அண்ணாமலை கொடுத்த ரிப்போர்ட்…. ஆடிப்போன அமித்ஷா… டெல்லியில் நடந்த சம்பவம்…

0
Follow on Google News

பாஜக முன்னால் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகுவதாக தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து கொடுத்தவர், தன் பக்கம் இருக்கும் விளக்கத்தையும் கொடுத்து இருக்கிறார். இதனை தொடர்ந்து சென்னை திரும்புவதற்காக விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட அண்ணாமலைக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.

உடனே உங்களை மத்திய அமைச்சர் அமித்ஷா சந்திக்க வேண்டும் என்கிறார், உடனே வாருங்கள் என்று அழைப்பு வந்திருக்கிறது. டெல்லி விமான நிலையத்தை நோக்கி சென்ற அண்ணாமலை உடனே தன்னுடைய வாகனத்தை அமித்ஷாவை சந்திக்கு திருப்ப சொல்லி இருக்கிறார்கள், அமித்ஷாவை நேரில் சந்தித்து பல விசயங்களை பகிர்ந்து இருக்கிறார் அண்ணாமலை.

அப்போது கடந்த 2024 நாடளுமன்ற தேர்தலில் 11 சதவிகித வாக்கு வங்கியாக பாஜக உயர்ந்தது, மேலும் NDA கூட்டணி 18 சதவிகிதம் பெற்று இருந்தது, அடுத்த இரண்டு வருடம் அதே கூட்டணியுடன் என்னை தொடர் செய்து இருந்தால், தமிழக வெற்றி கழகம் பெற்ற வெற்றியை நாம் பெற்று இருப்போம், அல்லது திமுக ஆட்சி அமைத்து நாம் எதிர்க்கட்சியாக அமர்ந்து இருப்போம்,

ஒரு வேலை பாஜக 2026ல் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருந்தால் அடுத்த 2034ல் மேற்கு வங்கம் போல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்து இருக்கும்,. அதற்கான இலக்கை நோக்கி தான் நானும் ஓடி கொண்டிருந்தேன், தமிழக மக்களும் மாற்றத்தினக்கான கட்சியாக பாஜகவை பார்க்க தொடங்கினார்கள். ஆனால் பாஜகவில் இருக்கும் சிலர் பாஜக வளர்ச்சி அடைகிறது, அதில் என்னால் வளர்ச்சி அடைவதை அவர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை.

குறிப்பாக அதிமுக உடன் கூட்டணி அமைத்தால் 2026ல் கூட்டணி ஆட்சியை அமைத்து விடலாம் என உங்களிடம் கொடுத்த தகவல் தவறானது என்பது அந்த தகவலை கொடுத்தவர்களுக்கே தெறியும், இதன் பின்னால் இருந்தது ஒரு குழுவின் நோக்கமே என்னை மாநில தலைவர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும் அதற்கான ஆயுதம் தான் அதிமுக – பாஜக கூட்டணி என்கிற திட்டத்தை கையில் எடுத்தார்கள்.

அவர்களே எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக தலைவராக அண்ணாமலையை நீக்கினால் தான் பாஜக உடன் கூட்டணிக்கு வருவேன் என்று சொல்ல வைத்தார்கள் , எடப்பாடி பழனிசாமியும் அப்படியே செய்தார், ஆனால் அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைத்தால் தன்னுடைய மாநில தலைவர் பத்வவியில் இருந்து விலகி கொள்வேன் என்று ஏற்கனவே என்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தேன், எப்படியோ மாநில தலைமை மாற்றம் செய்யப்பட்டது.

நீங்கள் என்னால் கூட்டணிக்குள் எந்த குழப்பமும் வந்து விடக்கூடாது என்பதற்காக அணைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தேன், அதிமுகவை ஆதரித்து பேசுனேன், எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பேசுனேன், ஆனால் மக்கள் அதை ரசிக்கவும் இல்லை ஏற்று கொள்ளவும் இல்லை, இறுதியில் பாஜக வெறும் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது , 11 சதவிகதமாக இருந்த பாஜக 2.97 சதவிகிதமாக சரிந்து இருக்கிறது.

இப்படி பல தகவல்களை அமித்ஸாவிடம் அண்ணாமலை தெரிவிக்க ஆடி போன அமித்ஷா , ஒரு கட்டத்தில் அன்னமலையை சமாதானம் செய்ய முயற்சித்தாக கூறப்படுகிறது, இருந்தும் அண்ணாமலை தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கமாக அமித்ஷாவிடம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here