தவெகவில் மரியாதை இல்லை… LJK வை நோக்கி படையெடுக்கும் முன்னாள் அமைச்சர்கள்… தமிழகத்தின் மாற்று சக்தியாக உருவெடுக்கும் ஜோஸ் ஜார்லஸ் மார்ட்டின்…

0
Follow on Google News

நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மட்டுமில்லை அரசியல் மாற்றத்தையும் கொண்டு வந்துள்ளது, அந்த வகையில் சுமை அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக மாறி மாறி ஆண்ட திமுக – அதிமுக இரண்டு திராவிட கட்சிகளை மக்கள் துடைத்து எரிந்து விட்டார்கள், இதில் அதிமுக தமிழகத்தில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து கொண்டிருக்கிறது, அக்கட்சியில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் புதியதாக ஆட்சியில் அமர்ந்து இருக்கும் தவெக வில் தங்களை இணைத்து வருகிறார்கள்.

ஆனால் அப்படி போனவர்களோ ஏன்டா வந்தோம் என்கிற அளவுக்கு புலம்பி தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதியதாக விஜய் கட்சி தொடங்கியதும் மாற்று கட்சியில் இருந்து யாராவது அல்ர சில்லறைகள் வந்தால் கூட நேரடியாக விஜய்யை சந்தித்து கட்சியில் இணையும் வாய்ப்பு கடந்த 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை இருந்தது.

ஆனால் தற்பொழுது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது, யாராக இருந்தாலும் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அமைச்சர்கள் ஆதவா அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் தான் இணைந்து வருகிறார்கள், அப்படி கட்சியில் இணைந்தவர்கள் முதல்வர் விஜய்யை சந்தித்து ஒரு புகைப்படம் எடுக்க கூட தவமாய் தவமிருந்து காத்திருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இதுமட்டுமின்றி அரசியலில் மூத்த தலைவராக, மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க தலைவராக அதிமுகவில் வலம் வந்தவர்கள் தவெக வில் இணைந்த பின்பு , அங்கே தவெக வில் இருக்கும் சின்ன சின்ன பசங்க பின்னால செல்ல கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது, இதனால் தவெக வில் இணைந்த பல முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வீட்டிலே முடங்கி கிடக்கிறார்கள்.

இது அதிமுகவில் மட்டுமில்லை, திமுகவில் இருந்து சென்றவர்களுக்கும் இதே நிலை தான் ஏற்பட்டு இருக்கிறது, இந்நிலையில் தற்பொழுது அதிமுக , திமுக ஆகிய காட்சிகளில் இருந்து வர இருக்கும் நபர்களை தயவு செய்து இங்கே வரவேண்டாம், நாங்களே இங்கிருந்து வெளியேற போகிறோம் என எச்சரிக்கை கொடுத்து வருகிறார்களாம், அதனால் தான் சமீப காலமாக தவெகாவில் எந்த ஒரு முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் இணைவது நின்று இருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இரண்டு திராவிட கட்சிகளும் தமிழக்தில் துடைத்து எறியப்பட்டு இருக்கும் நிலையில், அது நேரத்தில் தவெகவில் இணைந்தவர்களுக்கும் மரியாதை இல்லாத ஒரு சூழலில், தற்பொழுது இரண்டு திராவிட கட்சிகளில் பயணித்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையிலான லட்சிய ஜனநாயக கட்சியின் பக்கம் படையெடுக்க தொடங்கி இருக்கிறார்கள்.

தமிழக லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளராக இருக்கும் நெல்லை ஜீவாவை பல அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மற்றும் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பு கொண்டு தங்களை LJK வில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் இனி தமிழக்தில் வேலை இல்லை என்கிற நிலை உருவாகி இருக்கும் சூழலில்.

ஆட்சியில் தவெக இருக்க மறுப்பக்கம் மற்றும் ஒரு மாற்று சக்தி தலைவராக LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் உருவெடுத்து இருப்பதை பார்க்க முடிகிறது. புதுசேரியில் கட்சி தொடங்கி முதல் தேர்தலிலே சட்டமன்ற உறுப்பினராக தடம் பதித்துள்ள சார்லஸ் மார்ட்டின், தமிழகத்தில் கட்சி தொடங்கிய மிக குறுகிய காலத்தில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா தலைமையில் மாற்று கட்சியில் இருந்து ஏராளமானோர் LJK வில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here