ED அனுப்பிய கடிதம்… CM விஜய் எடுக்கும் முடிவு…. கூண்டோடு சிறை செல்லும் திமுக மாஜி அமைச்சர்கள்…

0
Follow on Google News

ஒரே வாரத்தில் 2வது முறையாக தவெக அரசுக்கு அமலாக்கதுறை கடிதம் அனுப்பி இருக்கிறது. பணமுறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதி கேட்டுக் அமலாக்க துறை தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது . முன்னதாக செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கேட்டு தமிழகத்தில் ஆளும் தவெக அரசிற்கு அமலாக்க துறை கடிதம் எழுதியிருந்தது.

அமலாக்கத்துறை அனிதா ராதா கிருஷணனை விசாரிக்க வேண்டும் என அனுப்பியுள்ள கடிதத்தில் , அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஏற்கனவே நிலுவையில் உள்ள வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு அதாவது Disproportionate Assets Case மற்றும் அதனுடன் தொடர்புடைய பணமோசடி விவகாரத்தில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் பெருமளவில் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் இந்தச் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னனை முழுமையான மற்றும் விரிவான விசாரணையை மேற்கொள்ளத் தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் அமலாக்க துறை கடிதம் எழுதி உள்ளது. முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்பு அமலாக்க துறை அனுப்பியுள்ள இரண்டாவது கடிதம் இது.

இதற்கு முன்பு செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி தலைமை செயலாளர் சாய் குமாருக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி இருந்தது, அதில் தகுந்த ஆதாரங்கள், ரகசிய விசாரணை குறிப்புகள், புகார் நகல் ஆகியவற்றை உள்ளடக்கிய பெண் டிரைவ் இணைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படும் நிலையில் அமலாக்க துறை செந்தில் பாலாஜியை விசாரணை நடந்த தமிழக அரசிடம் அனுமதி கேட்டிருந்தது.

தற்போது திமுக எம்.எல்.ஏவாக உள்ள செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனுமதி தருமா? அல்லது மீண்டும் கடனதா திமுக அரசுசெந்தில்பாலாஜியை காப்பாற்றியது போன்று காப்பாற்றுமா.? என்பது விரைவில் தெரிய வரும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் அனிதா ராதா கிருஷ்ணன் செந்தில் பாலாஜிக்கு எதிராக மோசடி புகார் குறித்து அமலாக்கத்துறை மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.

இதற்கு பின்னனியில் முதல்வர் விஜய் மனநிலையில் புரிந்து கொண்டு தான் அமலாக்கத்துறை இந்த விவகாரத்தை செய்து இருப்பதாக கூறப்படுகிறது. யாதவ் அதாவது கடந்த திமுக ஆட்சியில் கரூர் சம்பவத்தின் போது செந்தில் பாலாஜி மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருந்தது தவெக தரப்பு, அந்த வகையில் செந்தில் பாலாஜி மீது ஏற்கனவே முதல்வர் விஜய்க்கு கடும் கோபம் இருந்து வருகிறது.

இதை புரிந்து கொண்டு தான், நீங்க அனுமதி மட்டும் கொடுங்க நாங்க மிச்சத்தை பார்த்து கொள்கிறோம் என்கிற நோக்கில் செந்தில் பாலாஜியை விசாரணை நடந்த அனுமதி கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறது அமலாக்க துறை, அதே போன்று சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார் அனிதா ராதாகிருஷ்னன்.

அந்த வகையில் உங்களை விமர்சனம் செய்த அனிதா ராதா கிருஷ்னன் மீது பல்வேறு ஊழல் ஆதாரம் எங்கள் கையில் உள்ளது, ஆகையால் நீங்கள் அனுமதி மட்டும் கொடுங்க, இனி அனிதா ராதா கிருஷ்னன் வாயே திறக்க மாட்டார் என்கிற தோரணையில் தான் அமலாக்க துறை தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here