஜக வேட்பாளர் எம் ஆர் காந்தி 38 சதவிகித வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்,நாகர்கோவில் தொகுதியில் இரண்டாவது முறையாக எம் ஆர் காந்தி மீண்டும் சட்டசபை செல்ல இருக்கிறது, அதற்கு அடுத்ததாக பத்மநாதபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் 38 சதவிகிதத்துடன் முன்னிலையிலும், அவருக்கு அடுத்த இடத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் 36 சதவிகிதத்துடன், அதற்கு அடுத்து முன்றாவது இடத்தில் தவெக வேட்பாளர் 18 சதவிகிதத்துடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
அந்த வகையில் பத்மநாதபுரம் தொகுதியில் பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. மேலும் திருப்பத்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட திருமாறன் ஜி அங்கே திமுக வேட்பாளர் பெரியகருப்பனை விட இரண்டு சதவிகிதம் முன்னிலையில் இருப்பதால் திருமாறன் ஜிக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதனை தொடர்ந்து கடும் போட்டியில் இருக்கும் சாத்தூர், அவிநாசி, கோவை வடக்கு ஆகிய தொகுதிகளும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக பார்க்க படுகிறது. இன்னும் பல தொகுதிகள் கடும் இழுபறியில் இருப்பதால் அந்த தொகுதிகளுக்கான வெற்றி வாய்ப்பை இறுதியிட்டு கணிக்கமுடியாத சூழல் உருவாகி இருக்கிறது.
இந்நிலையில் பெரிதும் பாஜகவால் எதிர்பார்க்கப்பட்ட மதுரை தெற்கு தொகுதி தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மதுரை தெற்கு தொகுதியின் பாஜக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் 5 சதவிகித வாக்குகள் முன்னிலை வகித்து வருவதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது.




