காங்கிரசை டீலில் விட்ட முதல்வர் விஜய்… கழட்டி விட முடிவு… அதிமுகவுக்கு முக்கியத்துவம்…

0
Follow on Google News

கேரளாவில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்று அம் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. கேரளா காங்கிரஸ் கட்சியின் வி டி சதீசன் பதவி ஏற்கும் விழாவில் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொள்வார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் கேரளாவிற்கு வரும் தமிழக முதல்வர் விஜய் காண பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்த மாநில அரசும் செய்து வந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் கடைசி நேரத்தில் தமிழக முதல்வர் விஜய் கேரளாவில் நடைபெறும் காங்கிரஸ் அரசின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்கின்ற தகவல் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தமிழக முதல்வர் விஜய் ஏன் கேரளாவில் காங்கிரஸ் முதல்வர் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்கின்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.

குறிப்பாக தமிழக வெற்றி கழகம் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பெரும்பான்மையின்றி தவித்துக் கொண்டிருந்தது. அப்படி ஒரு சூழலில் மாற்று கட்சிகளிடம் ஆதரவு பெறுவதர்க்கு தவெக முயற்சிகளில் ஈடுபட்ட போது, காங்கிரஸ் தரப்பிலிருந்து ஆதரவு கேட்பதற்கு முன்பே தாமாக முன்வந்து தங்களுடைய ஆதரவை காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்திற்கு தந்தார்கள்.

காங்கிரஸ் தவெக வுக்கு ஆதரவு தந்தாலும் கூட ஆட்சி அமைக்காத சூழல்தான் தவெக வுக்கு நிலவியது. இப்படி ஒரு சூழலில் தேர்தலுக்கு முன்பு ஆட்சியில் பங்கு தருகிறோம் அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என்று விஜய் காங்கிரஸ் கட்சி வருகையை எதிர்பார்த்து பலமுறை அழைப்பு விடுத்தும் காங்கிரஸ் கட்சி விஜய்யை டீலில் விட்டுவிட்டு திமுக உடன் கூட்டணி அமைத்தது.

ஆனால் தற்பொழுது தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் சூழலில் அமைச்சர் பதவி கிடைக்கும் என திமுகவை டீலில் விட்டு தவெகவுக்கு ஆதரவை தானாக முன் வந்து காங்கிரஸ் கொடுத்துள்ளது. இந்நிலையில் மற்ற இரண்டு கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி ஆதரவுடன் தாவேக் சட்டமன்றத்தில் தனி பெரும்பான்மையை நிரூபித்து காட்டி இருக்கிறது .

ஆனால் தொடர்ந்து ஐந்து வருடம் ஆட்சியை நடத்த வேண்டும் என்றால் கம்யூனிஸ்ட் விசிக காங்கிரஸ் போன்ற சிறு சிறு கட்சிகளை வைத்துக்கொண்டு இழுத்து ஓட்ட முடியாது என முடிவு செய்த தவெக தலைமை அதிமுக ஆதரவை பெற முன் வந்தது, அந்த வகையில் எஸ் பி வேலுமணி மற்றும் சி வி சண்முகம் தலைமையிலான பெரும்பாலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க முன் வந்து இருக்கிறார்கள்.

ஆனால் அதிமுகவின் சுமார் 25க்கு மேற்பட்ட எம் எல் ஏ ஒரு தரப்பு உள்ளே வந்தால் வெறும் 5 எம் எல் ஏ மட்டுமே வைத்து இதுற்கும் காங்கிரஸ் டம்மியாகி விடும் என எண்ணி, தவெக உடன் அதிமுக உள்ளே வருவதை தவிர்க்க காங்கிரஸ் வலியுறுதியாகவும், ஆனால் தவெக தலைமை அதை கருத்தில் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இப்படி ஒரு சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் அமைச்சர் தருகிறோம் ஆனால் எதிர்பார்த்த இலாக்கா கொடுக்க முடியாது, அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றால் ஆதரவை விளக்கி கொள்ளட்டும் என முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாகவும், அதே நேரத்தில் அதிமுகவில் இருந்து வரும் எஸ் பி வேலுமணி மற்றும் சி வி சண்முகம் ஆகியோர் தலைமையிலான தரப்புக்கு முதல்வர் விஜய் முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் காங்கிரஸ் கட்சிக்கு ரெம்ப முக்கிய துவம் கொடுத்து தூக்கி விட்டால், அவர்கள் எதிர்காலத்தில் அதிக சீட் கேட்பது போன்ற பல நெருக்கடிகளை கொடுத்து தவெக கழுத்தை நெருக்க கூடும், வகையில் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு இனி தவெகவை விட்டால் வழியில்லை என்பதால் தான் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்க கூடாது என கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதை முதல்வர் விஜய் தவிர்த்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here