செந்தில்பாலாஜியை லாக் செய்த CM விஜய்… அணைத்து ஏர்போர்ட்ல் லுக் அவுட் நோட்டிஸ்… கப்பல் மூலம் தப்பி தலைமறைவு…

0
Follow on Google News

தவெக ஆட்சியை கவிழ்க, தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசியதாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட செந்தில்பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் அசோக்குமார் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள், தலைமறைவாக இருக்கும் இருவரும் எங்கே என சல்லடை போட்டு ஒரு பக்கம் போலீசார் தேடி கொண்டிருக்கையில்.

மறுபக்கம் செந்தில்பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மனை கரூர் அருகே உள்ள ராமேஸ்வரம் பட்டியில் இருக்கும் அவரது பூர்வீக வீட்டிற்கு திருவல்லிக்கேணி தனிப்படை காவல்துறை சென்றனர். அப்போது செந்தில் பாலாஜியின் பெற்றோரான வேலுசாமி மற்றும் பழனியம்மாள் ஆகியோரிடம் சம்மனை வழங்கி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்மன் நேரில் வழக்கப்பட்டதை தொடர்ந்து செந்தில்பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் அசோக் குமார் ஆகியோர் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராக்குவார்களா என்கிற பரபரப்பு நீடித்த நிலையில், இருவரும் ஆஜராகவில்லை. அதே நேரத்தில் இருவரும் ஆஜராகமாட்டார்கள் என்பது பலரால் ஏற்கனவே கணிக்கப்பட்டது தான் , காரணம் ஆஜரானால் கைது செய்யப்படுவார்கள் என்பது இருவருக்கும் நன்கு தெரியும்.

இந்நிலையில் சமிபதியில் முன்னாள் அமைச்சர் ஏ வ வேலு லஞ்ச ஒழிப்பு துறை அனுப்பிய சம்மனுக்கு நேரில் ஆஜராகாமல் தப்பி சிங்கப்பூர் மருத்துவமனையில் பதுக்கியது போன்று செந்தில்பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் தப்பி வெளிநாடு சென்று விட கூடாது என்பதில் மிக கவனமாக தமிழக உளவு துறையை அலாட் செய்து இருந்தார் முதல்வர் விஜய்.

மேலும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வி. அசோக் குமார் ஆகியோருக்கு எதிராகச் சென்னை மாநகரக் காவல் துறை ‘லுக் அவுட் நோட்டீஸ்’ எனப்படும் தேடப்படும் குற்றவாளிகளுக்கான சுற்றறிக்கையை வெளியிட்டது. இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர்கள் இருவரும் நாட்டை விட்டுத் தப்பியோட முயன்றால் உடனடியாகச் சென்னை காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு குடியுரிமை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

மேலும் ஏற்கனவே அமலாக்க துறை வழக்கு செந்தில்பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் அசோக் குமார் மீது நிலுவையில் இருக்கும் நிலையில், ஏற்கனவே அமலாக்க துறை தரப்பிலும் செந்தில்பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் அசோக் குமார் இருவரும் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது, தற்பொழுது மாநில அரசும் அவர்கள் இருவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது.

இந்நிலையில் செந்தில்பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் அசோக் குமார் ஆகிய இருவரும் ஓடவும் முடியாது , ஒழியவும் முடியாது என்கிற வகையில் முதல்வர் விஜய் லாக் செய்துள்ளதை தொடர்ந்து, இருவரும் கடல் மார்க்கமாக தான் தப்பி தலைமறைவாக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது, அந்த வகையில் கடல் மார்க்கமாக தப்பி தனி தீவுகளில் இருவரும் தலைமறைவாக இருக்க கூடும் என்கிற சந்தேகம் ஒரு பக்கம் வலுத்து வருகிறது.

அந்த வகையில் கடல் மார்க்கமாக தப்பி தலைமறைவாகி விட்டாரா செந்தில்பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் அசோக் குமார், அல்லது திமுக முக்கிய புள்ளிகளின் பண்ணை வீடுகளில் தலைமறைவாக உள்ளார்களா என மிக தீவிரமாக போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here