“கர்ணனை போல நண்பனை தேர்ந்தெடு… நீ வீழ்கின்ற நிலை வந்தாலும் உனக்காக போராடுவான்” என்று சொல்வார்கள். அது போல முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு பலவேறு போராட்டங்களுக்கு பின்பு முதல்வர் நாற்காலியில் அமர்ந்த எடப்பாடி பழனிச்சாமியின் முதல்வர் நாற்காலி நான்கரை வருடம் நிலைத்து நிற்க கவசமாக இருந்து பாதுகாத்தது முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி என்பது மறுக்கமுடியாத உண்மை என்பதை அதிமுகவினரே ஏற்று கொள்வார்கள்.
ஆனால் முதல்வராக நாற்காலியில் அமரும் வரை பெரும்பாலான தமிழக மக்களுக்கு யார் என்றே தெரியாத எடப்பாடி பழனிசாமி, அதிமுக என்கிற கட்சியை காப்பாற்றியது மட்டுமில்லாமல், தன்னை ஒற்றை தலைவராக கொண்டு வந்து அதிமுக பொதுச் செயலாளராக வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் எஸ் பி வேலுமணியை முதுகில் குத்தும் வேலையை எடப்பாடி மற்றும் அவருடைய மகன் செய்து வருவது தற்பொழுது அதிமுகவை அழிவின் விளிம்பிற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

அதிமுகவில் இருக்கும் மூத்த தலைவர்கள் யாருடைய ஆலோசனையையும் கேட்காத எடப்பாடி பழனிச்சாமி, தன்னுடைய மகன் மிதுன் சொற்படியே நடந்து வருவதும், மிதுன் அவருக்கென ஒரு தனியாக ஒரு டீமை வைத்து கொண்டு ஒட்டு மொத்த அதிமுகவையும் தன்னுடைய தந்தை மூலம் ஆட்டி வைத்து கொண்டிருக்கும் செயலை பொறுத்து கொள்ள முடியாமல் மிக வேதனையுடன் பல அதிமுக மூத்த தலைவர்கள் அக்கட்சியில் இருந்து வேதனையுடன் வெளியேறி மாற்று கட்சிக்கு சென்று வருவதை பார்க்க முடிகிறது.
குறிப்பாக தற்பொழுது எம் ஜி தொடங்கி, ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட அதிமுக மீண்டும் புத்துணர்ச்சி பெற வேண்டும் என்றால் எடப்பாடியை ஓரம் கட்டப்பட்டு எஸ் பி வேலுமணி தலைமை பொறுப்புக்கு வந்தால் மட்டுமே முடியும் என்கிற எண்ணத்தில் தமிழக முழுவதும் உள்ள பெரும்பாலான அதிமுகவினர் இருந்து வருகிறார்கள். இதன் காரணமாகவே பொதுக்குழுவை கூட்டாமல் காலம் தாமதம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டம் போட்டு எஸ் பி வேலுமணிக்கு ஆதரவாக இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்களை நீக்கி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி என்கிற குற்றச்சாட்டும் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் மத்தியில் ஓங்கி ஒலித்து வருவதை பார்க்க முடிகிறது. இப்படியே கட்சியில் இருந்து அனைவரையும் நீக்கிவிட்டு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடைய மகன் மிதுன் பழனிசாமி இருவரும் மட்டும் என்ன தான் செய்ய போகிறார்கள் என்கிற கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் வகையில் சில தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக இனி ஆட்சிக்கு வராமல் அழிந்தாலும் பரவாயில்லை, அதிமுக வசம் இருக்கும் சொத்துக்களை கைப்பற்றுவது தான் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய மகன் மிதுன் ஆகிய இருவருடைய தற்போதை திட்டம் என்றும், அதற்கான வேலைகளை தான் அப்பா மகன் இருவரும் மிக சாதுர்யமாக காய்களை நகர்த்தி கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் அதிமுகவில் இருக்கும் ரத்தத்தின் ரத்தமான சீனியர் புள்ளிகள்.
திமுகவை எதிர்ப்பில் உருவாகிய அதிமுக கட்சி என்கிற ஒரு சதவிகிதம் கூட உணர்வில்லாமல் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பு தன்னுடைய பதவி ஆசைக்காக திமுக உடனே கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய மகன் இருவரும் தயாரானதும், மேலும் தற்பொழுதும் தயாராக இருப்பதும் எந்த சுமார் 95 சதவிகித உண்மையான அதிமுக நிர்வாகி யாரும் விரும்பவில்லை என்கிற சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டால் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் பதவி காலியாகும் என்பதே தற்போதைய அதிமுகவின் அரசியல் நிலவரம்…

