கடந்த 9 வருடங்களாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த விசிக நாடாளுமன்ற தேர்தலில் 2 சீட், சட்டசபை தேர்தலில் 8 தொகுதி என இந்த சொற்ப தொகுதிகளை பெறுவதற்கே அறிவாலயம் வாசலில் பலமுறை ஏறி இறங்கி போராடி பெறவேண்டிய சூழலில் தான் திருமாவளவன் நிலைமை திமுக கூட்டணியில் இருந்த போதே இருந்தது. திருமாவளவன் பரிதாப நிலையை பார்த்து தான் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு ஆட்சியில் பங்கு தருகிறோம் அதிகாரத்தில் பங்கு தருகிறோம் கூட்டணிக்கு வாருங்கள் என விஜய் கூட்டணி கதவை திறந்து வைத்து இருந்தார்.
ஆனால் 8 சீட் கொடுத்தாலும் பரவாயில்லை என திமுக கூட்டணியிலே தொடர்ந்தார் திருமாவளவன், தேர்தல் முடிந்த பின்பு வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வென்ற விசிக வை கூட்டணிக்குள் கொண்டு வந்து அமைச்சரவையிலும் இடம் கொடுத்து அழகு பார்த்தார் முதல்வர் விஜய். ஆனால் அமைச்சரவையில் இடம்பெற்ற பின்பு திருமாவளவன் தரப்பில் இருந்து தொடர்ந்து தவெக அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக அதிகாரிகள் மாற்றம், என பல அரசின் விவகாரகளில் திருமாவளவன் தலையீடு இருப்பதாகவும், இதை முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவா அர்ஜுனா விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் தவெக ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பதற்கு முன்பு தங்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு இரண்டு வாரிய தலைவர் பொறுப்பு வேண்டும் என திருமாவளவன் அமைச்சர் ஆதாவா அர்ஜுனிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்பொழுது விசிகவுக்கு கொடுத்துள்ள சமூக நீதி அமைச்சர் பொறுப்பு வேண்டாம், போக்குவரத்து துறை வேண்டும் ஆகையால் இலாகாவை மாற்றி கொடுங்க என்றும் திருமா தரப்பில் இருந்து தவெக அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் விசிக தரப்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் திருமாவளவன் போட்டியிட வேண்டும், வெற்றி பெற்று துணை முதலைவராக வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வலுத்து வருகிறது.
இதனால் தொடர்ந்து தவெக தரப்பில் கடும் கோபம் எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவா அர்ஜுன் முதல்வர் விஜய்யிடம் கலந்து ஆலோசித்து இருக்கிறார். இதன் பின்பு விசிக தரப்பிடம் ஆதவா அர்ஜுனா ரெம்ப காரராகவே பேசி இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சரவையில் இலாக்கா மாற்றி தரமுடியாது , இரண்டு வாரிய தலைவரெல்லாம் கொடுக்க முடியாது.
ஒரே வாரிய தலைவர் தான் கொடுக்க முடியும், அந்த ஒரு வாரிய தலைவர் பொறுப்பும் கூட விசிக்காவில் நாங்கள் தேர்வு செய்யும் நபருக்கு தான் கிடைக்கும் என்றும், மேலும் இடைதேர்தலில் அணைத்து தொகுதிகளிலும் தவெக வேட்பாளர் தான் போட்டியிடுவார்கள், கூட்டணி கட்சிகளுக்கு சீட் இல்லை, மேலும் விசிக உடனே திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டு, இனி தவெக அரசுக்கு எதிராக பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் விசிக தரப்பிடம் தெரிவித்த அமைச்சர் ஆதவா அர்ஜுனன்,
மேலும் இஷ்டம் இருந்தால் கூட்டணியில் இருங்க, இல்லை என்றால் தாராளமாக கூட்டணியை விட்டு வெளியேறி கொள்ளலாம் என்று விசிக தரப்பிடம் காரராகவே அமைச்சர் ஆதவா அர்ஜுன் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்தால் எப்படி பட்ட பின்விளைவுகள் ஏற்படும் என்பதை தற்பொழுது புரிந்து கொண்ட தவெக தலைமை.
தனி மெஜாரிடியில் ஆட்சியை தொடர்ந்தால் மட்டுமே சுதந்திரமாக செயல்பட முடியும் என முழுக்க முழுக்க இடைதேர்தலில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறது தவெக. இதுவரை அதிமுகவில் இருந்து 7 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்திருக்கும் நிலையில், இன்னும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெக வில் இணையலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

