திமுகவில் புதியதாக GEN Z DMK என்கிற பெயரில் நடக்கும் கூத்து உங்களுக்கு எதிரிகள் வெளியில் வேண்டாம் நீங்களே உங்கள் தலையில் மண்ணை அள்ளி போட்டு கொள்கிறீர்கள் என்று சொல்வது போன்று அமைத்துள்ளது திமுகவின் நிலைமை, குறிப்பாக தமிழக மக்களால் வெறுக்கப்பட்ட ஒருவரான ஜூலியை திமுக முன்னிறுத்தி வருவது, எங்களுக்கு இனி வேலை மிச்சம் என்கிறார்கள் தவெக வினர்.
திமுக கவுன்சிலர்கள், திமுக சட்டமன்ற வேட்பாளர்களாக போட்டியிட பலரும் சமூக வலைத்தளத்தில் பிரபலமாக தமிழக முழுவது உள்ளனர் அவர்களை தேர்வு செய்து இளம் தலைமுறைகளை திமுக உள்ளே கொண்டு வருவதை விட்டுவிட்டு ஜூலி போன்ற நபர்களை திமுக போராட்ட களத்தில் முன்னிறுத்துவதை தமிழக மக்கள் மட்டுமில்லை , திமுகவினரே பலரும் ஆதரிக்கவில்லை. குறிப்பாக திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் இருப்பவர்கள் கூட ஜூலியின் செயல்பாடுகளால் திமுகவை வெறுக்க தொடங்கி வருவதை பார்க்க முடிகிறது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக அடைந்த படு தோல்வியில் இருந்து பாடத்தை கற்று கொண்டு, தங்கள் தவறுகளை திருத்தி கொண்டு செயல்பட வேண்டும். ஆனால் திமுக தோல்விக்கு காரணம் இன்ஸ்டாகிராம் தான் என்கிற பழியை தூக்கி போட்டு, தவெக இன்ஸ்டாகிராம் மூலமாக தான் வெற்றி பெற்றார்கள் , அதனால் இன்ஸ்டாவில் பாலோர்ஸ் அதிகம் உள்ள நபர்களை தேர்வு செய்து தவெக அரசுக்கு எதிராக பேசாவிட்டால் திமுகவுக்கு சாதகமான சூழல் உருவாகும் என திமுக பிக்பாஸ் ஜூலி போன்றவர்களை முன்னிருந்து செய்யும் அரசியல், மேலும் திமுகவுக்கு சரிவை தான் ஏற்படுத்தி வருகிறது.
திமுகவில் ஆக்கபூர்வமாக செயல்பட கூடிய மக்களை ஈர்க்கும் வகையில் பேச கூடிய, காலத்தில் வேலை செய்யக்கூடிய பலரும் உள்ளனர், உதாரணத்திற்கு மதுரையில் 79 வார்டு கவுன்சிலராக உள்ள லக்ஷிகா வேலுமணி, திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கிருத்திகா தக்கபாண்டியன், முன்னாள் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் மனைவி ஜனனி, இப்படி பலரும் இளைய சமுதாயத்தினர் மத்தியில் நமதிப்பை பெற்று இருக்கிறார்கள்.
இப்படி பட்டவர்களை திமுகவில் முன்னிறுத்தி அடுத்தகட்டதுக்கு திமுகவை எடுத்து செல்வதை விட்டுவிட்டு, மக்களால் வெறுக்க கூடிய பிக் பாஸ் ஜூலியை திமுக முன்னிறுத்துவது திமுக மீது இருக்கும் மக்களின் கோபம் இன்னும் அதிகரித்து வருகிறதே தவிர அது திமுகவுக்கு ஆதரவாக வாய்ப்பில்லை, அந்த வகையில் தன்னை ஒரு திமுக உடன் பிறப்பாக காட்டி கொண்டு பிக் பாஸ் ஜூலி பேசி வீடியோ வெளியிட வெளியிட அது திமுகவுக்கு மேலும் பின்னடைவை தான் ஏற்படுத்தும் என்பது நிசர்சனம்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் புகுந்து கோஷமிட்ட புகழ் அடைந்த ஜூலிக்கு, வீர தமிழச்சி என்றெல்லாம் சில்லறையை சிதறவிட்ட தமிழக இளைஞர்கள், பிக் பாஸ் சீசன் ஒன்றில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல்வரத்திலே, இதுக்கா சில்லைறையை சிதறவிட்டோம் என்று தமிழக இளைஞர்கள் வருத்தப்படும் வகையில் ஜூலியின் முகத்திரை பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற ஒரே வாரத்தில் கிழிந்தது.
பிக் பாஸ் மூலம் ஜூலி பிரபலமாக அறியப்பட்டாலும் கூட அவரால் சின்ன திரை, வெள்ளி திரை என எதிலும் ஜொலிக்க முடியவில்லை இதற்கு முக்கிய காரணம் ஜூலி டிவியில் தோன்றினாலே மக்கள் வெறுத்து வேறு சேனலை மாற்றும் அளவுக்கு தமிழக மக்களுக்கு கோபம் ஏற்பட்டது. அதன் பின்பு யார் இவருக்கு வாய்ப்பு கொடுப்பார், இப்படியான சூழலில் தற்பொழுது அரசியல் பிரவேசம் எடுத்து தன்னுடைய இருப்பை தக்க வைத்து கொண்டிருக்கிறார் ஜூலி.
ஜூலி திமுகவுக்கு ஆதரவாக பேசி தன்னுடைய இருப்பை காட்டி கொள்ள அவருக்கு உதவுமே தவிர, திமுகவுக்கு துளி அளவும் லாபம் இல்லை அது திமுகவுக்கு பின்னடைவு தான் என்கிற அரசியல் வட்டாரங்கள். அந்த ஜூலி யின் திமுக ஆதரவு நடவடிக்கை திமுகவை நாசம் செய்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுமா திமுக.

