நடந்து முடிந்த சட்டபை தேர்தலுக்கு பின்பு நடந்த ஆட்சி மாற்றத்திற்கு பின்பு பல காட்சிகளில் அரசியல் மாற்றமும் அரங்கேறி வருகிறது. இதில் சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு மேல் இருந்த அதிமுக அட்ரஸ் இல்லாமல் போச்சு, இனி அந்த கட்சியை பற்றி பேசி நேரம் விரயம் செய்ய வேண்டாம் என மக்களை கடந்து செல்கிறார்கள், ஆட்சியை இழந்து திமுக கட்சியை பலப்படுத்த அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.
அது தான் தற்பொழுது திமுகவுக்கு பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது, அதாவது திமுகவின் சில நடவடிக்கைகள் அந்த கட்சிக்கே BACK FIRE ஆகி கொண்டிருப்பது தான் திமுகவை மேலும் பரிதாபத்துக்கு தள்ளி கொண்டிருக்கிறது. திமுகவில் பல பேச்சாற்றல் கொண்ட ஆளுமை மிக்க தலைவர்கள் இருக்கு, மக்களால் வெறுக்கப்பட்ட ஜூலிக்கு திமுக கொடுத்த முக்கியத்துவம் திமுக தலைவர் முக ஸ்டாலினையே கோபம் அடைய செய்திருக்கிறது என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.

குறிப்பாக திமுகவில் அ ராஜா போன்ற நபர்கள் ஆளும் தவெக அரசுக்கு எதிராகவும், முதல்வர் விஜய்க்கு எதிராகவும் பேசி வருவது, ஓரளவுக்கு திமுகவுக்கு கைகொடுத்து வருகிறது, இதே போன்று தான் தவெக அரசுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று திமுகவினர் கூட பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்க, மறுப்பக்கம் GENZ DMK என்கிற பெயரில் பிக் பாஸ் ஜூலி போன்ற நபர்களை தவெக அரசுக்கு எதிராக திமுக களம் இறங்கியது, அவர்களுக்கு அது BACK FIRE திமுகவினரே இதை நிறுத்த சொல்லுங்க எங்களால் வெளியில் தலை காட்ட முடியவில்லை என்று சொல்லும் அளவுக்கு சென்று விட்டது.
இந்நிலையில் ஜூலியின் திமுக ஆதரவு மற்றும் தவெக எதிர்ப்பு நடவடிக்கை பாரம்பரியமிக்க இரு இயக்கத்தை கேலி கூத்தாக இருந்து வருவது பற்றிய தகவல் திமுக தலைவர் முக ஸ்டாலின் கவனத்துக்கு சென்று இருக்கிறது. இது குறித்து சமீபத்தில் அறிவாலயத்தில் முக ஸ்டாலின் திமுக முக்கிய புள்ளிகளிடம் பேசி இருக்கிறார். ஒன்று கட்சியை தோல்வியில் இருந்து மீட்டெடுப்பதற்கான ஆக்கப்பூர்வமான வேலையை செய்ய வேண்டும்.
அதை தவிர்த்து ஜூலி மாதிரி ஆட்கள் வந்து தான் நம்ம கட்சியை தூக்கி நிறுத்த வேண்டும் என்கிற அவல நிலைக்கா நாம் சென்று விட்டோம், இதற்கு முன்பு திமுக ஆதரவு யூ டுயூப் சேனல் வைத்து திமுகவுக்கு ஆதரவாகவும், நம் எதிரிகளை ட்ரோல் செய்தும் வந்தோம் அதையே தொடருவோம், மக்களால் வெறுக்க கூடிய ஜூலி போன்ற நபர்களை திமுகவின் அடையாளமாக முன்னிறுத்துவது அது மக்களுக்கு திமுக மீது கோபம் தான் ஏற்படுத்தும்.
எதை செய்தாலும் சரியாக செய்யுங்கள், இனிமேல் திமுகவின் எந்த நிகழ்ச்சியிலும் ஜூலி தென்பட கூடாது, முதலில் திமுகவினர் ஜூலி போன்றவர்களை ஊக்கப்படுத்தும் வேலையை இதோடு நிறுத்துங்க என கறாராக பேசிய முக ஸ்டாலின், முதலில் மக்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்றவர்களை GENZ DMK இணைந்து வேலை செய்து, ஜூலி மாதிரி ஆட்களை வெளியேறுங்கள் என்றாராம் முக ஸ்டாலின்.
இதனை தொடர்ந்து தான் அறிவாலயம் தரப்பில் இருந்து ஜூலிக்கு இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது என்றும், மேலும் அடுத்தடுத்து திமுக சார்பில் நடந்து நிகழ்வுகளில் ஜூலி உள்ளே தப்பி தவறி கூட வந்து காரியத்தை கெடுத்து விட கூடாது என்பதில் நிகழ்ச்சி ஏற்பாட்டர்களுக்கு உத்தரவு பறந்து இருக்கிறது என்கிறது அறிவாலயம் வட்டாரங்கள். இதனால் தான் ஜூலி சமீப காலமாக திமுக நிகழ்வுகளில் தென்படவில்லை என கூறப்படுகிறது.

