உதயநிதி முதல்வர்…. எடப்பாடி மகன் துணை முதல்வர் … பாஷ்யம் வீட்டில் நடந்த ரகசிய சந்திப்பு…

0
Follow on Google News

திமுகவை எதிர்த்து, குறிப்பாக கருணாநிதிக்கு எதிராக எம் ஜி ஆர் ரால் தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக, எம் ஜி ஆர் மறைவுக்கு பின்பு அதிமுக தலைமை பொறுப்புக்கு வந்த ஜெயலலிதா இறுதி வரை சமரசமே இல்லாமல் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்தவர். குறிப்பாக திமுகவினருடன் எதாவது ஒரு அதிமுகவினர் தொடர்பு வைத்து இருந்தது தெரியவந்தால் உடனே பதவி பறிக்கப்படும் என்பது ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை அதிமுகவின் எழுதப்படாத விதியாக இருந்தது.

இதனாலே திமுகவினர் உறவினராக இருந்தால் கூட அவர்களின் சுப நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தனர் அதிமுகவினர். ஆனால் எதற்காக அதிமுக தொடங்கப்பட்டது என்கிற வரலாற்றை கேலி கூத்தாகும் வகையில் அரங்கேறி வருகிறது எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நகர்வுகள், அந்த அளவுக்கு பதவி வெறி பிடித்து எந்த எல்லைக்கு செல்ல தயாராகி விட்டாரா எடப்பாடி என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.

நான் இறந்த பிறக்கும் 100 ஆண்டுகள் இந்த இயக்கம் இருக்கும் என்று சூளுரைத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாத எடப்பாடி தலைமையிலான அதிமுக, தொடர்ந்து 11 தோல்விகளை சந்தித்து ஜெயலலிதா மறைந்த அடுத்த 10 வருடத்திற்குள் அதிமுகவின் சகாப்தம் முடிந்துவிட்டது என்று சொல்லும் வகையில் பரிதாபத்தில் இருக்கிறது அதிமுக.

91 முதல் 96 வரை முதல்வராக இருந்த ஜெயலலிதா 96 தேர்தலில் மிக மோசமான தோல்வியை அதிமுக சந்திக்கிறது, அப்போது அதிமுக பொதுச் செயலாளரான ஜெயலலிதா இந்த தோல்விக்கு நான் தான் பொறுப்பு என பகிரங்கமாக தோல்விக்கு பொறுப்பேற்று கொண்ட ஜெயலலிதா, “ஒரு குடும்பம் மோசமான ஆட்சிக்கு காரணம்” என்று அதிமுகவின் தொண்டர்கள் கூறியதில் உண்மை உள்ளது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என தன்னை சுற்றி இருந்த சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறேன் என்று சசிகலா தவிர்த்து அவருடைய குடும்ப உறுப்பினர்களை ஓரம் கட்டினார்,

குறிப்பாக 96 தோல்விக்கு பொறுப்பேற்று கொண்ட ஜெயலலிதாவின் ஆளுமையையும், தலைமை பண்பையும், பெருந்தன்மையையும் எடப்பாடிக்கு ஏன் வரவில்லை என்பதே அதிமுக தொடர்களின் கேள்வியாக உள்ளது.2026 சட்டப்பேரவை தேர்தலில், மிக மோசமான தோல்வியை அதிமுக சந்தித்திருக்கிறது. இந்த தோல்விக்கு தன்னை தவிர மற்ற எல்லாரும் பொறுப்பு என ஒவொருவராக கை நீட்டி கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

குறிப்பாக அதிமுகவை தொடங்கிய எம் ஜி ஆர் மற்றும் அதன் பின்பு அதிமுகவை வழிநடத்திய ஜெயலலிதா ஆகிய இருவருக்குமே குடும்ப வாரிசுகள் கிடையாது, ஏன் தங்கள் ரத்த சொந்தங்கள் யாரையும் அரசியல் உள்ளே தலை காட்ட விடவில்லை, அதனாலே அந்த இரன்டு தலைவர்களும் மறைந்தும் மக்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு குடும்பம் தான் இன்றைய அதிமுக பவர் சென்டர் ஆக உள்ளனர். அதிமுகவில் எல்லா முடிவுகளையும் எடுப்பது எடப்பாடி மகன் மிதுன் மட்டுமே. மிதுன் சொல்வதுதான் அதிமுகவில் வேதவாக்கு. மிதுன் தான் அதிமுகவை பொருத்தவரை கடவுள். மிதுன் பேச்சை அவர் தந்தை எடப்பாடி பழனிச்சாமியே மீற மாட்டார் என்கிற நிலை தான் உள்ளது.

தொண்டர்களால் உருவான கட்சியான அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் உருவாவது சரியா ? என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில் தன் மகன் மிதுன் துணை முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக, திமுகவோடு கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி உதயநிதியை “பாஷ்யம் அபினேஷ் வீட்டில்” சந்தித்த தகவல் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது, அந்த வகையில் மகன் துணை முதல்வர் என்றால் நிச்சயம் உதயநிதியை முதல்வராக ஏற்று கொண்டு இருப்பார் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here