காங்கிரசை கழட்டிவிடும் விஜய்… தவெகவுக்கு தாவும் 5 காங்கிரஸ் MLA … பிரதமரை நோக்கி விஜயின் மாஸ்டர் பிளான்….

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை இல்லாமல் இருந்த நிலையில் முதல் நாளாக முந்திக்கொண்டு ஓடி வந்து ஆதரவு என்கின்ற துண்டை போட்ட கட்சி தான் காங்கிரஸ் கட்சி. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவளித்த ஆட்சி அமைத்த நிகழ்வு தமிழ் பற்றாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை தவெகாவுக்கு எதிராக எழுப்பி இருக்கிறது.

குறிப்பாக ஈழ தமிழர்கள் விவகாரத்தில் தமிழின எதிரி என்று உலகத் தமிழர்களால் பறைசாற்றப்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியை தன்னுடைய அமைச்சரவையில் முதல்வர் விஜய் இடம்பெறச் செய்தது உலகத் தமிழர்கள் மத்தியிலேயே கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து வெறும் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர்களை வழங்கி இருக்கும் தமிழக வெற்றி கழகம், மேலும் தங்களுக்கு ஒரு ராஜ சபா சீட் வேண்டும் என்று காங்கிரஸ் தமிழக வெற்றி கழகத்திற்கு கோரிக்கையாக வைத்து வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சியால் ஒரு கவுன்சிலர் கூட வெற்றி பெற முடியாத சூழல் இருந்து வரும் நிலையில், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக திமுக என்கின்ற குதிரையில் ஏறி சவாரி செய்து வந்த காங்கிரஸ் கட்சி, தப்பொழுது தமிழக வெற்றிக்கழகம் மீது நோகாமல் நொங்கு தின்னுவது என்று சொல்வார்கள், அதுபோன்று சவாரி செய்ய தொடங்கி இருக்கிறது.

இந்த நிலையில் அமைச்சரவைக்கு பின்பு தமிழக அரசியல் நிலவரம் குறித்த ஒரு ரிப்போர்ட் முதல்வர் விஜயின் கவனத்திற்கு சென்று இருக்கிறது, அதில் குறிப்பாக தற்பொழுது இருக்கும் கூட்டணி கட்சிகளுடன் நீங்கள் தேர்தலை சந்தித்து இருந்தால் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்க முடியாது, காரணம் உங்களுடைய கூட்டணி கட்சிகளுக்குமே கணிசமான மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. திமுகவின் தோல்விக்கு அதுவும் கூட காரணம்.

அப்படி இருக்கையில் காலாவதியாகும் கட்சிகளை உங்களுடன் கூட்டணியில் சேர்ப்பது என்பது அது தவெக அரசியல் எதிர்காலத்திற்கும் நல்லதல்ல என்று அந்த ரிப்போர்ட் விஜய்க்கு உணர்த்தியிருக்கிறது. மேலும் விஜயின் அஸ்தனமான ஜோதிடர் வரும் 2029 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசை கழட்டி விட்டு விட்டு எப்படி தமிழகத்தில் தனித்து தேர்தலை சந்தித்தீர்களோ, அதே போன்று கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் ஒரு குறிப்பிட்ட அளவில் வேட்பாளர்களை அறிவித்து,

வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளில் குறி வைத்து போட்டியிட்டால் கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்களை 2029 தேர்தலில் வெற்றி பெறலாம் என்றும், அதைத்தொடர்ந்து 2034 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் உங்கள் தலைமையிலான ஒரு கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்கும் பொழுது நிச்சயம் பிரதமராகும் வாய்ப்பு உள்ளது என விஜயின் ஜோதிடர் அறிவுறுத்தலின்படி தற்பொழுது காங்கிரஸ் கட்சியை விஜய் கலட்டி விட முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக தான் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வைத்து தற்போது தவெகவில் இணைத்து வருகிறார் முதல்வர் விஜய் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here