1000 கோடி வரை பேரம்… 6 மாதத்தில் ஆட்சியை கவிழ்ப்பு… கசிந்தது திமுக – அதிமுக போடும் மாஸ்டர் பிளான்…

0
Follow on Google News

சமிபதியில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசி தவெக அரசுக்கு எதிராக செயல்பட்டதாக சிலர் கைது செய்யப்பட்டு திமுகவின் பிளான் A தோல்வியை தழுவியதை தொடர்ந்து தற்பொழுது பிளான் B யை திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கையில் எடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தனி மெஜாரிட்டி இல்லாமல் கூட்டணி கட்சி துணையுடன் ஆட்சி அமைத்துள்ள தவெக கைவசம் தற்பொழுது 107 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.

ஆகையால் தவெக கைவசம் இருக்கும் 107 சட்டமன்ற உறுப்பினர்களில் குறைந்தது 10 தவெக எம் எல் ஏக்கலையாவது ராஜினாமா செய்ய வைப்பதற்கான வேளையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து செய்து வருவதாகவும், இந்த செயலுக்காக சுமார் 1000 கோடி வரை வாரி இறைக்க திமுக – அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தயாராகவே இருப்பதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன் பழனிச்சாமி மற்றும் உதயநிதி ஆகிய இருவருக்கும் நல்ல நெருக்கம் தற்போது ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் தற்பொழுது வரை 234 சட்டசபை தொகுதிகளில் 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளது, மேலும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் குறைந்தது 10 பேர் ராஜினாமா செய்ய வைத்தால், மொத்தம் காலியாக உள்ள 17 தொகுதிகள் போக 217 தொகுதிகளில் 109 தொகுதிகள் காண்பிக்கும் கட்சியே ஆட்சியை அமைக்க வாய்ப்புள்ளது.

அந்த வகையில் திமுக கைவசம் இருக்கும் 59 சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக கைவசம் இருக்கும் 41 சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் பாமக, தேமுதிக ஆகிய எம் EL ஏக்கள், மேலும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக அமைச்சரவையில் இடம்பெறாமல் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் கட்சிகளிடம் திமுக பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதில் பாஜக கைவசம் இருக்கும் ஒரு எம் எல் ஏ ஆதரவை பெற்றால், கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக பக்கம் வராது என்பதால் பாஜக கைவசம் இருக்கும் 1 எம் எல் ஏ ஆதரவை திமுக தரப்பு விரும்பவில்லை என கூறப்படுகிறது. அந்த வகையில் பிளான் பி படி அடுத்த 6 மாதத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேரை ராஜினாமா செய்ய வைத்து, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து திமுக ஆட்சியை கவிழ்த்து ஆட்சியை பிடிக்க திமுக – அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் பக்காவா ஸ்கெட்ச் போட்டு வேலை செய்ய தொடங்கி இருக்கிறது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

10 தவெக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யவைத்து விட்டால் தவெக கைவசம் வெறும் 97 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருப்பார்கள் யார் 109 சட்டமன்ற உறுப்பினர்களுடம் மெஜாரிட்டியை நிரூபிக்கிறார்களோ அவர்கள் ஆட்சி அமைக்கலாம், அந்த வகையில் முதல்வர் பதவியை மட்டும் திமுக ஏற்று கொண்டு அமைச்சர் பதவியை அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்து விடுகிறோம் என சிறிய கட்சிகளிடம் திரைமறைவில் பேசி வருவதாக கூறப்படுகிறது.

அடுத்து ஆட்சி அமைத்த பின்பு காலியாக உள்ள 17 தொகுதிகளில் இடைதேர்தல் நடத்தி அதில் 10 தொகுதிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து ஆட்சியை கூட்டணி கட்சி துணையுடன் ஆட்சியை முழுமை செய்யலாம் என திமுக – அதிமுக இரண்டு கட்சிகளும் திட்டமிட்டு வேலை செய்ய தொடங்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த சதியை முறியடிக்க தவெக வும் அலர்ட்டாக இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here