முகநூல் மூலம் ஏற்பட்ட பழக்கம்… நேரில் வரவழைத்து இளைஞனை படுகொலை செய்த பெண்… ஆண்களே உஷார்.

0

தூத்துக்குடி : சமூகவலைத்தளங்களில் இருக்கும் இளசுகள் மற்றும் சபலிஸ்ட்டுகள் பெண்கள் என்றாலே போதையாகி வழிவதும் தங்கள் பணத்தை இழப்பதும் ஏன் உயிரையும் இழந்துபோவதும் தொடர்கதையாகி வருகிறது. காவல்துறை எவ்வளவு எச்சரித்தும் இது தொடர்ந்துகொண்டே இருப்பது போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

இந்நிலையில் முகநூலில் பழக்கமாகி கவர்ச்சிக்கு இரையாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சோகம் திருவள்ளூர் பகுதியை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கும்முடிப்பூண்டியை சேர்ந்தவர் 27 வயதாகும் மாரிமுத்து. டிப்ளமோ முடித்துள்ள இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு முகநூல் மூலம் தூத்துக்குடியை சேர்ந்த ராகினி எனும் இளம்பெண் அறிமுகமாகியுள்ளார்.

தன்னை ஒரு வசதிபடைத்தவர் என காட்டிக்கொண்ட ராகினி, மரிமுத்துவுடன் நெருங்கிப்பழகியுள்ளார். அந்தரங்க பேச்சுக்கள் வீடியோக்கள் என ராகினி மாரிமுத்துவை மயக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் அவசரமாக ஐந்துலட்சம் வேண்டும் என ராகினி கேட்க அதையும் வங்கிமூலம் அனுப்பியுள்ளார் மாரிமுத்து.

அதன்பிறகு ராகினி அவரை தொடர்புகொள்ளவேயில்லை. அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார் மாரிமுத்து. இந்நிலையில் தான் தனது உறவினரான தென்காசி காவல்நிலையத்தில் சிறப்பு பட்டாலியனாக உள்ள வில்வராஜ், ராஹினியுடன் நெருக்கமாக இருந்துள்ளார். அவரிடமும் 15 லட்சம் பெற்று ஏமாற்றியுள்ளார் ராகினி. நாளடைவில் ராகினி, வில்வராஜ் மற்றும் அவரது மனைவி மேலும் இளவரசி எனும் பெண் ஆகியோர் கூட்டு சேர்ந்து இதையே தொழிலாக ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் ராஹினிக்கு மாரிமுத்து நெருக்கடி கொடுக்க மாரிமுத்து சோலியை முடிக்கச்சொல்லி வில்வராஜிடம் ராகினி கூறியுள்ளார். இதனால் கடந்த 27ம் தேதி பணம் தருவதாக கூறி வரச்சொல்லியுள்ளனர். மாரிமுத்துவை, வில்வராஜா, இசக்கிராஜ், ரவிக்குமார் ஆகியோர் காரில் அழைத்துக்கொண்டு சங்கரன்கோவில் அருகே செல்லுகையில் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.

பின்னர் கல்லைக்கட்டி கண்மாயில் வீசியுள்ளனர். இந்த வழக்கு இழுத்தடித்துக்கொண்டே போன நிலையில் கிடைத்த திடீர் தகவலால் தென்காசி போலீசார் விரைவு விசாரணை நடத்தினர். அதன்பேரில் வில்வராஜா இசக்கி மற்றும் ரவிக்குமாரை போலீசார் கைதுசெய்துள்ளனர். மேலும் இளவரசி மற்றும் ராகினி ஆகியோர் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் சிலநாட்களுக்கு முன்னர்தான் மாரிமுத்துவின் சடலம் அழுகியநிலையில் கண்டெடுக்கப்பட்டது. ஒரு காவலரே பெண்ணுடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டது தென்காசி பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.