திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவருடைய குடும்பத்தாருடன் தற்பொழுது கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூருக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். குறிப்பாக இந்த பயணத்தில் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் உடன் சென்று இருக்கிறார்கள். தன்னுடைய மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோருடன் எதிர்கால அரசியலுக்கு குறித்து கலந்து ஆலோசிப்பதற்காக தான் கர்நாடகா மாநிலத்திற்கு முக ஸ்டாலின் சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்பொழுது சட்டமன்ற உறுப்பினராக கூட இல்லாமல் அரசியலில் தன்னுடைய அடையாளத்தை இழந்து நின்று கொண்டிருக்கும் முக ஸ்டாலின், குறிப்பாக திமுக மட்டும் வெறும் 57 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே ஒரு மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரையும் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் விஜய் ஆட்சி அமைப்பதை தடுக்க வேண்டும் என்றால் அவருக்கு எதிராக ஒரு நடிகரை முன்னிறுத்தலாம்,

அதற்கு ரஜினி தான் சரியான நபர் அதிமுக – திமுக இரண்டு கூட்டணி கட்சிகளும் ஆதரவளித்தால் இது சரிவரும் இதற்காக நான் ரஜினியிடம் பேசுகிறேன் என்று ரஜினியிடமும் அந்த மூத்த பத்திரிக்கையாளர் பேசி இருப்பதாகவே தகவல் கூறுகிறது, ஆனால் எடப்பாடி பழனிச்சாமி என்னை முதல்வராக நியமிச்சால் கூட்டணி அமைக்கலாம் ரஜினிகாந்த் ஆதரவு தரமாட்டேன் என்று தெரிவித்து பின்வாங்கி இருக்கிறார்.
அதேபோன்று இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ரஜினிகாந்த் ஏற்கவில்லை அவர்கள் தாவெகாவிற்கு ஆதரவு கொடுக்க சென்று விட்டனர். அந்த வகையில் ரஜினிகாந்தை முதல்வராக்கும் திட்டம் படுதோல்வியை சந்தித்தது அதே நேரத்தில் கனிமொழியும் ரஜினிகாந்தை முதல்வராக்கும் திட்டம் திமுகவிற்கு வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று ஸ்டாலினுக்கு அறிவுறுத்தியும் இருந்திருக்கிறார்.
இப்படி ஒரு சூழலில் திமுகவை மறு சீரமைக்கும் பணியில் இறங்கி இருக்கிறார் மு க ஸ்டாலின். தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களை இதுவரை பாஜக எதிர்ப்பு அதிமுக எதிர்ப்புச் செய்திகளை வெளியிடச் செய்து வந்த திமுக தலைமை குடும்பம், தற்பொழுது தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதைப் போல செய்திகளை வெளியிடச் செய்து வருகிறது.
இப்படி ஒரு சூழலில் கட்சியை மறு சீரமைப்பு தொடர்பாக, சமீபத்தில் கனிமொழி மற்றும் மு க ஸ்டாலின் இருவருக்கும் இடையிலான சந்திப்பு நடந்திருக்கு அப்போது கனிமொழி திமுகவை மறு சீரமைப்பு குறித்து பேசும்பொழுது, அண்ணா உங்களுக்கும் வயதாகி விட்டது, என்னை செயல் தலைவராக நியமித்து விடுங்கள், எப்படி அப்பா தலைவராக இருந்த போது நீங்கள் செயல் தலைவராக செயல்பட்டீர்களோ, அதே போன்று நீங்க தலைவராக அடுத்து உங்களுடைய வெற்றிக்கு நான் ஒரு செயல் தலைவராக செயல்படுவேன் என்று கனிமொழி தெரிவித்திருக்கிறார்.
மேலும் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களும் கூட என்னை தொடர்பு கொண்டு இதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்னைத்தான் உங்களிடம் பேசவும் சொன்னார்கள் என்று கனிமொழி அவருடைய அண்ணன் முக ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கிறார், இந்த விவகாரம் மு க ஸ்டாலின் குடும்பத்தில் மிக பூதாரமாக வெடிக்க,
உடனே செயல் தலைவராக உதயநிதி ஸ்டாலினை நியமிப்பது தான் சரியாக இருக்கும் கனிமொழி நியமித்தால் எதிர்காலத்தில் கட்சி கனிமொழி கைக்கு சென்று விடும் என்று தெரிவித்திருக்கிறார்கள் முக ஸ்டாலின் குடும்பத்தினர், இப்படி ஒரு சூழலில் தான் உடனே அவசர அவசரமாக தன்னுடைய குடும்பத்துடன் அரசியல் எதிர்காலம் குறித்தும் திமுக எதிர்காலம் குறித்து தீர்க்கமான முடிவு எடுக்க முக ஸ்டாலின் கர்நாடகா சென்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

