நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் விஜய் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதன்படி ஆட்சிக்கு வந்த பின்பு வெள்ளை அறிக்கை விடப்படும், மேலும் மமாஜி திமுக ஊழல் அமைச்சர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்ற பல வாக்குகளை மக்களுக்கு அளித்திருந்தார் விஜய். இதில் விஜய் பேசிய பேச்சில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாஜி திமுக ஊழல் அமைச்சர்கள் கைது செய்யப்படுவார்கள் என்பதுதான்.
இந்நிலையில் தற்பொழுது ஆட்சியின் அரியணையில் அமைந்திருக்கும் முதல்வர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியது போன்று ஆட்சிக்கு வந்தால் மாஜி திமுக ஊழல் அமைச்சர்களை கைது செய்து சிறைக்கு அனுப்புவாரா.? அல்லது கடந்த திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எப்படி ஆட்சிக்கு வந்தால் அதிமுக ஊழல் அமைச்சர்களை சிறைக்கு அனுப்புவோம் என்று பேசிவிட்டு, 5 ஆண்டு திமுக ஆட்சியில் ஒரு மாஜி அதிமுக அமைச்சர்கள் மீது கூட நடவடிக்கை எடுக்கவில்லையோ அதே போன்று கடந்து சென்று விடுவாரா முதல்வர் விஜய் என்கிற கேள்விக்கு தற்பொழுது விடை கிடைத்துள்ளது.

அதாவது மாஜி திமுக முன்னாள் அமைச்சர்கள் செய்த குற்றத்தை தேடி கண்டுபிடிக்க வேண்டிய தேவை தற்போதைய தவெக அரசுக்கு தேவையில்லை என்று சொல்லும் வகையில், அடுத்தடுத்து மாஜி திமுக அமைச்சர் கைது நடவடிக்கைக்கு ஏதுவாக பல ஆதாரங்களை அமலாக்கத்துறையே தமிழக அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தருவதாக சிக்கிய மோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஏற்கனேவே கரூர் சம்பவத்தில் செந்தில் பாலாஜி மீது கடும் கோபத்தில் இருக்கும் முதல்வர் விஜய், செந்தில்பாலாஜி விவகாரத்தில் சமரசம் செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் திமுக மாஜி அமைச்சர்களில் சிறை செல்லும் அமைச்சர் பட்டியலில் முதல் இடத்தில் நிச்சயம் செந்தில் பாலாஜி இருப்பார் என கூறப்படுகிறது. மேலும் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது அமலாக்க துறை கைவசம் நிலுவையில் 3 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்ததும் அடுத்த ஆறு மாதத்திற்கு நாங்கள் எதுவும் பேச மாட்டோம் என்று அறிக்கை வெளியிட்ட மு க ஸ்டாலின்.
ஆனால் தொடர்ந்து முக ஸ்டாலின் மற்றும் அவர் சார்ந்த திமுகவினர் புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் மீது தொடர்ந்து குறைகளை சொல்லி தாக்குதல் நடத்தும் விதத்தில் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுமார் 15 அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை தூசி தட்டி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசு வழக்கு பதிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் சுமார் 15 மாஜி திமுக அமைச்சர்கள் மீது தவெக வழக்கு பதிவு செய்யும் பட்சத்தில் இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை மிக தீவிரமாக கையில் எடுத்து ஜூன் இறுதியில் குறைந்தது ஐந்து திமுக அமைச்சர்களையாவது சிறைக்கு அனுப்ப ஆயத்தமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகிறது.
அந்த வரிசையில் செந்தில் பாலாஜி, பொன்முடி, சேகர் பாபு , கே நேரு உட்பட ஐந்து மாஜி திமுக அமைச்சர்கள் அமலாக்கத்துறை ரேடாரில் உள்ள முதல் கைது வரிசையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகிறது. இப்படி திமுக மாஜி அமைச்சர்கள் மீது விஜய் தலைமையிலான அரசு எஃப் ஐ ஆர் பதிவு செய்தால், அமலாக்கத்துறை அவர்களை சிறைக்கு அனுப்ப ஏதுவாக அமைந்து விடும். மேலும் இந்த கைது நடவடிக்கை மூலம், தவெக அரசு மீது திமுக நடத்தும் தாக்குதலும் குறைந்து விடும் , அதே நேரத்தில் திமுக அரசின் ஊழல் மக்கள் மத்தியில் அம்பலமாகிவிடும் என்பது குறிப்பிடதக்கது.

