CM விஜய் குட் புக்கில் TOP 10 அமைச்சர்கள்… இவர்களுக்கு தான் இனி முன்னுரிமை… இதோ வெளியான TOP 10 பட்டியல்…

0
Follow on Google News

தமிழக முதல்வராக விஜய் பெறுபேற்று 70 நாட்களை கடந்த நிலையில், விஜய் குட் புக்கில் இடம்பெற்ற டாப் 10 அமைச்சர்கள் யார் .? என்கிற தகவல் கசிந்துள்ளது. குறிப்பாக விஜய் கோட்டைக்கு வருகிறார், வீட்டிற்கு செல்கிறார் என்கிற செய்திகளுக்கு மத்தியில் தன் அமைச்சரவையில் இருக்கும் ஒவ்வொரு அமைச்சரையும் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார் என்பது கோட்டை வட்டாரங்கள் நன்கு அறியும்.

அந்த வகையில் முதல்வர் விஜய் குட் புக்கில் இடம்பெற்றுள்ள டாப் 10 அமைச்சர்களில் முதல் இடத்தில இருப்பது சுகாதார துறை அமைச்சர் அருண் ராஜ், IRS அதிகாரியான அருண் ராஜ் தான் விஜய்யை அரசியலுக்கு கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றியவர், இந்நிலையில் ஒரு சில அமைச்சர்கள் ஆய்வு என்கிற பெயரில் செய்யும் கோமாளி தனங்கள் மத்தியில் தன் துறை சார்ந்த இடங்களில் அமைச்சர் அருண் ராஜ் செய்யும் ஆய்வு பணிகள் மக்கள் மத்தியில் பாராட்டும் படியாக உள்ளது.

விஜய் குட் புக்கில் இரண்டாவது இடத்தில் அமைச்சர் ஆதவா அர்ஜுனா இடம் பெற்றுள்ளதாகவும், குறிப்பாக தற்பொழுது தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக தரப்பு செய்யும் சதி வேலைகளை மிக சாதுர்யமாக கையாண்டு , அத்துணை சதிகளையும் முறியடித்து திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார் ஆதவா அர்ஜுனா, மேலும் முதல்வர் விஜய்க்கு மிக பெரிய பலமே ஆதவா அர்ஜுனா தான் என்று சொல்லும் வகையில் உள்ளது ஆதவா அர்ஜுனா செயல்பாடுகள்.

அதற்கு அடுத்தபடியாக அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் , அவரை தொடர்ந்து செங்கோட்டையன் ஆகியோர் முதல்வர் விஜய் குட் புக்கில் இடம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, குறிப்பாக ஒரு சீனியர் தலைவருக்கு உண்டான பண்புடன் செங்கோட்டையன் நடந்து கொள்வது, அவருக்கான தனி மரியாதை எப்போதெல்லாம் முதல்வர் விஜய்யை இவர் சந்திக்கிறாரோ அப்போதெல்லாம் உண்டு என்கிறது முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

அதற்கு அடுத்தபடியாக முதல்வர் விஜய்யின் குட் புக்கில் 5வது இடத்தில் இருப்பது அமைச்சர் வெங்கட்ரமணன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, முதல்வர் விஜய்யின் ஆடிட்டரான அமைச்சர் வெங்கட்ரமனன் அவர் துறை சார்ந்த வேளைகளில் மிக சிறப்பாக செயல்பட்டு வருவது, மேலும் எந்த ஒரு சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்காமல் முதல்வர் விஜய் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உள்ளது அமைச்சர் வெங்கட்ரமணன் செயல்பாடுகள் என கூறப்படுகிறது.

அடுத்ததாக நிதியமைச்சராக உள்ள மரியா வில்சன் அமைச்சராக பொறுப்பேற்றப்பதற்கு முன்பு சில சர்ச்சைகள் அவர் மீது இருந்தாலும் கூட, அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு, எந்த ஓர் சங்கடமும் அவரால் முதல்வர் விஜய்க்கு மற்றும் தவெக அரசுக்கு ஏற்பட்டு விடாமல் மிக கவனமாகவே அமைச்சர் மரியா வில்சன் செயல்பாடுகள் இருப்பதும், இவர் முதல்வர் விஜய்யின் குட் புக்கில் 6 வது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து அடுத்தடுத்து அமைச்சர்கள் விக்னேஷ், டி கே பிரபு, ராஜ்மோகன், சி விஜயலகஷ்மி என விஜய்யின் குட் புக்கில் உள்ள டாப் 10 வரிசையில் இடம் பெற்று இருக்கிறார்கள், இதில் டாஸ்மாக் துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சர் விக்னேஷ் அமைச்சர் என்கிற சிறு தலைக்கனம் கூட இல்லாமல் , அமைச்சராவதற்கு முன்பு எப்படி இருந்தாரோ அதே போன்று தான் கட்சி நிர்வாகி உட்பட அனைவரையும் அணுகி வருவது முதல்வர் விஜய்யை வெகுவாகவே கவர்ந்து இருக்கிறது என கூறப்படுகிறது.

அந்தவகையில் அடுத்து நடைபெற இருக்கும் அமைச்சரவை மாற்றத்திற்கு பின்பு அமைச்சர்களின் வரிசை பட்டியலும் மாறும் என்றும், அதில் முதல்வர் விஜய் குட் புக்கில் இடம்பெற்ற இந்த 10 அமைச்சர்கள், அமைச்சருக்கான வரிசையில் முதல் 10 இடங்களில் இருப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here