CM விஜய்யை operate செய்யும் ஜான்… ஜான் எடுப்பதே இறுதியானது… யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி…

0
Follow on Google News

தமிழக அரசியலில் தற்பொழுது அதிகமாக பேசப்பட்ட ஒரு பெயர் என்றால் அது ஜான் ஆரோக்கியசாமி. பொதுமக்களுக்கு அதிகமாக தெரியாதவர் என்றாலும், விஜயின் அரசியல் வெற்றிக்குப் பின்னால் அமைதியாக வேலை பார்த்த முக்கிய மூளையாக அவரை அரசியல் வட்டாரங்கள் பார்க்க தொடங்கியுள்ளன. இதற்கு முன்னாள் 2016-ல் டாகடர் அன்புமணியை முன்னிறுத்தி களம் கண்டது பாமக. அதற்கு பின்னால் இருந்தது ஜான் தான். மாற்றம் முன்னேற்றம் அன்புமணி ஜானின் ஸ்லோகன் தான்.

திருச்சியை சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி, இளம் வயதிலேயே தேர்தல் வியூகம் மற்றும் அரசியல் பிராண்டிங் துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் . இந்தியாவின் பல மாநில அரசியலிலும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது . குறிப்பாக கர்நாடகத்தில் சித்தராமையா அணியுடனும், மகாராஷ்டிராவில் சில முக்கிய கட்சிகளுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் ஜானுக்கு உள்ளது .

தமிழகத்தில் அவர் அதிக கவனம் பெற்றது விஜயின் அரசியல் வருகைக்குப் பிறகுதான். விஜய் அரசியலுக்கு வருவது குறித்து ஆரம்ப கட்ட ஆலோசனைகள் நடந்த காலத்திலிருந்தே ஜான் விஜய் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. தவெக கட்சியின் பெயர் தேர்வு முதல், அரசியல் கோஷங்கள் வரை பல விஷயங்களில் ஜானின் யோசனைகள் இருந்து இருக்கிறது.

ஜான் ஆரோக்கிய சாமி உருவாக்கிய “திமுக ஒரு தீயசக்தி… த வெ க ஒரு தூயசக்தி…” போன்ற மக்கள் மனதில் எளிதாக பதியும் அரசியல் கோஷங்கள் சமூக ஊடகங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த மாதிரியான உணர்ச்சி சார்ந்த அரசியல் அணுகுமுறைகளே விஜயின் அரசியல் பயணத்திற்கு ஆரம்பத்திலேயே பெரிய கவனத்தை உருவாக்கியது.

மற்ற அரசியல்வாதிகளைப் போல தினமும் கருத்து சொல்லாமல், அடிக்கடி வெளியில் வராமல், ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதே ஜானின் திட்டமாக இருந்து இருக்கிறது. அதனால் தான் விஜய் வெளியே வரும் ஒவ்வொரு தருணமும் சமூக ஊடகங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது.

மேலும், விஜயின் ரசிகர் மன்ற அமைப்பு, ஆன்லைன் ஆதரவு வலையமைப்பு, தொகுதி வாரியான செயல்பாடுகள் போன்றவை ஏற்கனவே வலுவாக இருந்ததால், ஜானின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது எளிதாகி விட்டது.

அரசியல் என்பது எப்போதுமே மக்கள் உணர்வுகளை மையமாகக் கொண்டது. ஒரு காலத்தில் எம்ஜிஆர் தனது திரை கவர்ச்சியை அரசியலாக மாற்றினார். அதன் பிறகு பெரிய கூட்டங்கள், பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனநிலையை மாற்றும் அரசியல் நடந்தது. தற்போது அதே அரசியல் முறையை டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி ஜான் பயன்படுத்தி விஜய்யை வெற்றி அடைய செய்து இருக்கிறார்.

சமூக ஊடகங்களை மையமாக வைத்து இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த அரசியல் அணுகுமுறை, தமிழக அரசியலில் புதிய மாதிரியாக பார்க்கப்படுகிறது. விஜயின் ரசிகர் பலம், ஜானின் அரசியல் வியூகம், சமூக ஊடக அணியின் செயல்பாடு — இந்த மூன்றும் சேர்ந்து ஒரு புதிய அரசியல் அலை உருவாக்கி இருக்கிறார் ஜான் ஆரோக்கிய சாமி.

வெளியில் அதிகமாக தெரியாமல் இருந்தாலும், அமைதியாக இருந்து ஒரு பெரிய அரசியல் மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்தவர் என்ற வகையில் ஜான் ஆரோக்கியசாமியின் பெயர் தற்போது தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத இடத்தில் இடம் பெற்று இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here