உதயநிதியிடம் சென்ற விஷால் பஞ்சாயத்து… இனி போர்ஜரி செய்து விஷால் தப்பிக்கவே முடியாது..

0
Follow on Google News

நடிகர் விஷால் தற்பொழுது நடித்து வரும் படம் மார்க் ஆண்டனி, இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது, இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கான செட் அமைக்கும் பணிகள் என அனைத்து வேலைகளும் நடந்து முடிந்து படப்பிடிப்பு தொடங்கும் சமயத்தில், அந்த படத்தின் ஹீரோ விஷால் வரவில்லை. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து இயக்குனர் தொடர்பு கொண்டு விஷாலிடம் பேசியுள்ளார்.

அதற்கு விஷால், இன்று படப்பிப்புக்கு வருவதற்கு மூட் இல்லை, அதனால் நாளை படப்பிடிப்பை தொடங்கலாம் என்று விஷால் தெரிவித்துள்ளார். மீண்டும் அடுத்த நாள் படப்பிடிப்பு தொடங்கிய போது விஷால் வரவில்லை. படத்தின் இயக்குனர் தொடர்பு கொண்டு கேட்ட போது, முதல் நாள் சொன்ன இன்று படப்பிடிப்புக்கு வருவதற்கு மூட் இல்லை என அதே பதிலை நடிகர் விஷால் தெரிவித்து நாளை வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

இப்படியே, ஒரே பதிலை சொல்லி படப்பிடிப்புக்கு வராமல் டிமிக்கி கொடுத்து 30 நாட்களை கடத்தி சென்றுள்ளார் நடிகர் விஷால். இதனால் மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விஷாலால் பல கோடியை இழந்த மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பாளர். இருந்தாலும் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் பாதியிலேயே நின்ற மார்க் ஆண்டனி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்க ஏற்பாடு செய்துள்ளார்.

அதற்காக மீண்டும் எப்போது படப்பிடிப்பு தொடங்குவது என தொடர்ந்து நடிகர் விஷாலிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது முறையான பதில்கள் இல்லை. ஒரு கட்டத்தில் விஷாலை தொடர்பு கொள்ள முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டனர் மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர். இந்த நிலையில் விஷால் வீட்டிற்கு சென்று அவரை சந்திக்க முயற்சித்துள்ளார் மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பாளர்.

விஷாலை சந்திக்க முயற்சித்த போது அவர் வீட்டில் இருந்தவர்கள் விஷால் தூங்குகிறார், அதனால் சந்திக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இதனால் டென்ஷனான மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பாளர் விஷால் வீட்டின் முன்பு கண்டபடி விஷாலை திட்டி தீர்த்து உள்ளார். அப்போதுதான் விஷால் குடும்பத்தினருக்கே விஷாலின் நடவடிக்கைகள் இவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பாளர், தயாரிப்பாளர் கவுன்சிலில் விஷால் மீது புகார் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் விஷால் பொதுவாக இதுபோன்று பல போர்ஜரி வேலைகளை செய்து விட்டு, பாதிக்கப்பட்டவர்கள் நெருக்கடி கொடுத்தால், அவர்களிடம் எனது நண்பர் உதயநிதி தெரியுமா.? என்று உதயநிதி பேரை தவறாக பயன்படுத்தி மிரட்டி வருகிறார் விஷால் என்கின்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்த நிலையில் ப்ரோடுயூசர் கவுன்சில் விஷால் மீது கொடுக்கப்பட்ட புகாரை நேரடியா உதயநிதியிடம் எடுத்துச் சென்றுள்ளார்கள். விஷால் தொடர்ந்து இது போன்ற பல பிரச்சனைகளை செய்து வருகிறார், அவரால் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் விஷாலுக்கு நெருக்கடி கொடுத்தால், உங்கள் பெயரை பயன்படுத்தி மிரட்டி வருகிறார் விஷால் என்று உதயநிதி கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்கள்.

மேலும் இந்த பஞ்சாயத்தை நீங்களே தீர்த்து வையுங்கள் என்று உதயநிதியிடம் மார்க் ஆண்டனி பஞ்சாயத்து சென்றுள்ளது. ஏற்கனவே தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தி வருகிறார் விஷால் எஅவர் மீது செம்ம டென்ஷனில் இருக்கும் உதயநிதியிடம் மார்க் ஆண்டனி பஞ்சாயத்து விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. இதனால் இனி விஷால் தப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆகையால் மார்க் ஆண்டனி படத்திற்கு நிச்சயம் உதயநிதி ஒரு நல்ல ஏற்பாடு செய்து தருவார் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது. மேலும் உதயநிதி பெயரை தவறாக விஷால் பயன்படுத்துவது குறித்து விஷாலை அழைத்து உதயநிதி கண்டிக்க வேண்டும். இல்லை என்றால் விஷால் செய்யும் போர்ஜரி வேலைகளால் உதயநிதிக்கும் கெட்ட பெயரை ஏற்படும், அல்லது விஷால் நட்பை உதயநிதி துண்டிப்பது அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது என்றும் சினிமா துறையினர் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.