சொந்த பணத்தில் நலத்திட்டம் … தினமும் 5 ஆயிரம் மக்களுக்கு உணவு… வாழும் காமராஜராக உருவெடுத்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்…

0
Follow on Google News

புதுசேரியில் உள்ள காமராஜர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற மிக குறுகிய காலத்திலே, வாழும் காமராஜர் என்கிற நற்பெயரை பெற்று இருக்கிறார் அந்த தொகுதி எம் எல் ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். அரசியல் என்பது தொழில் இல்லை அது மக்களுக்கான சேவை என்பதை, பல சீனியர் அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்று கொடுக்கும் விதத்தில் தன்னுடைய சொந்த பணத்தில் காமராஜர் தொகுதி மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களை செய்து வருகிறார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்.

உப்பிட்ட தமிழ்மண்ணை நான் மறக்க மாட்டேன், என சினிமாவில் வரும் வசனத்துக்கு ஏற்ப தன்னுடைய சொந்த பூமியான ராமநாதபுரம் மக்கள் பலன் அடையும் விதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து மதுரை எல்லை வரையிலான வாய்களை தன்னுடைய சொந்த பணம் 18 கோடி ரூபாய் செலவில் தூர்வாரி கொடுத்துள்ளார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்.

மேலும் தற்பொழுது அவர் எம் எல் ஏ வாக இருந்தாலும் கூட அரசு நிதியை எதிர்பார்க்காமல், தனக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து மக்களும் பயனடையும் வகையில் காமராஜர் தொகுதியில் தினசரி சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு சைவ மற்றும் அசைவ சாப்பாடுகளை அன்னதானமாக வழங்கி வருகிறார் காமராஜர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் , லட்சிய ஜனநாயக கட்சி தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்.

நாடு வளர்ச்சி அடைந்தாலும் கூட கஷ்ட படுகிற மக்கள் கஷ்டப்பட்டு கொண்டுதானே இருக்கிறார்கள், அவர்கள் கஷ்டம் போக்க தான் தான் அரசியலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் , வெளிநாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்ளும் போது, அங்கே இருக்கும் மக்கள் பொருளாதார ரீதிதியாக அணைத்து தரப்பு மக்களுக்கு உயர்ந்து இருக்கும் நிலையில் , தமிழகம் , புதுச்சேரியில் மட்டும் என பொருளாதரத்தில் மக்களுக்கு இந்த ஏற்ற தாழ்வு என்கிற கோபம் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பேச்சுக்களில் பார்க்க முடிகிறது.

இந்த ஏற்ற தாழ்வுகள் களைந்து சிங்கப்பூர் போன்ற புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரத்தையும், மாநிலத்தின் வளர்ச்சியையும் மேம்படுத்தும் வேளைகளில் மிக தீவிரமாக செய்து வரும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் காமராஜரை தொகுதியில் வாய்க்கால் தூர்வாரப்படாததால் சமீபத்தில் பெய்த மழையில் காமராஜ் நகர் தொகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மக்கள் அரசு அதிகாரிகளிடம் முறையிட்ட போது, கடந்த முறை மழைக் காலத்தில் வேலை செய்ததற்கே பணம் கொடுக்கவில்லை. அதனால் எங்களால் செய்ய முடியாது என அரசு அதிகாரிகளே கைவிரித்து விட்டனர், ஆனால் தனக்கு வாக்களித்த மக்களின் துயரை துடைக்கு சொந்த செலவில் அதனை சரி சரி செய்து கொடுத்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டி செயலால் பக்கத்துக்கு தொகுதி மக்கள் இப்படி ஒரு எம் எல் ஏ நமக்கு கிடைக்கவில்லையே என தங்கள் ஏக்கத்தை பகிர்ந்து கொண்டதை பார்க்க முடிந்தது.

குறிப்பாக குஜராத் முதல்வராக மோடி இருந்த போது எப்படி இந்தியா முழுவதும் குஜராத்தி வளர்ச்சி குறித்து பேசப்பட்டதோ , அதே போன்று காமராஜர் தொகுதி எம் எல் வாக ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் செய்லபாடுகள் பாண்டிச்சேரி மட்டுமின்றி தமிழக மக்கள் மத்தியிலும் பேசும் பொருளாக மாறி வரும் நிலையில் அடுத்த தேர்தலில் தமிழ்கத்தில் தன்னுடைய லட்சிய ஜனதா கட்சியை களம் இருக்க இருக்கிறார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மக்கள் சேவையும், தொகுதிக்கான அவருடைய வளர்ச்சி பணியையும் ஊர்ந்து கவனித்து வரும் புதுச்சேரி மக்கள், ஒரே தொகுதியில் எம் எல் ஏவாக இருந்து கொண்டு அந்த தொகுதியின் வளர்ச்சிக்கு மட்டுமில்லாமல் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அற்பணிக்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரி மாநிலத்திற்கே முதல்வராக வந்தால் எப்படி இருக்கும் என்கிற பேச்சும் புதுச்சேரி மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளதை பார்க்க முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here