பிரேமலதா வெச்ச ஆப்பு… தலையில் கை வைத்த முதல்வர்… திமுகவை குளோஸ் செய்த பிரேமலதா…

0
Follow on Google News

தேமுதிக தலைவராக இருந்த விஜயகாந்த் தன்னுடைய வாழ்நாள் இறுதி கட்டம் வரை திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இப்படி ஒரு சூழலில் விஜயகாந்த் மறைவுக்கு பின்பு அந்த கட்சியின் அதிகார பொறுப்பிற்கு வந்த பிரேமலதா விஜயகாந்த், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார், இது மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

அதாவது விஜயகாந்த் கட்சி தொடங்கியது முதல் தன்னுடைய வாழ்நாள் இறுதி வரையும் திமுகவிலிருந்து பலமுறை கூட்டணிக்காக அழைப்பு வந்த போதும் கூட, அதில் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் திமுகவுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியான நிலைப்பாட்டில் இருந்து வந்தார் விஜய்காந்து, அப்படி இருக்கையில் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி அமைத்தது விஜயகாந்தின் ஆன்மா கூட மன்னிக்காது என்று பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.

ஆனால் தற்பொழுது பிரேமலதா விஜயகாந்த் செய்துள்ள தரமான சம்பவம் ஒன்று, அதாவது ஒரு கட்சியை வீழ்த்துவதற்காக எதிர்த்து நின்று அவர்களுக்கு எதிராக போராடுவது ஒன்று, மற்றொன்று அவர்கள் கூடையே கூட்டணி வைத்து அவர்களை காலி செய்வது, அதில் இரண்டாவது விதமாக திமுகவை விஜயகாந்த் போன்று எதிர்த்து அரசியல் செய்து காலி செய்வதை கைவிட்டு விட்டு,

திமுகவுடன் கூட்டணி அமைத்து அவர்களை இந்த தேர்தலில் தோல்வியடைவதற்கான வேலைகளை செய்வதைத்தான் பிரேமலதா தற்போது செய்து வருகிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள், குறிப்பாக சமீபத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்ற ஒரு நிகழ்வில் மு க ஸ்டாலினை மேடையில் அமர வைத்துக் கொண்டு பிரேமலதா விஜயகாந்த் பேசிய பேச்சுக்கள் தான் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

அதில் தமிழ்நாடு முழுக்க ஒரே ஒரு குற்றச்சாட்டு தான் அண்ணன் ஸ்டாலின் மேல இருக்கு, அதையும் இந்த பெண்கள் கூட்டத்தில் நான் சொல்கிறேன், எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் இருக்கிறது இதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? வேறு எதுவும் இந்த ஆட்சிக்கு எதிராக சொல்ல முடியாது என பிரேமலதா விஜயகாந்த் பேசிய பேச்சு, தமிழக அரசியலில் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய விவாதத்தை கிளப்பி இருக்கிறது.

அதாவது ஏற்கனவே திமுகவுக்கு எதிராக திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை போதை கலாச்சாரம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்று எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் குற்றசாட்டு வைத்தும் வகையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் திமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டே, தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை போதைக்கலைச்சரம் இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பிரேமலதா விஜயகாந்த் பேசியிருப்பது திமுகவை இந்தத் தேர்தலில் கூட இருந்தே காலி செய்துவிடுவார் பிரேமலதா என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here