அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர் தங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து வருவது இதற்கு முன்பு தமிழக அரசியலில் எப்போதும் இல்லாத வகையில் அரங்கேறி வரும் அரசியல் நகர்வுகளாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் தேர்தல் முடிந்த பின்பு எஸ் பி வேலுமணிக்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை,
அதனை தொடர்ந்து தொடங்கப்பட்ட ஆபரேஷன் லீமா ரோஸ் குறித்து அரசியல் வட்டாரத்தில் பல தகவல்கள் வட்டமடித்து வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக வெறும் 108 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று தனி பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க தத்தளித்துக் கொண்டிருந்த விஜய் அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சென்று சந்தித்தார்.

அப்படி அவர் ஒரு சில அரசியல் தலைவர்களை விஜய் சந்திக்க செல்வதற்கு முன்பு அந்த அரசியல் அலுவலகத்திற்கு மர்மமான முறையில் சோபா சென்றது பல்வேறு விவாதங்களை எழுப்பியது. இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்த விஜய் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் சந்திப்பதை தவிர்த்து விட்டு எஸ்பி வேலுமணி சி.வி சண்முகம் தலைமையிலான அதிமுக குழுவினரை சந்தித்தார்.
ஆட்சி அமைப்பதற்கு எஸ் பி வேலுமணி மற்றும் சி.வி சண்முகம் தலைமையிலான குழு முன்வந்தபோது இது குறித்து ஆதவர் அர்ஜுனாவுக்கும் எஸ்பி வேலுமணிக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் 35 சட்டமன்ற உறுப்பினர்களை நாங்கள் அழைத்து வந்த ஆதரவு தருகிறோம் என்று எஸ் பி வேலுமணி உறுதி அளித்திருக்கிறார். 32 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் அதிமுகவிலிருந்து வந்தாலே போதும் கட்சி தாவல் சட்டம் செல்லுபடி ஆகாது.
அப்படி இருக்கும் சூழலில் விஜயும் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார். ஆனால் எஸ்பி வேலுமணி தலைமையிலான தரப்பு வெறும் 24 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே அதிமுகவிலே இருந்து தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்க வைத்தனர். குறிப்பாக 32 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு குறைவான எண்ணிக்கையில் தவெகவுக்கு ஆதரவு கொடுத்ததன் மூலம் கட்சி தாவல் சட்டம் அமலுக்கு வந்தால் தவெக ஆட்சிக்கு ஆபத்து ஆகிவிடும் என்பதால் தவெக அமைச்சரவையில் எஸ் பி வேலுமணி தரப்பினருக்கு இடம் கொடுக்கவில்லை.
இப்படி ஒரு சூழலில் போதுமான எம்எல்ஏக்கள் அதிமுக தரப்பில் இருந்து வராத காரணத்தினால் தற்பொழுது தவெக தரப்பிலிருந்து ஆப்ரேஷன் லீமா ரோஸ் தொடங்கி இருப்பதாக குறிப்பிடப்படுகிறது, குறிப்பாக அதிமுகவில் இருக்கும் தவெக ஆதரவு எம்எல்ஏக்களின் பண பலம் இல்லாமல் , அரசியல் பின்புறம் இல்லாத சாமானியர்களை குறிவைத்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் இணைக்கும் வேலைகளை கச்சிதமாக நடந்து வருகிறது.
இதன் பின்னணியில் லீமா ரோஸ் முக்கிய பங்காற்றி வருவதாகவும் இதற்கு ஆபரேஷன் லீமா ரோஸ் என அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தாமாக முன்வந்து தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்திருந்தால் அமைச்சரவையிலும் பங்கு பெற்றிருக்கலாம் கட்சியையும் காப்பாற்றி இருக்கலாம், ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் தவறான முடிவு தற்பொழுது கட்சியும் துண்டாடப்பட்டு இருக்கிறது அமைச்சரவையும் பறிகொடுத்து இருக்கிறார்கள்.

