மாவட்ட செயலாளர் மூலம் வசூல் வேட்டை… வசமாக சிக்கிய முக்கிய அமைச்சர்… நேரில் அழைத்து லெப்ட் ரைட் வாங்கிய முதல்வர் விஜய்…

0
Follow on Google News

கோட்டையில் அமர்ந்து கொண்டு கடந்த கால ஜெயலலிதா ஆட்சியை கண் முன்னே நிறுத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய் என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு அமைச்சரும் முதல்வர் விஜய் கொடுத்த டோஸில் ஆடிப் போயிருக்கிறார்கள். குறிப்பாக விஜய்க்கு மிகப்பெரிய அளவில் அரசியல் அனுபவம் இல்லை, ஒரு நடிகர் தானே ஏமாற்றி கல்லா கட்டலாம் என்று நினைத்த அமைச்சர்களுக்கும் மிகப்பெரிய இடியாக விழுந்திருக்கிறது, முதல்வர் விஜய் ஊழலில் சிக்கி அமைச்சர்களை அழைத்து செம்ம டோஸ் விட்ட சம்பவம்.

முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து வெளியான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒவ்வொரு அமைச்சர்களையும் தனித்தனியாக கண்காணிக்க ரகசிய உளவுத்துறை அதிகாரிகளை அமைத்திருக்கிறார் முதல்வர் விஜய், அந்த வகையில் ஒரு சீனியர் அமைச்சர் அவரை சுற்றி இருக்கும் நபர்கள் செய்யும் மோசடிகளுக்காக,

அந்த அமைச்சரை நேரில் அழைத்து உங்கள் மேல் தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் இதுவரை வரவில்லை, ஆனால் உங்களை சுற்றி இருப்பவர்கள் இடம் ஜாக்கிரதையாக இருங்க என்று, அந்த ஜெயலலிதா கட்சியில் இருந்து வந்தவருக்கு ஜெயலலிதா பாணியிலேயே வார்னிங் கொடுக்க, உடனே தன்னை சுற்றி இருந்தவர்களை சற்று தள்ளி வைத்து விட்டாராம் அந்த சீனியர் அமைச்சர்.

இந்த நிலையில் அந்த சீனியர் அமைச்சரிடம் ஒரு அட்வைஸும் வழங்கி இருக்கிறார் முதல்வர் விஜய், என்னவாக இருந்தாலும் அமைச்சர் அதாவ அர்ஜுனா ஆலோசனை கேட்டு செயல்படுங்கள் என்றும் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து முக்கியமான ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மூன்று அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து செம்ம டோஸ் விட்டிருக்கிறார்.

குறிப்பாக சமீபத்தில் அரசு தொடர்பான டெண்டர் விடுவதிலும் அரசு அதிகாரிகளை நியமனம் செய்வதிலும் மிகப்பெரிய அளவில் சர்ச்சையில் சிக்கிய ஒரு அமைச்சரை நேரில் அழைத்து நீங்கள் நேரடியாக பணம் வாங்கினால் எனக்கு தெரிந்துவிடும் என்று மாவட்ட செயலாளர்கள் மூலம் நீங்கள் டீல் செய்து வருகின்ற எல்லா தகவலும் எனக்கு தெரியும்,

ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் மாவட்ட செயலாளர்களை சிக்க வைத்து விட்டு நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்க வேண்டாம், நீங்கள்தான் மூளையாக செயல்படுகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். அதனால் இது உங்களுக்கு அட்வைஸ் இல்ல எச்சரிக்கை என்று கடுமையாக அந்த சம்பந்தப்பட்ட அமைச்சரை எச்சரித்த முதல்வர் விஜய், அடுத்தடுத்து இரண்டு அமைச்சர்களை தனியாக அழைத்து செம்ம டோஸ் விட்டிருக்கிறாராம்.

மேலும் என்னுடைய முகத்திற்காக மக்கள் அவர்களின் வீட்டில் ஒருவராக நினைத்து வாக்களித்திருக்கிறார்கள் உங்கள் முகத்திற்காக வாக்களிக்கவில்லை, ஊழலற்ற ஆட்சியைத் தருவேன் என்று நாம் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறேன், அந்த ஆட்சியில் சின்ன கலங்கம் உங்களால் ஏற்பட்டால் கூட நிச்சயம் நான் பொறுமை காக்க மாட்டேன, உடனே உங்களுடைய பதவியை காலி செய்து விடுவேன்.

மேலும் என்னுடைய ஆட்சியில் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தால் இப்போதே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு போய் விடுங்கள். என்றெல்லாம் செம்ம டோஸ் விட்டு இருக்கிறார் முதல்வர் விஜய் என்கிறது கோட்டை வட்டாரங்கள், இந்த நிலையில் ஆறு அமைச்சர்கள் பதவி சுதந்திர தினத்திற்கு பின்பு பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here